March

March

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

 

வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாகவும் எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மார்ச் 4 பாராளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பா உ ரஜீவன் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணையை நேற்று கொண்டு வருவதை முன்மொழிவது போன்று தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ துரைராசா ரவிகரனின் உரை அமைந்தது.

அங்கு மேலும் பேசிய பா.உ ரவிகரன், போதையால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றது. இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார் பா உ துரைராசா ரவிகரன்.

இதற்கிடையே முல்லைத்தீவில் பள்ளி மாணவி கொண்டு சென்ற நீரை அருந்திய பள்ளி மாணவிகள் வாந்தி எடுத்து நோய்வாய்ப்பட்ட சம்பவம் மார்ச் 4ம் திகதி நடைபெற்றுள்ளது. இதனை விசாரிப்பதை விடுத்து மாணவி கசிப்பு கொண்டுவந்துவிட்டார் என்று எண்ணி ஆசிரியர் பள்ளி மாணவியைத் அடித்துள்ளார். தன்னுடைய மகளைத் தாக்கிய ஆசிரியரை அம்மாணவியின் தந்தை போய்த் தாக்கியுள்ளார். இப்பொதுழுது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் ! 

: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் !

பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீது பாய்ந்தார் அமைச்சர் சந்திரசேகர். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நேற்று மார்ச் 5இல் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அமைச்சர் சந்திரசேகர் பொறுமையை இழந்து மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பா உ அர்ச்சுனா எழுந்து குறுக்கிட்டு குறுக்கிட்டு கத்தியதைத் தொடர்ந்தே அமைச்சர் சந்திரசேகர் கொதித்தெழுந்தார்.

வடக்கில் போதைப்பொருட்கள் மிக முக்கியமான பிரச்சினையாகி பல்வேறு சமூகப் பிறள்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு சமூகக் கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றது. இது பற்றி இதுவரை மௌனமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு வந்ததும் அது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தன்னுடைய தனிநபர் பிரேரணையில் பா உ ரஜீவன் போதைப் பொருட்களே வன்முறைகளுக்கும் வாள் வெட்டுகளுக்கும் இட்டுச்செல்வதைச் சுட்டிக்காட்டினார். சமூகப் பிலதிநிதிககள் அடங்கிய குழக்களை அமைத்து முப்படையினரும் சேர்ந்து இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய பா உ அர்ச்சுனா ஐந்து மாதத்திற்கு முன்னர் ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியே வடக்கில் உள்ள போதைப் பொருட் பாவனைக்கு பொறுப்பு என்ற வகையில் எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை கத்திக் கத்தி முன்வைத்தார். அதன்போது யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையில் குறிப்பிட்ட மருதுவர் கேதீஸ்வரன் மருந்தகம் ஊடாக போதைப்பொருள் விற்பனை செய்ததாகவும், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அவரின் மகன் ஊழலில் ஈடுபட்டதாகவும் வல்வெட்டித்துறையில் வன்முறையில் ஈடுபட்டவர் தேசிய மக்கள் சக்தியில் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அதற்கு தேசிய மக்கள் சக்தியே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி இளம்செழியனை அவர் ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பொறுப்பான பதவிகள் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

யாழ் மாவட்டத்தையும் வடக்கு கிழக்கையும் பாதிக்கின்ற முக்கியமான விவாதத்தில் பா உ அர்ச்சுனா ஆரோக்கியமாக விவாதத்தை நகர்த்தாமல் காழ்ப்புணர்வைக் கொட்டி தன்னுடைய சமூக வலைப்பதிளை கிளு கிளுப்பாக வைத்திருக்கும் வகையில் நடந்து கொண்டமை பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் கிணற்றுத் தவளைபோல் தொடர்ந்தும் ஓரெ விடயத்தை கத்திக் கத்தி வருகின்றாரேயொழிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொள்கின்றார் இல்லை என பாராளுமன்ற விவாதங்களை உன்னிப்பாக பார்ப்பவர்கள் கருதுகின்றனர். மேலும் விவாதங்கள் நடக்கின்ற போது கத்திக் குளறுவது பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகின்ற போது ஆரோக்கியமான விவாதங்களுடாக தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும் தெருப்பொறுக்கி போல் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா நடந்துகொள்கின்றார் என்ற அபிப்பிராயம் ஏனை சமூக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனை கிட்லருக்கு நிகராக உவமித்த சட்டத்தரணி வைஷ்ணவியின் முட்டாள்தனம் !

