இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலையில் இருந்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பேரணி தொடங்கியது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்பேரணி சேப்பாக்கத்தில் முடிந்தது.
பின்னார் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, ’’ ஈழப்பிரச்சனை தொடர்பாக நான் இலங்கைக்கு செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன். அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை. அதனாலென்ன..உணர்வால், உள்ளத்தால், ஈழத்தமிழர்களை காண்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருப்பவர்களுக்கு நான் தோழராக இருக்கிறேன்” என்று பேசினார்.