இலங்கையில் இனப்படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்று ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை தெரிவித்துள்ளார். அவர் இனப்படுகொலைகள் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கினார்.
2010
2010
குடும்பஸ்தர்களினால் கைவிடப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளை ரங்கலை பொலிஸாரினால் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெல்தெனிய பொலிஸ் பிரிவிலுள்ள தெல்தெனிய – தங்கபுவ எனும் பிரதேசத்தில் வைத்து இக்குழந்தைகள் மூவரும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று குழந்தைகளும் ஒற்றரை நாட்களாக பசியுடன் இருந்த நிலையிலே பொலிஸார் கண்டெடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3, 5, 8 வயதுகளைக் கொண்டு ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தைகளுமே தமது பெற்றோரினால் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்திய வி.எஸ். இராதாகிருஷ்ணன், இது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான பி.சந்திரசேகரனின் மறைவை அடுத்து அவரின் மனைவி சாந்தி சந்திரசேகரன் தலைமை பதவியை பொறுப்பேற்றார். எனினும், மலையக மக்கள் முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு தற்போது சாந்தி சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செனற் சபையில் நாளை பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆஸியின் கிறீன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சரா ஹன்சன் யங் இப்பிரேரணையை அங்கு சமர்ப்பித்து உரையாற்ற உள்ளார்.
இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்களை அவர் செனற்சபைக்கு சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஐ.நா சபையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று அப்பிரேரணையில் கோருவார். இவரின் இந்நடவடிக்கைக்கு கிறீன் கட்சிக்கான தமிழர்கள் அரசியல் அமைப்பு பேராதரவு வழங்க முன்வந்துள்ளது.
இருபது வருடங்கள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் சனாதிபதி ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகம் நேற்று அமெரிக்க தலைநகர் வோஷிங்டன் வந்து சேர்ந்துள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
வோஷிங்டன் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய திசநாயகத்தை அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்களும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதியும் வரவேற்றனர். ஊடகவியலாளர் திசநாயகம் மிகுந்த இன்முகத்துடன் காணப்பட்டதாகவும் தன் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்ததாகவும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார்.
திசநாயகம் அமெரிக்கா வந்தது வரவேற்கக்கூடிய ஒரு விடயம் என்றும் 30 வருடங்களாக இலங்கையில் நீடித்த போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட ஊடகத்துறையினர் மீதான அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதை அரசு இதன் மூலம் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஜோயல் சைமன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழக உளவுப்பிரிவுத் தலைவர் சிரஞ்சீவி என்ற ராஜூ சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (ராஜூ) இவர், தமிழகத்தில் இருந்து உளவுத் தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வந்தார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கட்சியின் தலைவராக வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்தன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியை எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதைபொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார் என்றும் அதனால் இத்தலைவர் பதவியை இராஜினாமா செய்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவி ஆகிய இரு முக்கிய பணிகளையும் முன்னெடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொது இணக்கப்பாட்டிற்க வரவேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். June 18 2010 இலங்கை தனியார் வானொலி ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை கைவிட்டு பொது உடன்பாட்டிற்கு வர வேண்டியது இக்காலகட்டத்தில் முக்கியமானதெனவும் அவர் வலியுறுத்தினார். இதற்காக தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்காகவே தான் இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி எதனையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவரெனவும், அவர் தமிழ் மக்களுக்கு தீரவு ஒன்றை வழங்கக் கூடிய பலத்துடன் இருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும், ஒரே எடுப்பில் அதிகாரப் பகிர்வை நோக்கி செல்வது கடினம் எனவும் திரு. வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசிஅகாசி June 18 2010 கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். அவரோடு அமைச்சர் பசில் ராஜபக்சவும் சென்றுள்ளார். இன்று இவர்களின் வருகையை முன்னிட்டு கிளிநொச்சிப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆறு நாள் விஜயமாக திரு. யசூசி அகாசி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.