28

28

காணாமல் போன பதினேழாயிரம் பேரில் 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

காணாமல் போன பதினேழாயிரம் பேரில் 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

 

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “காணாமல் போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்றாயிரத்து 742 பேர் படையினர் மற்றும் காவல்துறையினர் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆறாயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

2000 ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000 ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலே 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன ஏழாயிரத்து 406 பேரில் ஆறாயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது. நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம், அவை விரைவில் வெளிவரும். அதேவேளை இரண்டாயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர், 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபாரிசை பெற்றுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு நான்காயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !

சாவகச்சேரியில் பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !

நேற்றைய தினம் மார்ச் 27 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணநாதன் தலைமையில் நடைபெற்ற சாவகச்சேரி பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பெரியளவிலான முரண்பாடுகள் இன்றி சுமூகமாக நடைபெற்று முடிந்தது. அவ்வப்போது எம்பி இளங்குமரனுக்கும் எம்பி அர்ச்சுனாவுக்கும் முட்டிக் கொண்டாலும் இருவரும் நகைச்சுவையோடு ஆக்கபூர்வமாக கூட்டத்தை நடத்தி முடித்தனர். எம்பி அர்ச்சுனா இராமநாதன் எப்பவும் போல மூச்சுக்கு முன்னூறுதரம் நான் வைத்தியர் நீ பில் போடுகிறனி என மற்றவர்களின் தொழிலை தரம்தாழ்த்தி கதைத்தார். எம்பி இளங்குமரனும் உடனடியாக துடுக்காக பதில் கொடுத்துக் கொண்டே இருந்தார். சில இடங்களில் எம்பி இளங்குமரன் வம்புக்கு அலைகிறவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்படி எம்பி இளங்குமரனும் எம்பி அர்ச்சுனாவும் வாயாடிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டியும் ஏற்பட்டது.

எம்பி இளங்குமரன் கருணாந்தன் தலைமை ஏற்று நடத்திய முதலாவது கூட்டம் சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற முக்கியமான தீர்மானத்துடன் முடிவடைந்துள்ளது. 60 கிராம சேவகர் அலுவலர் பிரிவை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு சாவகச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ,, சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக “ பிரிக்க கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உட்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தனர்.

எம்பி அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலையை பிரச்சினைகளை முன்னிறுத்தியே மக்கள் மத்தியில் பிரபல்யமானார். அந்தவகையில் சாவகச்சேரிப் பிரதேசத்திலேயே அவருக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்து அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அதற்கேற்ப நேற்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு மக்களின் கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான கோரிக்கைகளை சாவகச்சேரி பதில் வைத்தியசாலைப் பணிப்பாளர் ரஜீவ் கோபாலமூர்த்தி முன்வைத்த போது, அர்ச்சுனா தனது வழமையான குதர்க்க கேள்விகளை தவிர்த்துக் கொண்டு பொறுப்போடு நடந்து கொண்டார்.

வைத்தியர் ரஜீவ் கோபால மூர்த்தியின் நிர்வாகத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை தூய்மையாக உள்ளதாகவும் சிறப்பாக இயங்குவதாகவும் பாராட்டினார். அதேநேரம் எம்பி இளங்குமரனும் மகப்பேறு மருத்துவர் உள்ளாரா? , மகப்பேறு பிரிவு இயங்குகிறதா?, சத்திர சிகிச்சைப்பிரிவு இயங்குகிறதா? அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளார்களா? என உருப்படியான கேள்விகளைக் கேட்டு மக்களுக்கும் அறியும்படியாக தகவல்களைப் பெற்றுக் கொடுத்தார். ஒருவகையில் சாவகச்சேரி வைத்தியசாலை ஓரளவு சீராக இயங்க வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும் காரணம் என சாவகச்சேரி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டிய எம்பி இராமநாதன் அர்ச்சுனா, சில வாக்குறுதிகளையும் கொடுத்தார்.

மேலும் நேற்றைய சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அப்பிரதேச வீதி அபிவிருத்தி, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுப்பு, சாவகச்சேரி சந்தைத் தொகுதி கடைகள் குத்தகை விவகாரம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தனியார் காணிகள் கையகப்படுத்தப்பட்டு விற்கப்படும் விவகாரம் எனப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

IBC கந்தையா பாஸ்கரனின் “றீச்சா” பண்ணைக்கு ஏக்கர் கணக்கில் வந்த காணிகளின் பின்னணி தொடர்பிலும் நிலவும் சர்ச்சையும் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தமிழர் எஸ்.கே. ரி. நாதன் கிளிநொச்சியில் முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் நடத்துகிற போர்வையில் விடுதலைப் புலிகளின் பராமரிப்பில் பாவணையில் இருந்த பெருந்தொகையான ஏக்கர் நிலங்களை ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவில் கையகப்படுத்தியிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சட்டவிரோதமாக மக்கள் காணிகள் அபகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமானதாகும்.