வவுனியா நலன்புரி முகாமில் தமிழீழ விடுதலைப்புலிகள் 25 ஆயிரம் பேர்வரை இருப்பதாக கூறி ஏனையவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பாமல் வைத்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர மேடை செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி 9 ஆயிரம் தமிழீழ விடுதலைப்புலிகள் வவுனியா முகாம்களில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என நம்பப்படும் 25 ஆயிரம் பேர் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
எனில், அவர்களை வேறு இடம் ஒன்றில் தடுத்து வைத்து புனர்வாழ்வை மேற்கொள்ள முடியும்.
சுமார் ஒருலடசத்து 30 ஆயிரம் பேர் நாட்டின் ஏனைய பகுதிகளில் தமது உறவினர்களுடன் வாழ முடியும் என தெரிவித்துள்ளார்கள்.
20 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் அரசாங்கம் அதற்கு இடம்கொடுக்காது, தொடர்ந்தும் முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுவோரை தடுத்து வைத்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் ஒரு பயிற்சி முகாமாக அமையக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
palli
இவருடைய இந்த படத்தை பார்த்தாலே நாடு நாசமாய் போச்சு என்பதுதான் கண்ணுக்குள் வருகிறது;