08

08

எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும் – ரஷ்ய துணைப்பிரதமரின் எச்சரிக்கையால் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்த ஜேர்மனி !

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Russia to reach pre-crisis oil production level in May 2022 — deputy PM -  Business & Economy - TASS

ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக், இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போது,

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யாவும் அதற்கு பதிலடி கொடுக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய்  மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துவோம்.

குறிப்பாக ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.

ரஷ்யாவிடம் இருந்து தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை நாடுகள் பெட்ரோலிய பொருட்களை வாங்குகிறார்கள். எங்கள் மீது தடை விதித்தால், பாதிக்கப்படுவது நீங்களும் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை புரிந்து கொண்டு இதுபோன்ற தடைகளை விதிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.” என  அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் யோசனையை ஜெர்மனி நிராகரித்துள்ளது. அமெரிக்கா கூறுவதுபோல் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால், பெட்ரோலிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விடும். எனவே இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஜெர்மனி விரும்பவில்லை என்று கூறியுள்ளது.

நெதர்லாந்து நாடும் இதே முடிவை எடுத்துள்ளது. ஜெர்மனி,நெதர்லாந்து நாடுகளின் முடிவால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“எமது பெண்கள் சிந்தும் கண்ணீருக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்த அரசு அழிந்துபோகும்.” – துரைராசா ரவிகரன்

வட, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிந்தும்  கண்ணீருக்கு  உரிய நீதி கிடைக்கவேண்டும். இல்லையேல் அந்த கண்ணீருக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்த அரசு அழிந்துபோகுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் தமது தொடர்போராட்டத்தின் ஐந்தாவதுவருட நிறைவுநாளில், மகளிர் தினத்தினை துக்கநாளாகக் கடைப்பிடித்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கண்ணீருக்கு நீதி இல்லையேல் அழிந்துபோவீர்கள் | March 8, 2022

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுகருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படவேண்டிய மகளிர் தினத்தினை எமது மகளிர்கள், துக்க தினமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

வட, கிழக்கிலே சுமார் 90ஆயிரம் அளவில் விதவைகளாக எமது மகளிர்கள் இருக்கின்றனர்.

இதனைவிட காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இப்படியிருக்கும்போது இந்த மகளிர் தினத்தை எமது மகளிர் எப்படி மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும்? ஐந்து வருடங்களாக இவ்வாறு வீதியிலே இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆறாவது வருடத்தின் தொடக்கத்தில் தற்போது போராட ஆரம்பித்திருக்கின்றார்கள்.

குறிப்பாக இதுவரையில் ஐக்கிய நாடுகள் சபையோ, இலங்கை அரசோ, அல்லது வேறு சர்வதேச நாடுகள்கூட இவர்களுடைய போராட்டத்திற்கு உரிய தீர்வுகளை வழங்க முன்வரவில்லை. இவர்களுடைய கண்ணீருக்கான பதில் என்ன? எமது உறவுகள் சிந்துகின்ற  இந்த கண்ணீருக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இந்த அரசு அழிந்துபோகும் நிலைதான் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது உறவுகளுக்குரிய நீதியை வழங்குங்கள். சர்வதேசரீதியாக ஐக்கியநாடுகள் சபை நிச்சயமாக இந்த மகளிர்களுக்கு நீதியை வழங்க முன்வரவேண்டும். இந்த மகளிர்களின் கண்ணீருக்கு விடை கிடைக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த அரசு அழிந்துபோகும் – என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா வீட்டின் மீது மலக்கழிவுத் தாக்குதல் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஹிருணிகா ஓர் இரும்புப் பெண். அவர் குண்டர்களுக்கு பயப்படவில்லை. ஜனாதிபதி மாளிகை முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். ஹிருணிகாவின் வீடும் மலக்கழிவால் தாக்கப்பட்டுள்ளது”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியின் வீட்டின் முன்பாக பொரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமையம் நினைவில் கொள்ளத்தக்கது.

“போராட்ட வரலாற்றிலும் ஜனநாயக அரசியலிலும் நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய நாடளாவிய ரீதியில் 1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தின் அடிப்படையில் பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இன்று உலக மகளிர் தினமாகும். இந்த பெருமை மிக்க நாளில் பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான தன்னை துறைசார் அமைச்சர் அழைத்து இந்த தேசிய திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்போம் என கேட்டிருந்தார். அதற்கு நான் எமது யாழ் மாவட்டத்தின் இந்த பாடசாலையை முன்மொழிந்திருந்தேன். அதனடிப்படையில் இன்று அந்த பாடசாலை மாணவர்களினதும் கல்விச் சமூகத்தினதும் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எமது உரிமைப் போராட்ட காலகட்டங்களிலும் சரி அதன் பின்னரான ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவும் சில சமயங்களில் அதற்கு சற்று அதிகமாகவும் கொடுத்து வந்திருக்கின்றேன்.

அதேபோன்று ஆயுதப் போராட்ட களமுனையில் முதல் வீரகாவியமான பெண்ணாகவும் எனது சகோதரியான மதிவதனி என்றும் இயற்பெயர் கொண்ட சோபா வரலாற்றில் பதிவாகியுள்ளார். அதுமட்டுமல்லாது எனக்கும் கட்சிக்கும் மின நெருக்கமான மனித உரிமை சட்டத்தரணியுயான மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானவர்களையும் வன்முறையாளர்களினால் இழந்திருக்கின்றேன்.

ஆனபடியால் எனக்கு இந்த போராட்டத்தின் வலிகள் நன்கு தெரியும். அதனால்தான் இந்த போராட்டத்தின் அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றதனடிப்படையில் அதற்கான தார்மீக பொறுப்பேற்று எமது மக்களின் மீள் எழுச்சிக்கு என்னாலான சேவைகளை தொடர்ந்து செய்துவருகின்றேன்.

அதேபோன்று எமது மக்களும் எனது அரசியல் பலத்தை பலப்படுத்துவதும் அவசியமாகும். அதனூடாகவே இன்றும் பலவகையான பலனை மக்கள் அடையமுடியும் என்றும் நம்புகின்றேன். இதேவேளை 72 களில் தரப்படுத்தலுக்கு எதிராக நாம் போராடியிருந்தோம். அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து நான் அமைச்சராக இருந்தபோது ஸ்ரான்லி வீதியில் 400 முதல் 500 பேர் என்னை வந்து சந்தித்து தரப்படுத்தலினூடாக தமக்கான பல்கலை நுழைவை ஏற்படுத்தி தருமாறு கோரியிருந்தனர்.

நான் அதை ஏற்று அன்றைய ஜனாதிபதியுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனாலும் அன்று தரப்படுத்தலை எதிர்த்த நாம் அதன்பின்னர் அதை வேண்டும் என கோரியமையானது எமது தமிழ் மக்களின் அன்றைய அரசியல் தலைவர்கள் விட்ட தவறாகவும் அவர்கள் எமது மக்களுக்கு ஏற்படுத்திய தோல்வியாகவுமே அதை நான் பார்க்கின்றேன். இதேவேளை தற்போது எமது மக்கள் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதை நாம் தான் இங்குள்ள அரசுடன் பேசி தீர்வுகாணவேண்டும்.

அதைவிடுத்து பாரத பிரதமருக்கு கடிதமெழுதுகின்றனர். 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அதுதான் எமது பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளி என நான் கடந்து 30 வருடங்களுக்கு முன்பிருந்து வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.

எனது இந்த தீர்க்கதரிசனமிக்க கூற்றை 30 வருடங்களுக்கு முன்னர் இன்று ஏற்றுக்கொண்டது போல ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகளையும் துயரங்களையும் எமது மக்கள் கண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் இனியாவது எமது மக்கள் சரியானது எது சரியாவனவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் இது பெண்களுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்தும் கல்லூரி என்பது மட்டுமல்லாது. பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தையும் நாம் உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்ததுடன் தேசிய பாடசாலையாக தரமுயர்ந்துள்ள மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையின் கல்விச் சமூகத்துக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினமும் வீட்டில் பெற்றோர் சண்டை – அச்சுவேலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 12வயது சிறுமி !

தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினம்தோறும் சண்டை பிடிப்பதாகவும் இதனால் தன்னுடன் ஒவ்வொரு நாளும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சிறுமி, இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இன்றையதினம் தஞ்சம் அடைந்ததாக குறிப்பிட்டார். தஞ்சமடைந்த குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிசாரின் முறைப்பாட்டின் போது தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு – 22ஆம் திகதி முதல் நிறுத்தப்படுகிறதா மதுபான விநியோகம் ?

இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதுபான விநியோகம் நிறுத்தப்படும் என வெளியான தகவல் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டினால் ஏற்பட்ட எத்தனோல் தட்டுப்பாடு காரணமாக மது உற்பத்தி நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் 23 உரிமம் பெற்ற கலால் டிஸ்டில்லரிகள் மதுபானத்தை உற்பத்தி செய்துவருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எத்தனோல் மற்றும் தேவையான பிற மூலப்பொருட்களை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ள என முடியும் என்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது.

“பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவே நாடாளுமன்றிற்கு வந்துள்ளார்கள்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

“பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் சுயநலத்துக்காகவும் கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவும் நாடாளுமன்றிற்கு வந்துள்ளார்கள்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

“பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் சுயநலத்துக்காகவும் கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவும் நாடாளுமன்றிற்கு வந்துள்ளார்கள்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் மகளிருக்கு நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இன்றைய நாளுக்கான தலைப்பிற்கமைய பேசப்படுவதை விட நாடு முகம் கொடுத்திருக்கும் பாரிய பிரச்சினைகளான மின்விநியோக துண்டிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு இவ்விடயங்களை பற்றி உரையாற்ற விரும்புகிறேன்.

 

அண்மையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு பிரதேசத்தில் முன்னெடுத்த போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் மின்விநியோக துண்டிப்பிற்கு கடுமையான எதிர்ப்பை அவ்விடயத்தில் வெளிப்படுத்தினார்கள். அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ளும் வழிமுறை குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நினைக்கிறோம். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொருளாதார நெருக்கடி குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறும் தன்மை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் 11 பங்காளி கட்சிகள் யோசனைகளை முன்வைத்ததை தொடர்ந்து முக்கிய இரு அமைச்சர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட மாவட்ட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மௌனம் காப்பது கவலைக்குரியது.

உதாரணமாக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மக்கள் படும் துயரம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கில் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு திறனில்லாதவர்கள் என்பதும் எமக்கு தெரியும்.

இருந்தாலும் மக்கள் படும் கஸ்டங்களை கண்டு வெறும் வாய்மொழி மூலமான நிலைப்பாட்டையாவது குறிப்பிட வேண்டும். உரப்பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மீன்பிடி துறை அமைச்சரின் செயலற்ற திறமையினால் வடக்கு கிழக்கு மாகாண மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனையடுத்து வடக்கு கிழக்கில் சிறுகைத்தொழில் அதாவது வெதுப்பகங்கள் கூட இயங்குவதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்க்க கோரி மலையகத்திற்கு சென்றிருந்த போது அங்கும் இவ்வாறான நிலைமையை அவதானிக்க முடிந்தது.

விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசியல்வாதிகள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி வகித்துக்கொண்டு, பதவி ஆசைக்காக தங்களுக்கு அரசாங்கத்தினால் சலுகை கிடைப்பதால் மக்கள் படும் துயரத்தை கண்டும் அமைதிகாக்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய தரப்பினர்கள் கூட மக்கள் தரப்பில் இருந்துக்கொண்டு கருத்துரைக்கையில் ஏன் வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோரால் மக்களுக்காக குரல் கொடுக்க முடியாது.  மக்களுக்காக  இவர்கள் அரசியலுக்கு வரவில்லை தங்களின் சுயநலத்திற்காகவும், செய்த கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவும் நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்கள் என்றும் குறிப்பிடலாம்.மகளிர் தினமன்று சபை ஒத்திவைப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதை அவதானித்தேன். அப்பிரேரணையில் பல காலங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரேமினி என்ற சகோதரியை கற்பழித்து கொலை செய்தவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான கட்சியை வைத்திருக்கும் ஒருவர் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இவ்வாறானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். மகளிர் தினத்தையொட்டி பிரேரணை கொண்டு வரும் வேளை இதனை பேசவிரும்புகிறேன்.

எமது மாவட்டத்தில் மிகமோசமான நிர்வாகம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. வட்டாரத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு 40 இலட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த நிதி ஒதுக்கீட்டை கூட எடுத்து இன்று ஆளும் கட்சியை சேர்ந்த ஒருசிலர் தங்களின் பிரதேச அபிவிருத்தி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை வைத்துக்கொண்டு அந்த 40 இலட்சத்தையும் நாங்கள் தான் வழங்குவோம் என குறிப்பிடுகிறார்கள்.

அவ்வாறாயின் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையா, வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவருக்கு அந்த தெரிவை செய்ய முடியாவிடின் பிறகு எதற்கு ஜனநாயகம்.

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து விட்டு மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு முழுமையாக பொறுப்பினை வழங்குங்கள். இவ்விடயத்தை ஆளுநரிடமும் அறிவித்தோம். நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படும் போது அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.