18

18

மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி – வைரலாகும் படம் !

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு அதே வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் முதலுதவி செய்வது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

“ஜனாதிபதி மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும்.” – இரா சாணக்கியன்

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பாக காலியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மிக விசேடமாக சொன்ன விடயங்களைப் பார்த்தால், தன்னை மக்கள் ஜனாதிபதியாக வருமாறு விடுத்த அழைப்பினை ஏற்றே தான் ஜனாதிபதியாக அரசியலுக்கு வந்ததாக அவர் சொல்லியிருந்தார். அது ஒரு அளவிற்கு தெற்கிலே இந்த மக்கள் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜனாதிபதி மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அரசியலுக்கு வந்தார் என்று சொன்னால், இன்று மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கி அவர் பதவி துறந்து வீட்டுக்கு செல்ல வேண்டும்.

இன்று இல்லையினுடைய அனைத்து பிரதேசங்களிலும் “GO HOME GOTA“ என்று சொல்லும் ஒரு நிலையில், அவர் மக்களினுடைய கருத்தினைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர், மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் என்று சொன்னால், இன்று மக்கள் என்ன கேட்கின்றார்கள் என பார்த்தால் அவரை வீட்டுக்கு செல்லுமாறு இன்று கேட்கின்றனர்.

ஆகவே அந்த அடிப்படையில் அவர் இன்று தனது பதவியினை இராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதனையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அத்துடன், அவரால் இந்த நாட்டினை சிறந்த முறையிலே நடத்த முடியாது. இந்த நாட்டில் ஜனாதிபதியின் சுபீட்சமான நோக்கம் என எதுவும் கிடையாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழினத்தையும் மலினப்படுத்தியுள்ள நீதியமைச்சர் அலிசப்ரி – முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு !

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சரின் கூற்றை வன்மையாக கண்டிப்பதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

காணாமல் போனோரின் உறவுகளுக்கு அரசினால் ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் யோசனையை நீதி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நாட்டின் நீதி அமைச்சர் காணாமல் போனோர் தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த யோசனை ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற விடயமாகும் என்பதுடன் தமிழர்களை இவர்கள் எவ்வாறு எந்தளவுக்கு வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த நீதி அமைச்சர் வெளியிட்டிருப்பது ஒரு வேதனையான கவலையான விடயமாகும்.

அதேவேளை தமிழர்களுடைய உயிர் ஒரு இலச்சம் ரூபா பெறுமதி என்ற அடிப்படையில் இவர்கள் கையாளுகின்ற விடயத்திற்கு நான் மனவேதனையுடன் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

மூடப்படவுள்ள அரச வைத்தியசாலைகள் – வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் !

அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால், இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மருத்துவர் ருக்ஷான் பெல்லன,

‘இன்னும் ஒரு வாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளும் மூடப்படும். வாகனங்களில் பணிக்கு வரும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு எரிபொருள் பிரச்சிமருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் உணவு சமைப்பதற்காக சமையல் எரிவாயு பிரச்சனை ஏற்படலாம்.

நோயாளிகளுக்கு கொடுக்க மருந்து இல்லை. இந்த பிரச்னைகளை அரச அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்த நிலைமை அதிகரிக்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்களா?னை ஏற்படுகிறது. இது அதிகரித்தால், ஒட்டுமொத்த மருத்துவமனை அமைப்பும் முடக்கப்படும். அரசு மருத்துவமனை சேவையை அத்தியாவசிய சேவையாக்குவது பயனற்றது. மருத்துவர்கள், ஊழியர்கள், பணிக்கு வரும் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என்றால். நீங்கள் எப்படி வேலைக்கு சமூகமளிப்பது?

களுபோவில வைத்தியசாலையில் உள்ள உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மற்ற மருத்துவமனைகளிலும் இதே நிலைதான். என தெரிவித்தார்.

இலங்கையில் வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கு கடதாசி இல்லை – நிறுத்தப்பட்ட பரீட்சை !

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ஏனைய பொருள்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 6ஆம், 7ஆம், 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 4ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலிக்கு ஆள்வைத்து தந்தையை கொலை செய்த மகன் – விசாரணையில் வெளிவந்துள்ள பதைபதைக்கும் உண்மைகள் !

மட்டக்களப்பு கரடியனாற்றுபிரதேசத்தில் தனது தந்தையை கூலிக்கு ஆள்வைத்து கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று வியாழக்கிழமை (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை 14 ம் திகதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

இந்த நிலையில் இவரின் 22 வயதுடைய மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் தனது மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடிவிற்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கும் தந்தைக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது

இதனையடுத்து சிந்துஜன் கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பனை கடந்த முதலாம் திகதி (1-3-2022) சந்தித்து தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம்தருவதாக அவனிடம் பேரம் பேசியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசில் பலமுறை தொடர்பு கொண்டு தந்தை கொலை தொடர்பாக வினாவி வந்துள்ளான்;

இதன் பின்னர்  கொலை செய்வதற்கான கொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார்.

கடந்த 12ம் திகதி (12-3-2022) இரவு 9 மணியளலில் படுகொலை செய்யப்பட்ட பரசுராமன் வயலிற்கு காவலில் ஈடுபட்டுள்ளார். பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இட்ணராஜா நிரோசன் அந்த கொட்டகைக்கு சென்றபேது மகனின் நண்பனான நிரோசனை கண்ட பரசுராமன் அவனுக்கும் இரவு உணவை கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர்

 

அதிகாலை 3.30 மணியளவில் கொலை செய்ய சென்றவன் கண்விழித்து பார்த்தபோது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை கண்டு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில் போட்டபோது அவர் உயிரிழக்காததையடுத்து அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான் அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை.

அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளதையடுத்து அங்கிருந்து தப்பி அதிகாலை 4 மணியவில் தனது நண்பனான -தந்தையை கொலை செய்ய சொன்ன சிந்துஜனிடம் கையடக்க தொலைபேசி ஊடாக நீ சொன்ன மாதிரி உனது அப்பாவை கொலை செய்துள்ளதாக தெரிவித்து வீட்டிற்கு சென்றுள்ளான்.

தந்தையை கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பணை தேடி 14ம் திகதி திங்கட்கிழமை கிரான் பகுதிக்கு சென்று சந்தித்து பேசிக்கொண்டு பின்னர். இருவரும் மோட்டர்சைக்கிளில் அங்கிருந்து வந்தாறுமூலை பகுதியிலுள்ள நகைகக்கடை ஒன்றின் முன்னால் சென்று நண்பனை நிற்குமாறு தெரிவித்து நகைக்கடைக்கு சென்று அங்கு தங்க ஆபரணம் ஒன்றை ஈடுவைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அதனை கொலை செய்த நண்பணிடம் வழங்கியுள்ளாhன்

பேரம் பேசிய பணத்தை பெற்ற நிரோசன் அங்கு ஏற்கனவே நகைகடை ஒன்றில் 23 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்த நகையை ஈட்டில் இருந்து மீட்டுக் கொண்டு அங்கிருந்து இருவரும் பிரிந்து சென்றுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவரிடம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி. மற்றும் நாடா கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இந்த கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மகiனை கைது செய்து விசாரணையில் கொலையாளியான கிரானைச் சேர்ந்த நித்தி என்பரை கைது செய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

நாடு பாதாளத்தில் – மாலைதீவில் அமைச்சர் நாமல்ராஜபக்ச நீச்சல் விளையாட்டில் – நாமலின் பதில் என்ன..?

மாலைதீவில் அமைச்சர் நாமல்ராஜபக்ச நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மக்களோ வீதிகளில்:அடுத்த ஜனாதிபதி நீச்சலில்1 - www.pathivu.com

நாமல்ராஜபக்ச மாலைதீவில் பிளைபோர்டிங் ஜெட்ஸ்கை போன்றவற்றில் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. அவர் பின்னர் விருதுவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்- இந்த நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளார்.

நாடு கடும்பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் மாலைதீவிற்கு சென்றமைக்காக சமூக ஊடகங்களில் பலர் நாமல் ராஜபக்சவை கண்டித்துள்ளனர்.

எனினும் அமைச்சர் மாலைதீவிற்கு செல்லும் தனது முடிவை நியாயப்படுத்தினார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சு நடத்தும் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்விற்காக நான் மாலைதீவிற்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்,மாலைதீவு இலங்கைக்கு நெருக்கமான நாடு -விளையாட்டு மற்றும் இளைஞர்கள் குறித்து எங்களிற்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது,என அவர் தெரிவித்துள்ளார்

தனது பயணத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒளிந்திருப்பதன் மூலம் நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது நாங்கள் மக்கள் மத்தியில் சென்று சுற்றுலாப்பயணம் செய்வதற்கு இலங்கை பாதுகாப்பான இடம் என்பதை ஊக்குவிக்கவேண்டும்,விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறையில் மாலைதீவு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது,மாலைதீவில் வேலைவாய்ப்புகளை கண்டறியவேண்டு;ம்,மாலைதீவு இலங்கைஇளைஞர்களிற்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கை உலகநாடுகளை நோக்கி கரங்களை நீட்டவேண்டும்,ஒளிந்திருந்து கொண்டு நாங்கள் முறைப்பாடு செய்ய முடியாது, நாங்கள்தீர்வை காணவேண்டும்,நாங்கள் மக்களின் விரக்திநிலையை புரிந்துகொள்கின்றோம் ஆனால் இதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.