March

March

இணையம் அடிப்படை உரிமை ஆகும்: பிபிசி கருத்து வாக்கெடுப்பில் முடிவு

internet.jpgபிபிசி உலக சேவைக்காக குலோப்ஸ்கேன் நிறுவனத்தார் நடத்திய ஒரு புதிய உலக அளவிலான சுற்றாய்வில் நம்மிலே ஐவரில் நால்வர் இணைய வசதியை அடிப்படை மனித உரிமை என்று கருதுவதாகத் தெரியவந்துள்ளது.

உலகெங்கிலிருந்தும் எழுபத்து ஒன்பது சதவீதமானோர் இணையத்தைப் பாவிக்கும் வசதியும் அனுமதியும் இருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர்.

இணையத்தை பாவிப்பவர்கள் மட்டுமல்லாமல் இதுவரை இணையத்தை பாவிக்காதவர்கள் மத்தியிலும் இதே கருத்துதான் நிலவுகிறது என்றும் தெரிகிறது.

இந்தியா – இலங்கையுடன் இணைந்து கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை

nirupama.gifஇந்தியா,  இலங்கையுடன் இணைந்து கல்வித்துறை மேம்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் மூலம் மிக நீண்டகாலமாக இருந்து வரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

கண்டி – பெனிதெனிய வில் அமைந்துள்ள ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் கல்வி நிலையத்தில் இந்தியா – இலங்கை ஆங்கிலம் கற்றல் தொடர்பான ஆசிரியர் மத்திய நிலைய மொன்றையும் மொழியியல் கூடமொன்றை யும் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே செயலாளர் நிருபமா ராவ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இரு நாடுகளுக்குமிடையில் இவ்வாறு ஆங்கில அறிவு தொடர்பான விருத்திகளை முன்னெடுத்து செல்ல மஹிந்த சிந்தனைத் திட்டம் உறுதுணையாக விருந்தது எனவும் கூறினார்.

இந்தியாவுக்கு வருமாறு கிழக்கு முதலமைச்சருக்கு நிருபமா அழைப்பு!

chandrakanthan.jpgகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு  செயலாளர் நிருபமா ராவ் இன்று சிவனேசத்துரை சந்திரகாந்தனை கொழும்பில் வைத்துச் சந்தித்தார். இதன் போதே இவ் அழைப்பை அவர் விடுத்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்புத் தொடர்பில் அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளிவகார செயலாளர் நிருபமா ராவ் என்னைச் சந்திக்க வேண்டுமென கோரியிருந்தார். இதனையடுத்து அவரை நான் சந்தித்தேன்.

இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.

அத்துடன் அதிகாரப் பகிர்வு, 13 ஆவது திருத்தச் சட்டம், அதனை அமுல் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கினேன். கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவும் என நிருமா ராவ் எனக்கு உறுதியளித்திருந்தார்.

இலங்கை விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவு ம் அவர் என்னிடம் தெரிவித்தார்  என சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.

இம்மாதம் நடுப்பகுதியில் இடைக்கால பருவப் பெயர்ச்சி மழை – காலநிலை அவதான நிலையம் எதிர்பார்ப்பு

rain.jpgஇம்மாதம் நடுப்பகுதியில் இடைக்கால பருவப் பெயர்ச்சி மழை பெய்யூம் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலைய பேச்சாளர் ஒருவர் தொவித்தார்.

தற்பொழுது நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளைகளில் சிறிது மழை பெய்து வருவதாக குறிப்பிட்ட அவா; ஒரு மாத காலமாக வரட்சியான காலநிலை நாடு பூராவூம் காணப்படுகிறது எனக் கூறினார். தற்பொழுது நிலவிவரும் வரட்சியான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தொpவிக்கின்றது.

தற்பொழுது ஊவா சப்ரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை மழை பெய்து வருவதாகவூம் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. நேற்று காலையூடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் 5 மில்லி மீட்டரும் இரத்மலானையில் 1.2 மி. மீ. உம் மழை பெய்துள்ளது.

பலமான குடும்ப உறவே பலமான நாட்டை கட்டியெழுப்ப அடித்தளம் – நாமல் ராஜபக்ஷ

namal.jpgபலமான குடும்ப உறவே பலமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம். இதனைக் கொள்கையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியின் புதல்வரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை சிபோபுர சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- இந்நாட்டில் இளைஞர்கள் படையிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் போதும் பாடசாலை பல்கலைக்கழ கத்துக்குப் போய் மீள வீடு திரும்பும் வரை பெற்றோர் அஞ்சி நடுங்கிய யுகம் ஒன்றிருந்தது. இதன்போது உள, உடல் ரீதியில் எவரும் பீடனைக்குள்ளானவர்கள் எமது தாய்மாரே.

எமது சகோதரரும் கடற்படையில் கடமைபுரிவதால் பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமது பெற்றோரும் இத்தகைய தாக்கங்களுக்கே உள்ளானார்கள் என என்னால் கூறமுடியும். லங்கையைப் பொறுத்தவரை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினை பெண்களே வழங்குகின்றனர்.

வீட்டின் பொருளாதாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றை இதில் முக்கியமாகக் குறிப்பிட முடியும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தற்போது அமைதி சூழல் நிலவுகிறது. இதனால் நிம்மதியடைந்தவர்கள் எமது தாய்மாரே.  இதனால் எமது கலாசாரம் தேசியத்துவம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

எனது முன்னேற்றத்தில் எனது பெற்றோரினது பங்களிப்பு முக்கியமானது. எனது தாயாரிடம் நான் கற்ற பாடமே எனக்குப் பெரிதும் உந்துதலளித்தது. அரசியலில் எனது தந்தையாரின் வழிகாட்டல் எனக்கு உதவியது. இதுவே எனக்கான அரசியல் சூழலை உருவாக்கித் தந்தது.

இந்நாட்டில் பெண்களின் பொருளாதாரம் சக்திபடுத்தப்பட வேண்டும். அரசியலில் பொருளாதார ரீதியில், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான உறவும் பலப்படுவது மிகவும் முக்கியமாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான பலமான உறவு இல்லாவிட்டால் நாம் எத்தகைய அபிவிருத்தியை ஏற்படுத்தியும் அதில் பயனில்லை என்பதே எனது கருத்து.

குடும்ப உறவு பலப்படுத்தப்படல், பொறுமை இவையிரண்டும் நல்ல குடும்பம், நல்ல பிள்ளைகள் உருவாக மிகவும் அவசியமாகும். குடும்பம் பலம்பெறும் போது சமூகம் பலம்பெறுகிறது. சமூகம் பலம் பெறும்போது கிராமம் பலம்பெறுகிறது.  கிராமம் பலம்பெறும் போது நாடு பலம் பெறுகிறது. நாம் பலம் மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மகள்மாருடன் தொலைபேசியில் பேச சரத் பொன்சேகாவுக்கு அனுமதி

sarath_fonseka-02.jpgதடுப்புக் காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அவரது மகள்மாருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நேற்று முதல் அவருக்கு கையடக்க தொலை பேசியை பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இராணுவ தளபதியின் சிறப்புரிமையின் பேரிலேயே சரத் பொன்சேகாவுக்கு கையடக்க தொலைபேசி மகள்மாருடன் மட்டுமே பேச வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள் ளதே தவிர வேறு எவரினதும் உத்தரவின் பேரில் அல்ல என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் துரித இந்திய விஜயத்தை இந்திய பிரதமர் எதிர்பார்த்துள்ளார் – நிருபமா ராவ் கருத்து

mahi-nirupama.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.  தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையு டனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடினார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளது. 70 ஆயிரத்துக்கு குறைவான இடம்பெயர்ந்தவர்களே தற்போது நிவாரணக் கிராமங்களில் உள்ள நிலையில் இந்த விடயம் சர்வதேச சமூகத்தின் அவதானத்திலிருந்து விடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் இந்தியா தொடர்ந்து உதவுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

அத்துடன் வடக்குக்கான ரயில் பாதையை மீண்டும் முற்றாக மீளமைக்க இந்தியா உதவ விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி யீட்டியதையிட்டு வாழ்ந்து தெரிவித்த நிருபமாராவ், தான் இந்திய தூதுவராக இங்கிருந்து திரும்பிச் சென்ற பின்னர் இலங்கைக்கு நன்மை பயக்கும் பல விடயங்கள் இங்கு நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் துரித இந்திய விஜயத்தை இந்திய பிரதமர் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளரிடம் கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்லில் வாக்களிக்க மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.  சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது நாடளாவிய தேர்தல் இதுவென்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் பல புதியவர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர்களுடன் செயலாற்றுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் கச்ச தீவில் நடைபெற்ற புனித அந்தோனியார் உற்சவத்தில் பெருமளவு இந்தியர்கள் கலந்துகொண்டமை இலங்கை- இந்திய மக்களுக்கிடையே நல்லெண்ணம் நிலவுவதை மேலும் சுட்டிக்காட்டுவதாக உள்ளதாகவும் நிருபமாராவ் குறிப்பிட்டார்.

இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலும் புரிந்துணர்வுக்கான தேவை ஆகிய இரு தரப்புக்கும் அக்கறையான விடயங்கள் பற்றி இச்சந்திப்பின்போது பேசப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளியுறவு செயலாளருக்கு ஜனாதிபதி மாளிகையில் பகல் போசன விருந்தளித்தார். இந்திய வெளியுறவு செயலாளருடன் இந்திய தூதுவர் அசோக் கே. காந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார்.

மகளிர் கெளரவமாக வாழும் சூழலை அமைத்துள்ளோம் – ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி

he_the_president.jpgஎமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக இருந்த புலிகள் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டதையடுத்து சுதந்திர இலங்கையில் நடைபெறும் முதலாவது மகளிர் தின தேசிய நிகழ்வுக்கு வாழ்த்துக் கூற சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது:-மகளிரின் அபிமானம், கெளரவம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் பெரும் தடையாக இருந்தது. பயங்கரவாத பிடியில் சிக்கி பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த அனைத்து மகளிரையும் அதில் இருந்து மீட்டு அபிமான மிக்க மகளிர் பரம்பரையாக இலங்கை மகளிர் வாழ்வதற்கு தேவையான சூழலை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

சமூக கட்டிடத்தின் அத்திவாரமான குடும்பம் எனும் அலகில் முதல் இடத்தை பெறுவது தாய் தான். தாய், தந்தை, பிள்ளைகள் என குடும்பம் நன்றாக வாழ்க்கை நடத்தும்போது அக் குடும்பத்தில் அன்பு, பாசம், கருணையுடன் சமாதானமும் ஏற்படும். அமைதியான குடும்பம் நாட்டின் அபிவிருத்திக்கு நல்லதோர் உந்து சக்தியாகும் என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் விவகாரம் – கடற்கொள்ளையர்களுடன் பேச்சு நடத்த நடவடிக்கை

cargo-ship.jpgஏடன் வளைகுடாவில் வைத்து கடந்த திங்கட்கிழமை சோமாலிய கடற்கொள்ளையர் களால் கடத்தப்பட்ட சவூதி அரேபிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் கடத்தப்பட்டது. இக்கப்பலில் இருந்த 14 சிப்பந்திகளில் 13 பேர் இலங்கையராவர்.

இக்கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்க ளுக்கும் சவூதி அரேபிய நிறுவனத்துக்கு மிடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வைக்கும் நோக்கத்துடன் லண்டனில் நிலைபெற்றுள்ள காப்புறுதி நிறுவனமொன்றின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று ஜித்தா சென்றுள்ளார்.

கப்பலில் சிபந்திகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று கடல் கொள்ளையர்கள் கூறியுள்ளபோதிலும் அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் காப்புறுதி நிறுவன அதிகாரியின் வருகையை அடுத்து சாதகமான நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் கவுன்ஸிலர் தாயக மான சபாருல்லா கான் கூறியு ள்ளார்.

கடற்கொள்ளையருடன் செய்மதி தொலைபேசி மூலம் கப்பலுக்கு சொந்தமான சவூதி அரேபியன் நிறுவனம் தொடர்புகொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சோமாலிய கடற் பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலை விடுவிக்கக் கடற்கொள்ளையர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை கப்பமாக கோரி வருகின்றனர்.

ஐ. தே. க உட்பூசல் வலுக்கிறது – மத்தும பண்டார விவகாரம் நாளை செயற்குழுவில் முடிவு

unp-logo.jpgஐ. தே. க.  பட்டியலில் இருந்து திஸ்ஸ குட்டியாரச்சியின் பெயர் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ. தே. க மொனராகலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ரஞ்சித் மத்துகம பண்டாரவிடம் ஐ. தே. க. விளக்கம் கோரியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. ஒன்பதாம் திகதிக்கு விளக்கமளிக்குமாறு கட்சி தலைமைப் பீடம் இவரை கேட்டுள்ளது. ஐ. தே. க. செயற்குழு நாளை (9) கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்தாவில் கூட உள்ளது.

இதன் போது மத்தும பண்டாரவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. மத்தும பண்டாரவை மொனராகலை மாவட்ட முதன்மை வேட்பாளர் பதவியில் இருந்தும் மற்றும் பதவிகளில் இருந்தும் நீக்க உள்ளதாகவும் அறிய வருகிறது. இதேவேளை சு. க. மக்கள் பிரிவு சார்பாக நிறுத்தப்பட்ட திஸ்ஸ குட்டியாரச்சியை ஐ. தே. க. பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கியதால் ஐ. தே. க. கூட்டுக் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

கூட்டுக் கட்சிகளை திருப்தி ப்படுத்து வதற்காக கட்சியின் சிரே ஷ்ட உறுப் பினரான மத்தும பண்டாரவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தயாராவ தையடுத்து ஐ. தே. கவுக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளதாக அறியவருகிறது.