2009

2009

ஹைதராபாத் வந்து சேர்ந்தது ராஜசேகர ரெட்டி உடல்

02-rajasekara-reddy.jpgஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது. அவருடன் பயணித்த நால்வரின் உடல்களும் கூட ஹைதராபாத் கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று காலை மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரெட்டி உள்ளிட்ட ஐவரின் உடல்களும் கருகிப் போயிருந்தன. இதையடுத்து அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கின. பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஐவரின் உடல்களும் சேகரிக்கப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகலில் கர்னூல் கொண்டு வரப்பட்டன.

கர்னூல் மருத்துவமனையில் ஐந்து உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முதலில் ரெட்டியின் உடலுக்கான பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்தது.

கர்னூல் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் ராஜசேகர ரெட்டியின் உடல் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்கில் ரெட்டியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஏற்றப்பட்டு விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது.

லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை உடல் வைக்கப்படும். ஹைதராபாத்தில் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்தவுடன் ரெட்டியின் உடல் அவரது சொந்த மாவட்டமான கடப்பாவுக்குக் கொண்டு செல்லப்படும்.

அங்குள்ள ரெட்டி பிறந்த ஊரான புலிவெண்டுலுவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். முழு அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆந்திராவில் 7 நாள் அரசு முறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் என சந்தேகிக்கப்படுவோரை தடுத்து வைத்திருப்பது அது ஒரு பயிற்சி முகாமாக அமையக்கூடிய வாய்ப்பு உள்ளது: ரணில்

ranil0111.jpgவவுனியா நலன்புரி முகாமில் தமிழீழ விடுதலைப்புலிகள் 25 ஆயிரம் பேர்வரை இருப்பதாக கூறி ஏனையவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பாமல் வைத்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர மேடை செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் கூற்றுப்படி 9 ஆயிரம் தமிழீழ விடுதலைப்புலிகள் வவுனியா முகாம்களில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என நம்பப்படும் 25 ஆயிரம் பேர் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
 
எனில், அவர்களை வேறு இடம் ஒன்றில் தடுத்து வைத்து புனர்வாழ்வை மேற்கொள்ள முடியும்.
 
சுமார் ஒருலடசத்து 30 ஆயிரம் பேர் நாட்டின் ஏனைய பகுதிகளில் தமது உறவினர்களுடன் வாழ முடியும் என தெரிவித்துள்ளார்கள்.
 
20 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் அரசாங்கம் அதற்கு இடம்கொடுக்காது, தொடர்ந்தும்  முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுவோரை தடுத்து வைத்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் ஒரு பயிற்சி முகாமாக அமையக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

03-reddy222.jpgஆந்திர முதல்வர் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மரணம்  ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் ஒரு நாள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி பள்ளி – கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாத்தறையில் சிங்கள ஊடகவியலாளர்கள் மூவர் கைது

_arrested.jpgஜே.வி.பி. யின் உத்தியோகபூர்வ ஏடான லங்கா செய்திதாளின் மூன்று ஊடகவியலாளர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்  இவர்கள் மாத்தறை தெனியாய என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செனல்-4 வூக்கு எதிராக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை – அமைச்சர் அநுர யாப்பா தகவல்

ExtraJudicialKillingsஇலங்கை யின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலியாகத் தயாரித்து பிரித்தானியாவின் செனல்-4  தொலைக்காட்சி சேவை ஊடாக ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பான எந்த விசாரணைக்கும் முகம்கொடுக்க அரசு தயார் என்றும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

முதல்கட்ட நடவடிக்கையாக இந்த வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவுள்ளோம். அது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.

இதேவேளை, குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என வெளிநாட்டுச் சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக எமது உள்நாட்டுப் பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

பிலியந்தலையில் கடத்தப்பட்ட சிறுவன் நேற்றிரவு பொலிஸாரால் மீட்பு

missingboy1111.jpgபிலியந்த லையில் கடத்தப்பட்ட சிறுவனைப் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆட்டோ சாரதி ஒருவர் கொடுத்த தகவலையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

விளையாடுவதற்குப் பட்டம் ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறி ஆசைகாட்டி மேற்படி சிறுவனை இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பிலியந்தலை இல. ஒன்று சிங்கள கனிஷ்ட பாடசாலையில் கல்வி கற்றுவரும், பெத்தும் மினிந்த எனும் 9 வயது சிறுவனே நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

சம்பவ தினத்தன்று, பிலியந்தலை கனேவத்தை தேவாலயத்தில் பிற்பகல் வேளையில் தனது நண்பர்களோடு பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, தேவாலயத்தில் கூலி வேலை செய்வதற்காக வந்திருந்த இருவர் பட்டம் வாங்கித் தருவதாகக் கூறி சிறுவனை பிலியந்தலை நகரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விளையாடச் சென்ற சிறுவன் மாலையாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சிறுவன் கடத்தப்பட்ட விடயம் வெளியானது.

