24

24

ரூபிளில் மட்டுமே எரிவாயுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் -ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு

ரஷ்யாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும். டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தாவது,

எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை மாற்றுவதற்கு சில நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். அதன்படி, ரஷ்யாவிடம் தோழமை அல்லாத நாடுகள் தாங்கள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே
திரும்பச்செலுத்த வேண்டும். டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது. எனினும், ரஷ்யா தனது ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எரிவாயு அளவை தொடர்ந்து உலக நாடுகளுக்கு வழங்கும்.

புதிய கட்டண முறையை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்துமாறு ரஷ்யாவின் மத்திய வங்கியை கேட்டுகொள்கிறேன். இது வெளிப்படையாகவும் ரஷ்யாவின் உள்நாட்டு சந்தையில் ரூபிள் வாங்குவதை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அதன்மீது உலக நாடுகள் விதித்த சமீபத்திய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டது உக்ரேன் மோதலின் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்து ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு, இப்போது யூரோ மற்றும் டாலருக்கு எதிராக வலுப்பெற்றது.
புட்டின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், தனது சர்வதேச கூட்டாளிகள் விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான தொகையை இனி ரூபிளாக தான் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.

ரூபிளை வலுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளை உக்ரைன் உடனடியாகக் கண்டனம் செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிச்சை எடுத்து போராடிய உறுப்பினர் மொட்டையடித்துப் போராட்டம்

பசறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் மொட்டையடிப்பு போராட்டமொன்றை இன்று (24.03) மேற்கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே கொழும்பில் போராட்டக்கள மைதானத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டமொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால், நாடு அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு மற்றும் தட்டுப்பாடு, எரிபொருள் உள்ளிட்ட எரிவாயு ஆகியனவற்றைப் பெற மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஆகியவற்றினால் மக்கள் சொல்லெண்ணாத் துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நாடு அனைத்துத் துறைகளிலும் வங்கரோத்து நிலையினை அடைந்துவிட்டது. இவ் அவல நிலையினை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களின் கூட்டத்தினரையும், ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மேற்படி மொட்டையடிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வற் வரி தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்

2002ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பதற்கான சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக எந்தவொரு தொற்றுநோய் சூழல் அல்லது மக்களுக்கான அவசர சூழலின் போது அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படும் வைத்திய உபகரணங்கள், மற்றும் ஒளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்குவதற்கான ஏற்பாடும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.