இலங் கையிலுள்ள வைத்தியசாலைகளில் தமது மருத்துவ உள்ளக பயிற்சிகளைப் பூர்த்தி செய்த பதினேழு வைத்தியர்கள் யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனம் பெற்றவர்களில் ஐந்து பேர் சிங்கள வைத்தியர்களாவர்.
இவர்களுக்கான நியமனம் கடந்த பதினாறாம் திகதியென அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்றுவரை எவரும் தமது பதவிகளைப் பொறுப்பேற்கவில்லையென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் முப்பத்தேழு வைத்தியசாலைகள் செயல்படுகின்றபோதும் பெரும்பாலான வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமுள்ளது.