தானியங்கி சுனாமி எச்சரிக்கை கோபுரங்களின் செயற்பாடு குறித்து பரீட்சித்துப் பார்க்கும் நடவ டிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வெவ்வேறு தினங்களில் நடத்தப்படும். குறிப்பிட்ட தினங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைரன் ஒலி எழுப்பப்பட்டு அனர்த்தம் நிலவப் போகிறது என்ற அறிவித்தலும் விடுக்கப்படும்.
பரீட்சார்த்தமாக நடைபெறும் இந்நிகழ்வு குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கிறது.
முன் எச்சரிக்கை பரீட்சார்த்தம், குறிப்பிடப்படும் தினங்களில் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை நடைபெறும்.
களுத்துறை- செப்டம்பர் 01 ஆம் திகதி.
செப்டம்பர் 02 ஆம் திகதி கொழும்பு.
செப்டம்பர்-03 கம்பஹா.
செப்டம்பர் 06- புத்தளம்
செப்டம்பர் 08- திருகோணமலை
செப்டம்பர் 10- மட்டக்களப்பு
செப்டம்பர் 12- அம்பாறை
செப்டம்பர் 15- அம்பாந்தோட்டை
செப்டம்பர் 17- மாத்தறை
செப்டம்பர் 19- காலி
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை சமிக்ஞையாக சைரன் ஒலி எழுப்பப்படும்.