ரத்த ஆறு ஓடும் என சொன்னது ஏன்?: வைகோ விளக்கம்

1102-vaiko.jpgசென்னை யில் ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி பொதுச் செயலர் வைகோ, தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நான் சொன்னது, மத்திய அரசை எச்சரிக்கை செய்யத்தான்.

இந்த வாசகத்தை முதல்வர் கருணாநிதி எத்தனையோ முறை கூறியிருக்கிறார். 1965ம் ஆண்டு ஏற்பட்ட நிலையை மறுபடியும் தமிழகத்தில் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதற்காகத் தான் இந்திய அரசை எச்சரித்தேன்.

இப்படியே போனால், இந்திய அரசு மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும். சோவியத் யூனியன் சிதறுண்டு போகுமென, நான் 1990ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்திலே சொன்னேன். சொன்னது போலவே, சோவியத் யூனியனின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி நாடாக சிதறுண்டு போனது.

ம.தி.மு.க., வன்முறை மேல் நம்பிக்கை இல்லாத இயக்கம். எங்கள் கட்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருந்தும், இதுவரை ஒரு சிறிய வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை. நான் பல முறை கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் ஒரு கல்லெறி சம்பவத்தில் கூட ஈடுபட்டதில்லை. இனியும் அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். என்னை கைது செய்யப்போவதாகக் கூறப்படும் வதந்திக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தீர தனி ஈழம் தான் ஒரே தீர்வு என, நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதையே தான் இப்போதும் வலியுறுத்துகிறோம். விடுதலைப் புலிகளை தடை செய்த நாடுகள் கூட, “இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஏழு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தின் சட்டசபையில் இயற்றப்பட்ட இலங்கை போர் நிறுத்த தீர்மானத்தை, மத்திய அரசு குப்பைக் கூடையில் வீசி விட்டது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • aasa
    aasa

    ம.தி.மு.க., வன்முறை மேல் நம்பிக்கை இல்லாத இயக்கம்.//

    அப்புறம் ஏன் புலிகளை ஆதரிக்கிறார்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //நான் 1990ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்திலே சொன்னேன். சொன்னது போலவே, சோவியத் யூனியனின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி நாடாக சிதறுண்டு போனது. – வைகோ//

    வைகோ தாங்கள் 1990 இல் அறிக்கை விடுவதற்கு முதலிலேயே அன்றைய சோவியத்யூனியன் அதிபர் கொப்பசேர்வ் முடிவெடுத்து பிரிந்து செல்வதை அறிவித்து விட்டார். அப்படியிருக்க ஏதோ இதை தாங்களே ஊகித்ததாக யாருக்கு உதார் விடுகின்றீர்கள். உப்பிடியே பீலாவிட்டு தாங்கள் அரசியல் நடாத்துவதனால்த் தான், அடையாளமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றீர்கள்.

    Reply
  • Anonymous
    Anonymous

    இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தின் மூலம் அதிகளவு அதிகாரம் பெற்றால் அது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்றும் அதனால்தான் இந்தியஅரசு இலங்கைத்தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இலங்கைஅரசுக்கு உதவுவதாக கூறுகின்றனர்.ஆனால் இலங்கையில் தமிழர்கள் நசுக்கப்படும்போது அழிக்கப்படும்போது அது தமிழ்நாட்டில் எதிரொலிக்கும்.அதன் வெளிப்பாடே”இந்தியா ஒரு தேசமாக இருக்காது “என்ற வைகோ வின் பேச்சு.மற்றும் கருனாநிதி “ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று 77ம் ஆண்டு தன்னை சந்தித்து உதவி கேட்ட தந்தை செல்வா அவர்களிடம் தந்தை பெரியார் கூறினார்” என்று இப்போது குறிப்பிட்டுள்ளார்.இவை எல்லாவற்றையும் விட “தீ” மாணவர்களிடம் மற்றும் இளைஞர்களிடம் பற்றிவிட்டது.எனவே இந்தியா சிதறுவதற்கான கண்ணிவெடி வன்னியில் விதைக்கப்பட்டுள்ளது..தனை இந்தியா நிச்சயம் அனுபவிக்கும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Anonymous என்ன நீங்களும் வைகோ போல பகற்கனவு காணுகின்றீர்களா?? தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களை தேசிய நீரோட்டத்தோடு இணைத்துக் கொண்டு படிப்பிலும் தொழில்வாய்புகளிலும் மேலோங்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் உங்களைப் போன்றவர்களின் இப்படிப் போலியான பரப்புரைகள் ஒன்றும் அவர்கள் மத்தியில் எடுபடப் போவதுமில்லை. இப்படித் தமது அரசியல் இலாபங்களுக்காக போலியான நாடகங்களாடுவதனாலேயே மதிமுக, பாமக போன்ற கட்சிகளும் ஏனைய புலிப்புராணக் கட்சிகளும் இன்றும் உதிரிக் கட்சிகளாகவே தமிழ் நாட்டில் அரசியல் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் நேற்று முளைத்த தேமுதிக இவர்களை முந்திக் கொண்டிருக்கின்றது. வன்னியில் விதைத்த விசவிதை தமிழ் நாட்டில் தளிர்விடாது, இன்று வன்னியையே சுடுகாடாக்கியுள்ளதென்பதை இன்னுமா நீங்கள் உணரவில்லை??

    Reply
  • இளங்கோ
    இளங்கோ

    வைகோ தாங்கள் 1990 இல் அறிக்கை விடுவதற்கு முதலிலேயே அன்றைய சோவியத்யூனியன் அதிபர் கொப்பசேர்வ் முடிவெடுத்து பிரிந்து செல்வதை அறிவித்து விட்டார். அப்படியிருக்க ஏதோ இதை தாங்களே ஊகித்ததாக யாருக்கு உதார் விடுகின்றீர்கள். உப்பிடியே பீலாவிட்டு தாங்கள் அரசியல் நடாத்துவதனால்த் தான், அடையாளமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றீர்கள்.
    அப்படியோ சந்த்திரிக்காவும் சொன்ன மாதிரி கிடக்கு. வைகோ சொன்னவுடம் மட்டும் உங்களுக்கு எப்படீ அரசியல் ஞானம் வருகிறது?

    வன்முறை என்பது தமிழ் மக்கள் மீது இனவாத அரசால் திணிக்கப்பட்ட ஒன்று. தமிழ் மக்கள் பலரால் சாத்வீக போராட்டங்களாக பல காலம் செய்தும் இனவாத சிங்கள அரசால் எள்ளி நகையாடப்பட்டதால் தான் ஆயுதபோராட்டம் உருவானது. அதற்காக டக்கஸ் ஒரு ஆயுத போராளி என்று ஆயுதத்துக்கு களங்கம் ஏற்படுத்தாதிர்கள். டக்ளஸ், சித்தார்த்ட்கன் போன்றோர் மற்றும் கருத்தாளர் போன்றோர் ஏன் இன்னும் 58, 59 ம் படை பற்றி பேசிகிறீர்கள். அப்படி ஒன்று இருந்தால் தானே. இந்திய படையின் பிரசன்னம் நன்றாகே தெரிந்த்து விட்டது வன்னி மக்களூக்கு. சன்னதம் ஒன்று இருக்குது?

    Reply