தலைவர் பிரபாகரனை கிட்லருக்கு நிகராக உவமித்த சட்டத்தரணி வைஷ்ணவியின் முட்டாள்தனம் !
தமிழர்களுடைய தலைவர் பெரியாரா? பிரபாகரனா? என்ற வாதமே குதர்க்கமானது. இருவருமே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த தலைவர்கள். பெரியார் தமிழ்நாட்டில்  சமூகத்தில் நிலவிய மூடத்தனங்களை கண்டித்து சமூக நீதிக்காக போராடிய தலைவர். மற்றையவர் இலங்கையில் தமிழ் மக்கள் தமது மரபுவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தலைவர்.
உலகமெங்கும் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களும் தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என ஏற்றுக் கொள்ளட்டும். இதற்கிடையில் பெரியார் எங்கே வந்தார். பெரியார் ஒரு சமூக நீதிப்போராளி. பிரபாகரன் ஒரு அரசியல்ப் போராளி. சீமான் போன்ற வங்குரோத்து, இனத் தூய்மை பேசும் வலதுசாரி பாசிச அரசியலை முன்னெடுக்கும் ஒரு போலியை அடையாளம் காண முடியாதளவிற்கு இலங்கையிலும் சரி புலத்திலும் சர் ஈழத்தமிழர்கள் அறிவிலிகளாக உள்ளனர் என்பது தான் வேதனை.
சட்டத்தரணி என்று கூறிக் கொள்ளும் வைஷ்ணவி சமீபத்தில் மெய்வெளி எனும் யுரீயூப் தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் அவர் உளறிய கருத்துக்கள் அபத்தம். “சட்டத்தின் முன் சகலரும் சமம்’’ என்ற அடிப்படையை கூட விளங்கிக் கொள்ளாத சட்டத்தரணியாக உள்ளார் என்பதே கவலைக்குரியதே.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறோ, உலக வரலாறோ சரியாகத் தெரியாத ஒரு சட்டத்தரணியாக வைஷ்ணவி விளங்குகிறார். ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி உளறியதை விட ஜேர்மனியையும் கிட்லரையும் பற்றி உதிர்த்த கருத்துக்கள் மூடத்தனத்தின் உச்சம். கிட்லர் கொலகோஸ்ட் என்றழைக்கப்படும் 11 இலட்சம் யுதர்களை இனப்படுகொலை செய்த கொலையாளி. அவர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான  ரோமா மற்றும் சிந்தி (ஜிப்ஸிக்கள்) என அழைக்கப்படும் நாடோடி மக்கள், தன்னுடைய சொந்த இனமான ஜேர்மனிய இனத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆயிரக்கணக்கான போர்க்கைதிகள் என பலரையும் படுகொலை செய்த ஒரு சர்வாதிகாரி. கிட்லரை இன விடுதலைப் போராளி என தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டு பேசும் சட்டத்தரணி வைஷ்ணவி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் புறந்தள்ளப்பட வேண்டிய நபர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக கருத்துரைக்கும் மற்றும் வக்காலத்து வாங்கும் உரிமையை அந்த அமைப்பு யாரிடமும் கையளிக்க வில்லை. பாலியல் துஸ்பிரயோகி சீமானின் வளத்தளத்தை பின்பற்றும்
