வற் வரி தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்

2002ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பதற்கான சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக எந்தவொரு தொற்றுநோய் சூழல் அல்லது மக்களுக்கான அவசர சூழலின் போது அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படும் வைத்திய உபகரணங்கள், மற்றும் ஒளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்குவதற்கான ஏற்பாடும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *