2009

2009

கொலையுடன் தொடர்பென நிரூபித்தால் கட்சியை கலைப்போம் – தே. சு. முன்னணி

ஜே. வி. பி. உறுப்பினரின் கொலையுடன் தேசிய சுதந்திர முன்னணிக்கு தொடர்பு இருப்பதாக ஜே. வி. பி. நிரூபிக்குமானால் தேசிய சுதந்திர முன்னணியை கலைத்து அரசியலிலிருந்து ஒதுங்க தாங்கள் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் உதேசாந்த குணசேகர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் (08) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-

ஜே. வி. பி. உறுப்பினரான நந்தனபாலகேயின் கொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களே இந்தக் கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டி அரசியல் இலாபம் பெற ஜே. வி. பி. முயல்கிறது. ஐ. ம. சு. முன்னணியின் வெற்றியை தடுக்கவும் எம்மை அரசியலில் இருந்து ஒதுக்கவுமே ஜே. வி. பி. சதி செய்கிறது.

தமக்கு கிடைக்க உள்ள பாரிய தோல்வியை தடுக்க ஜே. வி. பி. நரபலி கொடுக்க முயன்று வந்தது. அதன் பலனா கவே நந்தன பாலகே சுடப்பட்டுள்ளார். அவரின் மறைவு தொட ர்பாக எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கொலையுடன் பியசிரி விஜேநாயக்க எம்.பிக்கோ எமது கட்சி மேல் மாகாண வேட்பாளர்களுக்கோ தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவோம். இந்த சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரை கோரியுள்ளோம் என்றார்.

வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை: தா.பா

1102-vaiko.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் நேர்ந்தால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசியிருக்கிறாரே என்று நெய்வேலி வந்த தா.பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர்,  நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 50 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் இனச்சிங்கலைத் தீர்க்கத்ததன் விளைவாக, அது இனப் படுகொலையாக அரசு பயங்கரவாதமாக மாறி இருக்கிறது. இனப் படுகொலைக்கு தீர்வு காணாமல் இந்திய அரசு ராணுவ ஆலோசனை மற்றும் போர் தளவாடங்களைக் கொடுத்து உதவுகிறது. இதனல் இந்தியாவின் பெருமையை பாழடித்து விட்டது மத்திய அரசு என்றார்.

தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடு- லண்டன் ‘கார்டியன்’ பத்திரிகைக்கு ஐ.நா. ஜோன் ஹோம்ஸ் தெரிவிப்பு

sirjohnholmes.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடுகளை நடத்தி வருவதாக எமக்கு தொடர்ச்சியாக அறிக்கைகள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

லண்டனில் வெளியாகும் கார்டியன் எனும் செய்திப் பத்திரிகைக்கு நேற்று முன்தினம் (08) வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புலிகள் தப்பிவரும் சிவிலியன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதுடன் அவர்கள் பயணிக்கும் படகுகளையும் தாக்கியழித்து வருகின்றனர். அங்கிருந்து தப்பிச் செல்ல நினைப்பவர்களை தம்முடன் இணைந்து போர் புரியுமாறு புலிகள் வற்புறுத்துகின்றனர். சிவிலியன்கள் தப்பி வருவதனை புலிகள் விரும்பவில்லையென்பது மாத்திரம் நிச்சயம். அப்படியிருந்தபோதும் பல சிவிலியன்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கிருந்து தப்பி வருகிறார்கள். இது மிகவும் சிக்கலான சூழ்நிலையெனவும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

நான் இலங்கைக்கு செல்வதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை:கலைஞர்

karunanithi.jpgஇலங்கையில் போரை நிறுத்துமாறு கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலையில் இருந்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பேரணி தொடங்கியது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  இப்பேரணி சேப்பாக்கத்தில் முடிந்தது.

பின்னார் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, ’’ ஈழப்பிரச்சனை தொடர்பாக நான் இலங்கைக்கு செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன்.  அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை. அதனாலென்ன..உணர்வால், உள்ளத்தால், ஈழத்தமிழர்களை காண்கிறேன்.  இலங்கை தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருப்பவர்களுக்கு நான் தோழராக இருக்கிறேன்” என்று பேசினார்.

இஸ்லாமிய சஞ்சிகையின் பிரதிகள் கல்முனைப் பகுதியில் எரிப்பு

அல்- ஹஸனாத் மாதாந்த இஸ்லாமிய சஞ்சிகையின் 600 பிரதிகள் கல்முனைப் பகுதியில் இனந் தெரியாத குழுவினரால் அபகரிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத் சஞ்சிகையின் ஏப்ரல் மாத வெளியீடு ‘பல்லின சமூகங்களுக்கு மத்தியில் பண்பாட்டெழுச்சி, எனும் கருப்பொருளில் சிறப்பிதழாக வெளியாகியது. இந்த இதழ்களே அபகரிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

குறித்த சிறப்புப் பிரதிகளை விற்பனை செய்வதற்கென்று அல்ஹஸனாத் தொண்டர்கள் கிழக்கு மாகாணத்திற்குச் சென்றனர். கல்முனை பிரதேசத்தில் சென்று அல்ஹஸனாத் சஞ்சிகையை வீட்டுக்கு வீடாக விற்பனை செய்து கொண்டிருந்த தொண்டர்களிடம் இனந்தெரியாத குழு ஒன்று வந்து அல்ஹஸனாத் சஞ்சிகையை விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறியதுடன், அதனை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளனர்.

அதனைக் கொடுக்க மறுத்த தொண்டர்களை தாக்க முற்பட்ட அந்தக் குழு, விற்பனைக்காக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 600 பிரதிகளை பலவந்தமாக பறித்தெடுத்து தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.

ஈழத்தமிழர் குறித்த கொள்கையை இந்தியா மீளாய்வு செய்ய புலிகள் கோருகின்றனர்

p_nadesan.jpgஇந்தியாவில் ஆட்சியமைக்கப்போகும் புதிய ஆட்சியாளர்கள், ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பான தமது கொள்கையை மீளாய்வு செய்யவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.

ஈழத் தமிழ் உறவுகளுக்காக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சிக்கு தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றும் நடேசன் வரவேற்புத் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் “ஹெட்லைன்ஸ் டுடே” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர்  இதனைத் தெரிவித்துள்ளார். தி.மு.கவினால் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் நிலை தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அ.தி.மு.கவின் ஸ்தாபகரான முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களின் நலன் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் வேட்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கினார்.

ஜெயலலிதா தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளார்.சமீபத்தைய அறிக்கையொன்றில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு குறித்து அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார். இது மிகவும் நம்பிக்கையளிக்கும் விடயம். இந்தியாவின் புதிய அரசு இலங்கை இனப்பிரச்சினை மற்றும் தமிழர்களின் அபிலாஷைகள் குறித்த தனது கொள்கையை புதிய யதார்த்தங்களின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தி.மு.க. தமிழ் மக்களுக்கு  அவசியமான வழிவகைகளை  அளிப்பதற்குத் தவறியுள்ளது.  தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துக்கு எதிராகவும்  அதேவேளை, பட்டினி மற்றும் நோய்க்கு எதிராகவும் போராடுகின்றனர். தி.மு.கவிற்கும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் இது நன்கு தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.இவ்வாறு நடேசன் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார்

ரத்த ஆறு ஓடும் என சொன்னது ஏன்?: வைகோ விளக்கம்

1102-vaiko.jpgசென்னை யில் ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி பொதுச் செயலர் வைகோ, தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நான் சொன்னது, மத்திய அரசை எச்சரிக்கை செய்யத்தான்.

இந்த வாசகத்தை முதல்வர் கருணாநிதி எத்தனையோ முறை கூறியிருக்கிறார். 1965ம் ஆண்டு ஏற்பட்ட நிலையை மறுபடியும் தமிழகத்தில் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதற்காகத் தான் இந்திய அரசை எச்சரித்தேன்.

இப்படியே போனால், இந்திய அரசு மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும். சோவியத் யூனியன் சிதறுண்டு போகுமென, நான் 1990ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்திலே சொன்னேன். சொன்னது போலவே, சோவியத் யூனியனின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி நாடாக சிதறுண்டு போனது.

ம.தி.மு.க., வன்முறை மேல் நம்பிக்கை இல்லாத இயக்கம். எங்கள் கட்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருந்தும், இதுவரை ஒரு சிறிய வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை. நான் பல முறை கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் ஒரு கல்லெறி சம்பவத்தில் கூட ஈடுபட்டதில்லை. இனியும் அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். என்னை கைது செய்யப்போவதாகக் கூறப்படும் வதந்திக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தீர தனி ஈழம் தான் ஒரே தீர்வு என, நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதையே தான் இப்போதும் வலியுறுத்துகிறோம். விடுதலைப் புலிகளை தடை செய்த நாடுகள் கூட, “இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஏழு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தின் சட்டசபையில் இயற்றப்பட்ட இலங்கை போர் நிறுத்த தீர்மானத்தை, மத்திய அரசு குப்பைக் கூடையில் வீசி விட்டது என்றார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு லிபிய தலைவர் கடாபி பாராட்டு

mahi-kadabi.jpgலிபியா வுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதி கேர்ணல் முஅம்மர் அபூ மின்பர் கடாபியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார். இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு லிபியாவில் விசேட அரச தலைவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதற்கமைய, லிபிய நாட்டில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்களை இலங்கையருக்குப் பெற்றுக்கொடுக்க லிபியா முன்வந்துள்ளது.

லிபிய ஜனாதிபதி கடாபியும், பிரதமர் அல் பதாத் அலி அல் மஃமூத்தும் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த வருட இறுதிக்குள் இரு நாடுகளுக்குமிடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், லிபிய சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு கூடுதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. லிபிய ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுப்பதற்கும் மற்றும் வடபகுதி மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துரைத்துள்ளார். இதன் போது, உலகிலேயே கொடிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் இலங்கையின் அனுபவங்களைத் தெரிந்துகொள்ளுவதற்கு லிபிய ஜனாதிபதி ஆர்வம் காட்டினார்.

முழு உலகுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்றிட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்கு அண்மித்துள்ளமை மற்றும் துரிதமான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளமையையிட்டு லிபிய ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்குக் கிடைத்த அனுபவம் முழு உலகுக்கும் ஒரு முன்மாதிரியாகும் என்று தெரிவித்த லிபிய ஜனாதிபதி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளின் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த தனது அரசாங்கம் ஒத்துழைப்புக்களை நல்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் 1976 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த லிபிய ஜனாதிபதி அப்போது ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்படுத்திக் கொண்ட நட்புறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளுவதற்கு ஜனாதிபதியின் இந்த லிபிய விஜயம் வழி வகுத்துள்ளது. அத்துடன், இரு நாடுகளினதும் தேசியக் கொடிகளாலும் மின் விளக்குகளாலும் லிபிய நகரங்களும், வீதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தமை, அரச தலைவர் ஒருவருக்கு வழங்கக் கூடிய ஒரு உயர் கெளரவத்து டன் ஜனாதிபதிக்கும் தூதுக் குழுவினருக்கும் விருந்துபசாரம் அளித்து உபசரித்தமை முக்கிய அம்சமாகும்.

மேலும், சுகாதாரத் துறையில் இலங்கை மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்கும் லிபியாவில் தொழில் வழங்குவதுடன், நிர்மாண மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கூடுதல் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (08) அந்நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். லிபிய பிரதமர் அல் பதாத் அலி அல் மஹ்மூ த்தை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்படும் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தல், தொழில்நுட்பத் துறை மற்றும் நிபுணத்துவ பரிமாற்றம், தொழில்வாண்மையாளர்கள் பரிமாற்றம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. அதுபோல், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகளை இரு நாடுகளுக்குமிடையில் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தவிரவும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கும் இலங்கையில் தொலைத் தொடர்புத் துறை அபிவிருத்திக்கு லிபியாவின் தொழில் நுட்பத்தையும் நிதி உதவியையும் பெற்றுக்கொடுக்கவும் லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, வடக்கு கிழக்குப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் லிபியா இணங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தையில் அவருடன், வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் வெளிவிவகார இணைப்புச் செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்ட உத்தியோகத்தர்களுக்கு 2750 ரூபா சம்பள உயர்வு. புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

மலையகப் பெருந்தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் தோட்டங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் புத்தாண்டு மாதத்திலிருந்து 2750 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் செய்துகொண்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி இந்தச் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்தச் சம்பள உயர்வு அமுல்படுத்தப்படுவதுடன், நிலுவைத் தொகையை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் வழங்குவதெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள இறப்பர், தேயிலை, தென்னந் தோட்டங்களில் கடமையாற்றும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் நன்மையடைவார்கள் என்று இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம் தெரிவித்தார். புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி, தோட்ட உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 2750 ரூபாவாக அதிகரித்தல், வீட்டு வாடகைப் பணத்தை 20 சதவீதத்தால் அதிகரித்தல், வருடாந்த சம்பள உயர்வு இரண்டரை மடங்காக அதிகரித்தல், மரண சகாய நிதி 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 25000 ரூபா அதிகரித்தல், பெருந்தோட்ட உதவி வைத்தியர்களின் இரவு சேவைக்கான விசேட கொடுப்பனவை 25 சத வீதத்தால் அதிகரித்தல், ஒரு தோட்டத்தில் தொழில் புரியும் சேவையாளர் இடமாற்றம் பெற்றாலோ அல்லது சுகயீனமுற்றாலோ அவருக்குப் பதிலாக சேவையாற்றும் சேவையாளருககு தற்பொழுது வழங்கும் 1000/- ரூபாவை 1500/- ரூபாவினால் அதிகரித்தல்.

கடந்த (2008) வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இவ்வருடம் மார்ச் வரையிலான அதிகரிக்கப்பட்ட 2750/- ரூபா சம்பள உயர்வு நிலுவை பணத்தை எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் வழங்குதல் போன்றவற்றுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இக் கூட்டு ஒப்பந்தம் முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் ரவீ பீரிஸ் தலைமையில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் தலைவர் லலித் ஒபேசேக்கரவும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம், பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இது சம்பந்தமாக தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி. இராமசிவம் கருத்து தெரிவிக்கையில், ‘இச் சங்கம் 89 ஆம் ஆண்டுகள் சேவையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இறுதியாக 2004 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தம் தொடர்பான கடந்த ஆறு மாதங்களாக பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோட்ட சேவையாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்தது. இதனையடுத்து இம் மாதம் 2 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது’ என்றார்.

கிழக்கு மா.ச உறுப்பினர் அமீர்தீன் தேசிய காங்கிரஸில் இணைவு

ameer-deen.jpgகிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கலாநிதி வி. அமீர்தீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டுவிலகி தேசிய காங்கிரஸ¤டன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கலாநிதி வி. அமீர்தீன் தெரிவித்தார். இம்மாத முடிவிற்குள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தேசிய காங்கிரஸ¤டன் இணைந்து அக்கட்சியின் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவின் தலைமையின் கீழ் செயற்படப் போவதாகவும் அமீர்தீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போக்கு அண்மைக்காலமாக வித்தியாசப்படுவதாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் விடயத்தில் அசிரத்தை காட்டுவதாலும் அதிலிருந்து விலகுவதற்கு நான் தீர்மானித்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் அக்கட்சிக்கு சவாலாக கிழக்கு மாகாணத்திலும், தேசிய ரீதியிலும் நிதானமாக செயற்படும் தேசிய காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அதாஉல்லாவின் தலைமையின் கீழ் இணைந்து மக்களின் நலனுக்காக உழைக்கவுள்ளேன்.

மக்களை ஏமாற்றி முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர் களுடன் இருப்பதைவிட மக்களின் நலனுக்காகவும் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைக்காக பாடுப ட்டு வரும் அமைச்சர் அதாஉல்லாவின் தலைமை யின் கீழ் ஒன்றுபட்டு செயற்படப் போவதாகவும் கலாநிதி வி. அமீர்தீன் மேலும் தெரிவித்தார்.