August

August

சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் இலங்கையும் மெக்ஸிக்கோவும் -எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவிப்பு

reporters000.jpgஇலங் கையும் மெக்ஸிக்கோவும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமற் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான 26 ஆவது சர்வதேச தினம் நினைவு கூரப்படுவதையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடக்கணக்காக காணாமற் போனோர் தொடர்பாக எதுவும் அறியப்படவில்லை. அதே போல் கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச முகவர்களால் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது உள்ளூர் பயங்கர குற்றவாளிகள் தமது வெற்றிகளுக்காகக் கடத்துகிறார்களா?

ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்களாலேயே அநேக காணாமற் போன சம்பவங்கள் நிகழ்ந்துளளன என்பது தெளிவாகியுள்ளது. காணாமற்போன ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்காக நாம் கவலை கொள்கிறோம். அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். நிச்சயமற்ற நிலையில், அவர்களின் விதி என்ன என்பது புரியாத சூழ்நிலையில் அவர்கள் காத்து

இருக்கிறார்கள் என்று சுதந்திர ஊடக உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணாமற் போனோர் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பொறுப்பானவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென நாம் வற்புறுத்துகிறோம். பலவந்தமாகக் கடத்தப்படுவோரின் பாதுகாப்புக்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தி சாத்தியமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் கோருகிறோம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மெக்ஸிக்கோவில் 2000 ஆம் ஆண்டு முதல் எட்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக இது விளங்குகிறது.

மொரிசியோ எஸ்ட்ராடா சாமோரா எனும் ஊடகவியலாளர் 2008 பெப்ரவரி 12 முதல் காணாமல் போயுள்ளார். வாரப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் 20 நவம்பர் 2006 இல் காணாமல் போயுள்ளார். கைத்தொலைபேசி மூலம் இரவு 7.15 மணிக்கு கிடைத்த அழைப்பொன்றின் பேரில் ஒருவரைச் சந்திக்கச் சென்றவர் மாயமானார். 7.30 மணிக்கு அவரது மகனுக்கு அழைப்பொன்று வந்தது. ஆனால் சில குரல்கள் அதனை தடை செய்யுமாறு கூறுவது அவரது மகனுக்குக் கேட்டது. அதற்கு மேல் எவ்விதத் தகவலும் இல்லை.

2009 ஜனவரியில் சர்வதேச சுதந்திர ஊடக அமைப்பின் குழு இலங்கையின் கடத்தல், காணாமல் போதல் தொடர்பான கலாசாரத்தைக் கண்டனம் செய்தது. ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட 2007 பெப்ரவரி 15 முதல் எவ்விதத் தகவலும் அவரது குடும்பத்தாருக்குத் தெரியவில்லை. இராணுவம் இதில் சம்பந்தப்படவில்லை என மறுத்தது. வடிவேல் நிமலராஜன் இவர் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்தவர். 2007 நவம்பர் 17 முதல் காணாமற் போனார். கடத்தப்பட்டதாக நண்பர்கள் நம்புகிறார்கள்.

ஈரானில் பிரோஸ்தவானி எனும் ஆசிரியர் 1998 ஆகஸ்ட் இறுதியில் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டதாக அறிகுறி இல்லை.

2000 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ஊடகவியலாளர் அக்பர் கான்ஜி மாயமானார். கொலையொன்றில் அமைச்சரின் தொடர்பு குறித்து இவர் எழுதியிருந்தார்.

காம்பிரியாவில் எப்லிமா மன்னே எனும் ஊடகவியலாளர் 2006 ஜூலை 7 முதல் காணாமல் போனார். அன்று முதல் அவர் குறித்த தகவல் இல்லை. ஆபிரிக்கக் கண்டத்தின் எரித்திரியாவில் பல ஊடகவியலாளர்கள் 2001 முதல் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இருப்பிடம் எங்கே என்பது குறித்தோ அவர்களது நிலைமை என்ன என்பது பற்றியோ எதுவித தகவலும் அவர்களது குடும்பத்தாருக்குத் தெரியாது. தலைநகர் அஸ்மாராவில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் “மௌனம்’ சாதிக்கிறார்கள்.

வன்னியிலும் மட்டக்களப்பிலும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

வன்னியிலும் மட்டக்களப்பு- கோரக் கல்வி மடுவிலும் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின்போது 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் 37 மற்றும் 273 ஜொனிகுண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் மீட்டெடுத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

