2009

2009

நளினி- ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ்

nalini-111.jpgராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் வேலூர் மகளிர் சிறை அதிகாரி ஜெயபாரதி அளித்த உறுதிமொழியின் பேரில் அவர் இன்று காலை உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

நளினி விடுதலை குறித்து ஆராய அரசு கமிட்டி ஒன்று அமைத்திருந்தது. இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதே போன்று, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபர்ட் பயஸ் நேற்றிரவு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இவர் ராஜீவ் ‌கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பி‌டத்தக்கது

காஸ்பரோவ்- கார்போவ் மீண்டும் பலப்பரீட்சை

செஸ் ஜாபவான்களான ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் மற்றும் அனாடோலி கார்போவ் இருவரும் வாலென்சியா நகரில் இன்று துவங்கும் செஸ் போட்டியில் மோதுகின்றனர். கடந்த 1984ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கு இடையே நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடர், 5 மாதங்களாக நடந்தது.  இதில் 48 போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெற்றவர் என முடிவு செய்ய முடியாததால், வீரர்களின் நலன் கருதி போட்டியை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.

இந்தத் செஸ் தொடர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், செஸ் ஜாம்பவான் யார் என்பதை நிரூபிக்க இருவரும் மீண்டும் விளையாடுகின்றனர். இப்போட்டி ஸ்பெயினின் வாலென்சியா நகரில் இன்று துவங்குகிறது.

இப்போட்டி குறித்து தற்போது 46 வயதாகும் காஸ்பரோவ் பேசுகையில், “சர்வதேச தர செஸ் விளையாட்டை வெளிப்படுத்தும் திறமை எங்கள் இருவரிடமும் இன்னும் இருக்கிறது” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் இவர் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்பரோவை எதிர்த்து விளையாட உள்ள கார்போவுக்கு தற்போது 58 வயதாகிறது. எனவே, காஸ்பரோவின் நகர்த்தலுக்கு கார்போவால் ஈடுகொடுக்க முடியாது என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். 

தாய்நாட்டிற்கு துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் – ஜனாதிபதி

slpr080909.jpgசயனைட் யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. தாய்நாட்டிற்குத் துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்தார். 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் முழுமையான அபிவிருத்திக்கு உட்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; வாகரை பிரதேசம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் நான் இரண்டாவது தடவையாக இங்கு வந்துள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட வாகரை மகா வித்தியாலயம் மீள புனரமைக்கப்பட்டு இயங்கி வந்த வேளை பயங்கரவாதத்தினால் மீண்டும் சீரழிக்கப்பட்டது.  அதன்போது படைவீரர்களே, அதனை மீளத் திருத்தியமைந்துள்ளனர். அவர்களை இத்தருணத்தில் நாம் பாராட்ட வேண்டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வாகரை மகா வித்தியாலயம் கிழக்கு மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் கல்வி மட்டுமே எவராலும் களவாடப்பட முடியாதது. அந்த வகையில் இப்பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பெரும் பாக்கியசாலிகள். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். நம் மத்தியில் எவ்வித பேதமும் கிடையாது. அன்பான உங்கள் தாய்நாட்டை நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. நாடு நமக்கு என்ன செய்தது என யோசிக்காமல் நாம் தாய்நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை. இனி சிறுபான்மை என்ற இனமே இந்த நாட்டில் இல்லை. நாம் அனைவரும் இலங்கைத் தாயின் மக்களே. எனது முதல் விருப்பும், இரண்டாவது விருப்பும், மூன்றாவது விருப்பும் என் தாய்நாடே. அவ்வாறே நீங்களும் சிந்திக்க வேண்டும்.

சயனைட் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாம் நமது தாய்நாட்டுக்குத் துரோகமிழைக்காது இணைந்து ஒற்றுமையாக வாழ்வோம். ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. காகத்துக்கு இரவில் கண்தெரியாது. கல்லாதோருக்குப் பகலிலும் இரவிலும் கண் தெரியாது. எனவே நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எந்த தீர்மானத்தையும் புத்தியுடனும் தெளிவுடனும் மேற்கொள்ள வேண்டும். அப் போதுதான் நாம் சுதந்திரமாக வாழ முடியும்.

இன்றைய மாணவர்களே நாளைய மன்னர்கள். நீங்களே இந்த நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டும். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள். இப்பாடசாலையை இந்தளவு சிறப்பாக உருவாக்குவதில் கல்வியமைச்சும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயற்பட்டுள்ளன.

பயங்வரவாதப் பிடியிலிருந்து வாகரைப் பிரதேசத்தை மீட்டபோது நான் இங்கு வருகை தந்தேன். அப்போது எனக்குத் திலகமிட்டு வரவேற்ற குருக்களைப் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். முப்பது வருடகால பயங்கரவாத யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று அனைவரும் பயமின்றி சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒளிமயமான எதிர்காலம் அனைவருக்கும் கிட்டுவது நிச்சயம். வாகரைப் பிரதேசத்திலும் தயிர், தேன், போன்றவை உள்ளன. எனது ஊரான அம்பாந்தோட்டையிலும் தயிரும் தேனும் உள்ளது. இதனால் அந்த நெருக்கமான நினைவுகளை நான் மீட்ட முடிகிறது.

