28

28

பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி துரிதம் – 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம்

house.jpgமீள் குடியேற்றம் செய்யப்பட்ட பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் துரிதகதி யில் புதிய வீடுகளை நிர்மாணிப்ப தற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரி வித்தார்.

பரப்பாங்கண்டல் பகுதியில் சுமார் 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பரப்பாங்கண்டல் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் கணிசமானோருக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுத் தொகை வழங்கப் பட்டிருக்கின்றது.

ஏனையோருக்கும் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

இவை தவிரவும் அப்பகுதிகளில் மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் தேவைக ளையும் மேம்படுத்தும் பொருட்டு அனுமதிபெற்ற சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தற்காலிக வீடுகள், நிரந்தர வீடுகள் உள்ளடங்கலாக பல தேவைகளை யும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க 33 வாக்குச் சாவடிகள்

இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கென வவுனியா மெனிக்பாம் வலயம் – 2 மற்றும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

dis.bmpதேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆளடையாளத்துடன் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கென மெனிக்பாம் வலயம் இரண்டில் 17 வாக்குச் சாவடிகளும், இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத நிவாரணக் கிராமங்களில் அல்லாதவர்களுக்கென வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 16 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்க ப்பட்டுள்ள எட்டு ஆளடையாள அட்டை களும் இல்லாதவர்கள் உடனடியாக வவு னியா உதவித் தேர்தல் திணைக்களத் துடன் தொடர்புகொண்டு ஆளடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதற்காக இலவச பஸ் சேவையை பெற்றுக்கொள்ள காமினி வித்தியாலயத்துக்கு செல்லவேண்டும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உள்ளடங்கிய வன்னி மாவட்டத்தில் 209 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தாம் வதியும் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பிக்காத, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் உடனடியாக மாவட்ட செயலகம், மற்றும் நிவாரணக் கிராமங்கள் அமை க்கப்பட்டுள்ள விசேட கரும பீடத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

13 நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவன் நேற்றுச் சடலமாக மீட்பு

boy.jpgசாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று  நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபிலநாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் புதைகுழியில்  இருந்து மீட்கப்பட்டது.

மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
குடாநாட்டில் சற்று அமைதி நிலை தோன்றிவரும் இவ்வேளையில், மேற்படி  சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர் அருள் விநாயகர் மோட்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.திருச்செல்வத்தின் மகனான கபிலநாத் என்பவராவார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஜி.சீ.ஈ (சாதாரண) தர வகுப்பு மாணவன். கடந்த டிசெம்பரில் நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.

பொதுமக்கள் கைவிட்டு வந்த வாகன பட்டியல்…

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் கைவிட்டுவந்த வாகனங்கள், பற்றிய விபரங்களடங்கிய பட்டியல் வவுனியா மாவட்ட செயலகம், மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

தமது வாகனங்கள், உடைமைகள் குறித்து உரிமை கோருபவர்கள். தகுந்த ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும் வருமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று மேலும் 500 மோட்டார்சைக்கிள்கள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டன. இதுவரை சுமார் 6000க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கென 16 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.