இதேநேரம் வவுனியா, விளானிக்குளம் மற்றும் பிலும்திகுளப் பிரதேசங்களில் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது 864 மிதிவெடிகளையும், 15 கிலோ எடை கொண்ட கிளேமோர் ஒன்று இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளையும் அதற்குரிய இரு மெகஸின்கள், மற்றும் 18 ரவைகளையும் மீட்டெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னிப் பிரதேசங்களிலும் மட்டக்களப்பிலும் மீட்கப்பட்ட ஆயுதங்களினதும், வெடிபொருட்களினதும் விபரம் தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், வன்னியில் விஸ்வமடு, வெள்ளமுல்லி வாய்க்கால், புதுக்குடியிருப்பு, உடையார் கட்டுக்குளம் மற்றும் மட்டக்களப்பு கோரக்கல்லிமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இத்தேடுதல்களின்போது 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் 37, கைக்குண்டுகள் 14, ஆர். பி. ஜி-6, ரி-56 ரக துப்பாக்கிகள்-3, அதற்குரிய மெகஸின் -1, ரவைகள் 15, அருள்குண்டுகள்-2, பொறிவெடி -1, உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

இலங்கையர்களுக்கு விஸா வழங்கும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – பிரித்தானியா தெரிவிப்பு

british_flag.jpgஇலங்கை யர்களுக்கு விஸா வழங்கப்படும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விஸா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக தகவல்களை அவர்கள் வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பரவலான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையைச் சேர்ந்த உயர் அரச அதிகாரிகள் சிலருக்கு அண்மைக்காலமாக பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் விஸா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் – சீமான்

siman0000.jpgஇலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார்.  தூத்துக்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், நம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரானது. ராஜபக்ஷ தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார்.

இதில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு 3 இலட்சம் தமிழர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதனை வலியுறுத்தி மதுரையில் கடந்த ஜுன் 18 இல் ஊர்வலம் நடத்தினோம்.  அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. இதனால் (29ஆம் திகதி நேற்று) தூத்துக் குடியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம்.

உலக நாடுகள் உடனடியாக இலங்கையை நிர்பந்தித்து தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து உலக நாடுகளும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டால் அது மட்டும் இங்கு பிரச்சனையை கிளப்புகிறது. தமிழக மீனவன் கடலில் சுடப்பட்டால் இந்திய மீனவனாக கருதப்படுவதில்லை என்றார்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பு நாளை

tissanayaga000.jpgபயங்கர வாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் திஸ்ஸநாயகம் மொத்தமாக 425 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இன்று 5வது நாளாகும். வெற்றியை நோக்கி இலங்கை அணி

srilanka0000.jpgகொழும் பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று 5வது நாளாகும்.

நேற்றைய தினம் நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 6. விக்கட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியில் இருந்து தப்புவதற்கு நியூஸீலாந்து அணி மேலும் 312 ஓட்டங்கள் பெறவேண்டும்.

SRI LANKA – 1ST INNINGS – 416
NEW ZEALAND – 1ST INNINGS – 234

SRI LANKA – 2ND INNINGS    (overnight 157-2)
T. Dilshan c Guptill b Patel     33
T. Paranavitana c McCullum b Vettori   34
K. Sangakkara c Taylor b Patel   109
M. Jayawardene c Taylor b O’Brien   96
T. Samaraweera lbw b Vettori    25
C. Kapugedera not out    07
Extras (lb1, w2, nb4)     07
Total (for 5 wkts decl)   311

Fall of wickets: 1-56 (Dilshan), 2-89 (Paranavitana), 3-262. (Sangakkara), 4-301 (Samaraweera), 5-311 (Jayawardene).

Bowling: Vettori 24-4-62-2, O’Brien 15.2-1-77-1 (nb3, w1), Martin
  9-0-34-0 (w1), Patel 34-2-122-2, Ryder 3-0-15-0 (nb1).

NEW ZEALAND – 2ND INNINGS
T. McIntosh b Prasad     07
M. Guptill c P. Jayawardene b Herath   28
D. Flynn lbw b Herath     50
R. Taylor c M. Jayawardene b Herath   27
J. Ryder lbw b Herath     38
B. McCullum b Muralitharan    13
J. Oram not out     07
D. Vettori not out     05
Extras (lb6, nb1)     07
Total (for 6 wkts)    182

Fall of wickets: 1-36 (McIntosh), 2-41 (Guptill), 3-97 (Taylor), 4-131
  (Flynn), 5-158 (McCullum), 6-176 (Ryder).

Bowling: Paranavitana 1-0-2-0, Thushara 14-1-39-0 (nb1), Prasad
  7-1-21-1, Herath 21-5-73-4, Muralitharan 12-0-39-1, Dilshan 1-0-2-0.

இனவாத அரசியல் நமது நாட்டுக்கு உகந்ததல்ல – அக்கரைப்பற்றில் ஜனாதிபதி மஹிந்த

000samanthurai.jpgதமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியல் நமது நாட்டிற்கு உகந்ததல்ல. குறுகிய தீர்மானங்களை தவிர்த்து நாட்டை முன்னேற் றக்கூடிய சிறந்த தீர்மானங்களை சிந்தித்து மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்டரங்கில் விமரிசையாக நடைபெற்றன.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சகல இன மதங்களையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதான உரைநிகழ்த்தியதுடன் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா சிறப்புரை நிகழ்த்தினர். மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா விருது வழங்கி கெளரவித்தார். இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

2005 ஆம் ஆண்டு நான் அக்கரைப்பற்றிற்கு வருகை தந்த போது இங்கு வீசிய காற்றைப் பாரமானதாக உணர்ந்தேன். இன்று அது இலகுவாகி சுதந்திரக் காற்று வீசுவதைக் காண முடிகிறது. இந்த நாட்டை உடன்படிக்கை மூலம் துண்டாடிய யுகம் மாறி இந்த நாட்டை எம்மால் மீள ஐக்கியப்படுத்த முடிந்துள்ளது.