உங்கள் எதிர்கால வெற்றி உங்கள் பிள்ளைகளினதும் வெற்றியாகும். இந் நாட்டின் வெற்றியும் அதுவே. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ICC Champions Trophy 2009/10 – நேரஅட்டவணை

the-glittering-trophy.bmpஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நேற்று ஆரம்பமாகியது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி நேரஅட்டவணை வருமாறு

Tue Sep 22          
14:30 local | 12:30 GMT 
18:00 IST  1st Match, Group B – South Africa v Sri Lanka
SuperSport Park, Centurion    
 
Wed Sep 23          
14:30 local | 12:30 GMT
18:00 IST  2nd Match, Group A – Pakistan v West Indies
New Wanderers Stadium, Johannesburg  

Thu Sep 24         
09:30 local | 07:30 GMT
13:00 IST  3rd Match, Group B – South Africa v New Zealand
SuperSport Park, Centurion  

Fri Sep 25          
14:30 local | 12:30 GMT 
18:00 IST  4th Match, Group B – England v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg  

Sat Sep 26         
09:30 local | 07:30 GMT
13:00 IST  5th Match, Group A – Australia v West Indies
New Wanderers Stadium, Johannesburg  

Sat Sep 26          
14:30 local | 12:30 GMT
18:00 IST  6th Match, Group A – India v Pakistan
SuperSport Park, Centurion 

Sun Sep 27
09:30 local | 07:30 GMT
13:00 IST  7th Match, Group B – New Zealand v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg    
 
Sun Sep 27          
14:30 local | 12:30 GMT
18:00 IST  8th Match, Group B – South Africa v England
SuperSport Park, Centurion  
 
Mon Sep 28          
14:30 local | 12:30 GMT
18:00 IST  9th Match, Group A – Australia v India
SuperSport Park, Centurion
 
Tue Sep 29          
14:30 local | 12:30 GMT
18:00 IST  10th Match, Group B – England v New Zealand
New Wanderers Stadium, Johannesburg
 
Wed Sep 30
09:30 local | 07:30 GMT
13:00 IST  11th Match, Group A – Australia v Pakistan
SuperSport Park, Centurion
 
Wed Sep 30          
14:30 local | 12:30 GMT
18:00 IST  12th Match, Group A – India v West Indies
New Wanderers Stadium, Johannesburg  
 
Fri Oct 2          
14:30 local | 12:30 GMT
18:00 IST  1st Semi-Final – TBC v TBC (A1 v B2)
SuperSport Park, Centurion  
 
Sat Oct 3          
14:30 local | 12:30 GMT
18:00 IST  2nd Semi-Final – TBC v TBC (B1 v A2)
New Wanderers Stadium, Johannesburg
 
Mon Oct 5          
14:30 local | 12:30 GMT
18:00 IST  Final – TBC v TBC
SuperSport Park, Centurion 

ஐ. ம. சு. மு. வேட்பாளர் நிஷாந்த விளக்கமறியலில்

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஸாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமாகிய நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கருத்து தெரிவித்தமையால் அவர் நேற்று முன்தினம் (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இவரது வழக்கை நேற்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினாரென அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து மன்மோகன் மற்றும் சோனியாவிடம் பேச்சு

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்களது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.

திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து நேற்று பேசியுள்ளார்கள்.

இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்வதாகவும், அதனை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் இந்திய பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்துக்கு 17 வைத்திய அதிகாரிகள்

doctors.jpgஇலங் கையிலுள்ள வைத்தியசாலைகளில் தமது மருத்துவ உள்ளக பயிற்சிகளைப் பூர்த்தி செய்த பதினேழு வைத்தியர்கள் யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  நியமனம் பெற்றவர்களில் ஐந்து பேர் சிங்கள வைத்தியர்களாவர்.

இவர்களுக்கான நியமனம் கடந்த பதினாறாம் திகதியென அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்றுவரை எவரும் தமது பதவிகளைப் பொறுப்பேற்கவில்லையென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் முப்பத்தேழு வைத்தியசாலைகள் செயல்படுகின்றபோதும் பெரும்பாலான வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமுள்ளது.

துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

பொலிசாரின் கடும் தாக்குதலை சகிக்க முடியாமலேயே அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பமிட நேர்ந்ததாக ”நோத் ஈஸ்டன் மன்த்லி” என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த சஞ்சிகையின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று சாட்சியமளித்தார்.

யசீகரன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரெ என்பவருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர் சுயேச்சையாக வழங்கியதா என்பதை அறியும் நோக்கில் இந்த விசாரணை நடந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி தன்னையும் தனது மனைவியையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து தன்னை தாக்கி கடும் இம்சைகளுக்குட்படுத்தி பல்வேறு கடதாசிகளில் தனது கையொப்பத்தை பலவந்தமாக பெற்றதாக யசீகரன் சாட்சியில் தெரிவித்தார். தான் ஒருபோதும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரே என்பவருக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவரை முதற்தடவையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இந்த வழக்கின்போதே கண்டதாகவும் யசீகரன் அரச சட்டவாதியின் குறுக்குகேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

வவுனியாவில் பெண் தற்கொலைதாரி சந்தேகத்தில் கைது

220909prisoner1.jpgபொலி சாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது தற்கொலைதாரி எனச் சந்தேகிக்கப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின்போது இந்தப் பெண் வழங்கிய தகவலையடுத்து தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 3 அங்கிகளும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். காட்டுப்பகுதி ஒன்றில் இவை ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொரு இளம் பெண் சைனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கலாம் எனப் பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டி: முதற் தடவையாக பெண்களுக்கான உதைப்பந்தாட்டம்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது முதற் தடவையாக பெண்களுக்கான உதை பந்தாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு தீர்மானிக் கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான உதைபந்தாட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தது.  அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் 23 வயதுக்குட்பட்ட குழுக்களை உள்வாங்குவாக தீர்மானிக்கப்பட்ட போதிலும் பின்னர் வயது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான தெரிவு போட்டிகள் இம் மாதம் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சீ. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளன.