11

11

கீழ்த்தரமான வகையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது இளைஞன் – அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் !

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் இரு சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹிச்சிராபுரத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் இரண்டு சிறுவர்களின் வாய்க்குள் தனது ஆணுறுப்பினை வைத்து பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞன் முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் விடயமாக காணப்படுகின்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுவர்கள் மீதான இந்த துஷ்பிரயோகங்கள் பாதுகாப்பற்ற சிறுவர்கள் உலகம் ஒன்று உருவாவதை எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றது. முடியுமானவரை உங்களுடைய வீட்டு சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு – மூவர் கைது !

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“யாழ்ப்பாண மீனவரை இலங்கை கடற்படையே கொலை செய்துள்ளது. சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம்.” – சிவாஜிலிங்கம் காட்டம் !

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் அவர் பயணித்த படகு கவிழ்ந்தமையால் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று(11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மாதகல் சம்மாந்துறையைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்து காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன் குறித்த நபரின் சடலமும் மீட்கப்பட்டது.

மீனவரின் படகுமீது கடற்படையினரின் படகுடன் மோதியே விபத்து நேர்ந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எவ்வாறாயினும் கடற்படையினரின் படகுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென இளவாழை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் , இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்துள்ளது.

இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று. இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு தெரிவித்துள்ளனர்.

மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும்,ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து பார்வையிடவில்லை.

பதில் நீதவானை அமர்த்திவிட்டு இங்கு வர முடியாத நிலையில் நீதித்துறை உள்ளது. எங்களை நாமே ஆளும் ஆட்சி முறை வேண்டும். இந்த கொலையில் யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.