சேலை கட்டி, பூவும் பொட்டும் வைத்தால் தான் தமிழ் அடையாளத்தை பேணுவதாக வைஷ்ணவி காட்டிக் கொள்ள முற்பாடுகிறார். ஆடை மற்றும் ஆபரணம் அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் பொதுவெளியில் ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனை கிட்லருக்கு நிகராக ஒப்பிட்டு சட்டத்தரணி பிரச்சாரம் செய்வதை ஈழத்தமிழர்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள்.
ஜேர்மனியர்கள் கிட்லர் என்ற ஒரு சர்வாதிகாரியால் உலக சமுதாயத்தில் தலைகுனிந்து நின்றார்கள். கிட்லரின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கோடிக்காண இழப்பீடுகள் கட்டினார்கள். தங்களுடைய சந்ததியினருக்கு கிட்லரின் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடூரங்களை பாடசாலைகளில் வரலாறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடேல்ப்ஸ் கிட்லர் என்ற பெயரை வைப்பதே தடைசெய்யப்பட்டுள்ளது.
வைஷ்ணவிக்கு கிட்லர் தலைவராக இருக்கும் பெரியாரோ அல்லது பிரபாகரனோ தலைவராக இருக்க முடியாது. வைஷ்ணவி என்ற பெண்மணி ஒரு தொழில் முறை சட்டத்தரணி. ஈழத்தமிழர்களின் பிரதிநிதி இல்லை. அவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்புக்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு உரிமை உண்டு. அதேசமயம் மக்களால் தெரிந்தெடுக்கப்படாத ஒரு நபர் ஒட்டுமொத்த இனம் சார்பில் தன்னைத்தானே பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு கருத்துக்களை முன்வைக்க முடியாது.
விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு பெரியார் மற்றும் திராவிடம் குறித்த சொன்ன கருத்துக்களே இறுதியானவை. ஈழத்திற்கு சீமான் அழைக்கப்பட்ட போது பெரியார் பேரனாக வந்து சென்றார். சீமான் என்ற இயக்குநர் நாம் தமிழர் கட்சியாக பரிணமிக்கும் வரை கறுப்புச் சட்டை பெரியார் பேரனாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியும். சீமான் முப்பாட்டன் முருக பக்தனாக அவதாரம் எடுத்த போது தேசியத் தலைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. ஆகவே வைஷ்ணவி சீமானை கூட தனது ஆதர்ஸ கதாநாயகனாக தலைவராக வரித்துக் கொள்ளட்டும்.
பெரியார் தலைவரா இல்லையா என சீமானுக்கு தேர்தலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிய வைப்பார்கள். இறுதியாக நடந்த ஈரோடு தேர்தலில் சீமான் கட்டுப்பணம் கூட திருப்ப எடுக்கவில்லை . குறைந்தபட்சம் வைஷ்ணவிக்கு தேர்தல் புரிந்தால் நல்லது.

போர்க்குற்ற விசாரணையை புதிய அரசும் நிராகரிப்பு – எம்.ஏ சுமந்திரன்

போர்க்குற்ற விசாரணையை புதிய அரசும் நிராகரிப்பு – எம்.ஏ சுமந்திரன்

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். உண்மைகளை மூடி மறைக்க வேண்டும் என்ற தோரணையிலேயே தற்போதைய அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிக்கனமாக பயணிக்கும் என்.பி.பியினர் – அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சரோஜினி !

சிக்கனமாக பயணிக்கும் என்.பி.பியினர் – அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சரோஜினி !

ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW) 90 வது அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார். அவர் அந்த நிதியை ஜெனீவாவில் செலவு செய்யாமல் அப்படியே திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

 

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்யவும் தவறுகளை திருத்திக்கொள்ளவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள், மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களும் முன்வர வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மகளிர் பேரவை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, “நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நாம் சரியான இடத்தை வந்தடைந்துள்ளோம். பெண்களை பொருளாதாரத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதற்கான தடைகளை படிப்படியாக குறைத்து வருகிறோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பெண்கள் தங்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்கின்ற அதேநேரம் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் பாலர்ண பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்துவருகிறோம்” என்றார்.

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த வீட்டின் மீது திடீர் சுற்றிவளைப்பை நேற்று 4ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதேபகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில்  மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர், களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து  இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.  வாள்வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள வாள்வெட்ட பிரச்சினைகள் பாரிய பேசுபொருளாக மாறியிருந்ததது. மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தி, இது ஒரு ஒழுங்கு பிரச்சினை அல்ல ஆகையால் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான பிரேரணையாக கொண்டு வந்து பேசலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சாணக்கியனுக்கு இது தொடர்பில் உரையாடுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையைில், குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் “நாடாளுமன்ற உறுப்பினருக்கு முக்கியமான கேள்விகளை கேட்பதற்கு இடமுண்டு, அதேபோன்று நான் கட்சி தலைவராகவும் இருக்கின்றேன். ஆகவே, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு பொறுப்பு இருக்கின்றது, நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். அங்கு துண்டு துண்டாக மக்கள் வெட்டப்படுகின்றார்கள். அதை இங்கு கூறாமல் எங்கு சென்று கூற முடியும்?
ஆகவே கிழக்கு மாகாணத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்த வாக்குவாதத்தில் பாராளுமன்ற உரைகள் சிறிது நேரம் தடைப்பட்டது. அப்போது மற்றுமொரு பா உ எழுந்து, முன்னர் ஒருவர் தான் கத்திக்கொண்டிருப்பார், இப்போது இருவராகி விட்டனர் என்ற தொனியில்
சிங்களத்தில் பா உ அர்ச்சுனாவையும் சாணக்கியனையும் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக வட்டுக்கோட்டையில் சிலர் சாதிய வெறியர்களாக காடைத்தனங்களிலும் ஈடுபட்டு வருவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. சாதிய வெறியாட்டங்கள், கொலை போன்ற செயற்பாடுகளிலும் குருவி என்கின்ற சாதியக் குழு ஈடுபட்டுள்ளமை பரவலாக அறியப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எழுக்கவில்லை என்றும் பா உ க்களிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நிகழ்நிலை காப்புச்சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தபோது, நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தேர்தல் காலத்தில் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைவாகவே செயற்படுவோம். நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து உப குழு ஒன்றை அமைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நாங்கள் முழுமையாக பாதுகாப்போம் என்றார்.

இலங்கையில் தினசரி 45 பேர் பலி ! – தீவிரமடையும் மதுபான பாவனை

இலங்கையில் தினசரி 45 பேர் பலி ! – தீவிரமடையும் மதுபான பாவனை

இலங்கையில் மதுபான பாவனை காரணமாக வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு 40 முதல் 45 பேர் உயிரிழக்கின்றனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பிரதிநிதி எம்.நிதர்சனி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2022ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனைக்காக தினமும் 121 கோடி ரூபா செலவிடப்படுகின்றது, 2022 ஆம் ஆண்டில் மதுபான வரி வருமானம் மற்றும் மதுபான பாவனையால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார செலவீனம் 237 பில்லியன் ரூபாவாகும். 2023ஆம் ஆண்டில் மதுபான வரியை 20 வீதத்தால் அதிகரித்தமையால் நாட்டின் மதுபான வரி வருமானம் 11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்ததுடன் மதுபான பாவனைகளும் குறைவடைந்தன.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மதுபானசாலைகள் உள்ளன. மதுபான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 60 கோடி ரூபா வருமானம் மீட்கின்றனர். பாடசாலைகளுக்கிடையே நடைபெறுகின்ற பிக் மெச் விளையாட்டிலிருந்து மாணவர்கள் மதுபானம் அருந்தப் பழகுகின்றனர் எனவும் எம்.நிதர்சனி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் மட்டும் 27 இரகசிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் அண்மையில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் வன்னி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு பாவனையால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கது. இதேவேளை நேற்றையதினம். யாழ். (Jaffna) நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.