தொலைக்காட்சிச் செய்தியில் சிறுவனது புகைப்படத்தைப் பார்த்த ஆட்டோ சாரதி ஒருவர், அவரை ஒரு நபருடன் கண்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிறுவனை மீட்டதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

libiya1.jpgலிபியப் புரட்சியின் 40 ஆவது வருட நினைவு வைபவங்களில் கலந்துகொள்வதற்காக லிபியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை நாடு திரும்பினார். லிபியாவின் தலைவர் முஅம்மர் கடாபியின் விசேட அழைப்பின்பேரில் அங்கு சென்ற ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் இடம்பெற்ற படையினரின் அணிவகுப்பில் இலங்கைப் படை வீரர்களும் பங்கு கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னரே லிபியாவுடனான உறவுகள் பலமடைந்தன. லிபியாவுடன் நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களே விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்விழாவில் கலந்துகொண்ட சுமார் 40 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் – பாதுகாப்பு அமைச்சு தகவல்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக மருத்துவபீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் றுஹ{ணு பல்கலைக்கழகத்துடன் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் வைபவம் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பல்கலைக்கழக ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழ உபவேந்தர் மேஜ ஜெனரல் மிலிந்த பீரிஸ்  மற்றும் றுஹ{ணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் திலக் விரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துதெரிவித்த பாதுகாப்பச் செயலாளர், இப்பயிற்ச்சி நெறிக்கு தெரிவு செய்யப்படும் படை அதிகாரிகள் நாட்டுக்கு இராணுவ அதிகாரியாகவும் மருத்துவராகவும் சேவைசெய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனத் தெரிவித்தார். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருக்கும் 25 படை அதிகாரிகளுக்கும் அடிப்படை இராணுவப்பயிற்சி முடிவடைந்ததும் றுஹ{ணு பல்கலைக்கழக மருத்துவபீடத்துடன் இணைக்கப்டுவர். 

வியட்நாம் குடியரசின் 64 தேசிய தின வைபவம்

வியட்நாமிய குடியரசின் 64 தேசிய தின வைபவம் இரத்தினபுரியில் இன்று நடைபெறவுள்ளது.  இரத்தினபுரி நவநகரிலுள்ள சமுர்தி மண்டபத்தில் நடைபெறும் இவ்வைபவத்தில் வியட்நாம் தூதுவர் க்வேன்ஹோன் சோன் விஷேட அதிதியாக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இலங்கை-வியட்நாம் ஒத்துழைப்பு சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ்வைபவத்தில் அமைச்சர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, சாலிந்த திஸாநாயக்கா, டாக்டர் ராஜித சேனாரத்ன,  ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார,  சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அசோக ஜயவர்தன,  சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சுதசிங்க உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்திய அணியின் இலங்கை பயணம்-நீதிபதிகளை மாற்ற கோரிக்கை

indian-cricket-team.jpgஇந்திய அணி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என கோரி தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து வழக்கை வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச்க்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. இலங்கையில் தமிழர்கள் ரத்தம் சிந்தி வரும் நிலையில் இந்திய அணி அங்கு சென்று கிரிக்கெட் விளையாட கூடாது என கோரி மதுரையில் வக்கீல் ஜோயல் பவுல் அந்தோணி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிக்கெட் வாரியத்துக்கு பேக்ஸ் மூலம் நோட்டீஸ் அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைக்கிறேன் என்று அறிவித்தனர்.மனுதாரரின் வக்கீல்கள், சிவில் சட்டமுறை சட்டத்தில் பேக்ஸ் மூலம் அனுப்பும் நோட்டீஸை முறையான நோட்டீஸாக எடுத்து கொள்ளும் வழி வகை இருப்பதாக கூறினார். ஆனால், நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து மனுதாரர் ஜோயல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பேக்ஸ் மூலம் ஒரு மனு அனுப்பினார். அதில், இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கை தற்போது நீதிபதிகள் 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், அதற்குள் இந்த தொடர் முடிந்துவிடும்.

தொடர் வரும் 8ம் தேதி துவங்குகிறது என்பது தெளிவாக தெரிந்த நிலையிலும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்னர் அந்த தொடரில் பங்கேற்க அணியை அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து பேசுவதற்கு கூட இடமில்லை. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போய்விடும்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் மூலம் 7ம் தேதிக்கு முன்பு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.