ஈரான் சென்ற ஞாயிற்றுக்கிழமை புதிய ஏவுகணை ஒன்றைப் பரீட் சித்தது. இந்த ஏவுகணை குறுந்தூர எல்லைகளைச் சென்றடைந்து குறித்த இலக்குகளைத் தாக்கும் திறனுடையது. ஈரான் தொலைக்காட்சிகள் ஏவுகணை பரீட்சிக்கப்படுவதை ஒளிபரப் பின. சர்வதேச அறிவுரைகளை ஏற்கத் தயாரெனத் தெரிவித்துள்ள ஈரான் யுரேனியம் செறிவூட்டல்களை மின்சாரத் தேவைகளுக்காகச் செய்வதாக கூறுகின்றது.
அண்மையில் ஈரான் தனது இரண்டாவது அணு உலையைப் பார்வையிட சர்வதேச அணு முகவர் அமைப்பின் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது