பயங்கர வாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் திஸ்ஸநாயகம் மொத்தமாக 425 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாயா
ஜே.எஸ். திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கிருபா
கருணாவும் பிள்ளையானும் அவர்களின் கொலைகளும் எங்கே,,
திஸ்ஸநாயகத்தின் பேனா மையும் ஈரமும் எங்கே.
நண்பன்
கொலை செய்வது குற்றமல்ல. அது நாட்டுக்குள் மட்டுமே தெரியும். எழுதுவது குற்றம். அது உலகுக்கே அல்லவா தெரியும்? ஊடக சுதந்திரம் சிறைக்குள் முடங்கி விட்டது.