விடுதலைப் புலிகள் அமைப்பில் எஞ்சியிருப்பவர்கலால் ராகுல் கந்திக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது என இந்திய இணையத்தளமொன்ற செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, எஞ்சியிருக்கும் புலிகளால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாம்.
ராகுல் காந்திக்கும், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கம் நாட்டிலேயே உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டல் காரணமாகவே, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது சாலை மார்க்கமாக ராகுல் காந்தி பயணிக்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர்களை அதிகம் பயன்படுத்தினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிடமிருந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிக மிரட்டல் உள்ளதாம்.