தேசிய காங்கிரஸின் மாநாட்டிற்கு இன்று வருகைதந்து இங்குள்ள மக்களை சந்திப்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமடைகின்றேன். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது.

முப்பது வருடகால பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட்டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.

கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகின்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்த காலம் இருந்தது.  இன்று அந்நிலை இல்லை.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இனவாத அரசியல் இந்த நாட்டுக்கு உகந்த தல்ல. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்தும் மக்கள் இந்த நாட்டின் பிள்ளைகளே. நான் முதல் இரண்டாவது, மூன்றாவது என முழுமையாக நேசிப்பது இந்த நாட்டைத்தான். நாட்டு மக்களும் அப்படியே நாட்டை நேசிக்க வேண்டும். எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அது குறுகிய தீர்மானமாக இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் வேண்டாம்.

அமைச்சர் அதாவுல்லா ஒரு சிறந்த தலைவர். உங்கள் தலைவர் அவர் முழு நாட்டிற்கும் சேவை செய்யும் திறன் படைத்த செயல்வீரர். கிழக்கின் உதயம் மூலம் இப்பகுதி அபிவிருத்தி காணப்படுகிறது. உங்கள் எதிர்காலம் ஒளிமயமாவது நிச்சயம். இந்தவேளையில் நாம் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பை நினைவு கூருவது சிறந்தது.

முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதையெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லிம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது. கிழக்கில் தனியான மாகாண சபையொன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.

நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக்குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.

இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்திலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பன்றி காய்ச்சலுக்கு 2100 பேர் பலி

10092009.jpgசர்வதேச அளவில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பலியானோர் தொகை 2110க்கு மேல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் மட்டும் 1,876 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த படியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 139 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். உலகில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தானியங்கி சுனாமி எச்சரிக்கை கோபுர செயற்பாடு பரீட்சிப்பு

tunami.jpgதானியங்கி சுனாமி எச்சரிக்கை கோபுரங்களின் செயற்பாடு குறித்து பரீட்சித்துப் பார்க்கும் நடவ டிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வெவ்வேறு தினங்களில் நடத்தப்படும். குறிப்பிட்ட தினங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைரன் ஒலி எழுப்பப்பட்டு அனர்த்தம் நிலவப் போகிறது என்ற அறிவித்தலும் விடுக்கப்படும்.

பரீட்சார்த்தமாக நடைபெறும் இந்நிகழ்வு குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கிறது.

முன் எச்சரிக்கை பரீட்சார்த்தம், குறிப்பிடப்படும் தினங்களில் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை நடைபெறும்.

களுத்துறை- செப்டம்பர் 01 ஆம் திகதி.
செப்டம்பர் 02 ஆம் திகதி கொழும்பு.
செப்டம்பர்-03 கம்பஹா.
செப்டம்பர் 06- புத்தளம்
செப்டம்பர் 08- திருகோணமலை
செப்டம்பர் 10- மட்டக்களப்பு
செப்டம்பர் 12- அம்பாறை
செப்டம்பர் 15- அம்பாந்தோட்டை
செப்டம்பர் 17- மாத்தறை
செப்டம்பர் 19- காலி

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை சமிக்ஞையாக சைரன் ஒலி எழுப்பப்படும்.

தென்னிந்திய அகதி முகாம்களிலிருந்து 500 தமிழ் குடும்பம் தாயகம் திரும்பின

தென்னிந்தியாவிலுள்ள அகதி முகாம்களிலிருந்து 500 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்களென இலங்கை யின் பிரதி உயர் ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக வெள்ளியன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் மக்கள் நலன்சார் பல்வேறு நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  இலங்கையிலுள்ள சகல மக்கள் மத்தியிலும் அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. இன, மத வேறு பாடின்றி சகல மக்களும் நடத்தப்படுகிறார்களென அவர் செய்தியார்களிடம் சுட்டிக் காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முதலீடு செய்வதற்குரிய சாதகமான சூழ்நிலை உருவாகிவிட்டது. வெளிநாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய முன் வருகின்றன. கடந்த ஜுலை மாதம் மட்டும் 45.2 வீதமான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அகதி முகாம்களிலிருந்த 500 தமிழ்க் குடும் பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியிருக்கிறதென அவர் கூறினார்.