13

13

போய்ச்சேருமிடம் சுனாமி (Destination Tsunami): ஒரு உல்லாசப் பயணத்தின் கதை!

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தமிழ் நாட்டினதும், கேரளத்தினதும் தென்பகுதிக் கரையோரங்களிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரங்களிலும் ஒரே இரவில் ஏற்படுத்திய உயிரழிவும் அனர்த்தங்களும் யாவரும் அறிந்ததே. சுனாமிக்குப் பின்னர் அப்பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து டூரிஸம் கென்சேர்ண்(Tourism Concern) எனும் அமைப்பு அண்மையில் லண்டன் மெற்றோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் (London Metropolitan University) ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இக்க்கருத்தரங்கில் விசேட பேச்சாளராக கேரளாவில் இருந்து சஜீர் ரஹ்மான் பங்கு பற்றியிருந்தார். சஜீர் கபனி எனப்படும் சமூக நல செயற்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர். கேரளத்தின் தென்பகுதிக் கடற்கரையோரங்களில் பல நூற்றண்டுகளாக வாழ்ந்து வரும், மீன் பிடித்தலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு அவர்களது குடிசைகள் இருந்த இடங்கள் எவ்வாறு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கான விடுதிகளாகவும், ஹோட்டல்களாகவும் மாற்றப்படுகின்றன என்பதை விபரித்தார்.

பல்கலைக்கழ மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாடாளர்கள் நிறைந்திருந்த கருத்தரங்கில் சஜீர் தமது அமைப்பின் பணிகளை தெளிவாக விளக்கினார். தமது அமைப்பினால் கவனமெடுக்கப்படும் பிரதேசங்களில் உள்ள மக்கள் கடல் சார்ந்து வாழ்பவர்கள் எனவும் அவர்களது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த இடங்களிலிருந்து அவர்கள் அகற்றப் படுவதாகவும் பெரும் வணிக நிறுவனங்கள் கேரள அரசின் சுற்றுலாப் பயணத்துறையின் ஆசீர்வாதத்துடன் எவ்வாறு அந்த நிலங்களை அபகரிக்கின்றன என்பதையும் விபரித்தார். தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றி எவ்விதமான மாயப் பிம்பங்களையும் ஏற்படுத்த அவர் முயலவில்லை. இந்த சுமூகங்களின் மக்களது மனநிலையில் சுனாமி ஏற்படுத்திய அவலமான தாக்கத்தை பெரும் வணிகம் எவ்வாறு தனது இலாப நோக்கத்திற்கு பயன்படுத்த முயல்கிறது என்பதையும் இம்மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்கள் தூர நோக்கின்றி எவ்வாறு உடனடிப் பொருள் ஆதாயத்தினை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன என்பதையும் விபரித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களது நிவாரணத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி எவ்வாறு கேரள அரசின் சுற்றுலாத்துறையினால் உல்லாசப் பயண மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விபரித்தார்.

கடல் சார்ந்து வாழும் மக்களை கடற்கரைகளிலிருந்து அகற்றும் பிரதான நோக்குடன் அவர்களுக்கு தூர இடங்களில் தொடர் மாடி வீடுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது தொழில் நிமித்தம் கடலுக்குச் செல்வதற்கு வருமானத்தின் ஒரு பகுதியை பிரயாணச் செலவுக்காக இழக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். அதைவிடவும் கடுமையானது என்னவெனில் உல்லாச விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்களது படகுகளை நிறுத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுவதும், விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்கள் நடமாடுவதற்கு (கடற்கரையில் நடந்து செல்வதற்குக் கூட) தடை விதிக்கப் பட்டுள்ள நிலையும் எனக் கூறினார். தமது அமைப்பு உல்லாசப் பயணத்துறைக்கு எதிரானதல்ல என்றும் உல்லாசப் பயணம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை அபகரிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை பாதிப்பதையும் இலகுவில் மாறுபடக் கூடிய கரையோர சுற்றுச்சூழல் (coastal ecology) மாசடைவதையும் தடுப்பதே தமது அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார். கரையோரங்களுக்கு வரும் உல்லாசப் பயணிகளால் கரையோரங்களில் வாழும் சமூகங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கபனி அமைப்பின் பணிகள் தொடர்பான ஒரு புகைப்படக் கண்காட்சி லண்டன் கார்டியன் கேலரியில் (The Guardian Gallery, King’s Place, 90 York Way, London N1 9GU) மார்ச் 31 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. டூரிஸம் கென்சேர்ண் அமைப்பு இக் கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளது.

கம்பனியின் பணிகள் டூரிஸம் கென்சேர்ண் அமைப்பின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருவதாக அதன் அமைப்பாளாரான தான்யா கூப்பர் (Tanya Cooper) தெரிவித்தார். ஸ்ரீ லங்காவில் தாம் மேற்கொண்ட இத்தகைய பணியை தாம் முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக அவர் சொன்னார். அதற்கான காரணத்தை வினவியபோது, பாதுகாப்பு என்ற பெயரில் தமது பணியாளர்களின் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் பட்டதால் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிரதேசங்களில் தமது பணியைத் தொடர முடியாமல் இருந்ததை குறிப்பிட்டார். எனினும் அறுகம் பே பகுதியில் ஒரு ஹெலிபாட் (helipad) அமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை உள்ளூர் மக்களும் சிறு வர்த்தகர்களும் சேர்ந்து எதிர்த்ததன் மூலம் முறியடித்ததை மக்கள் போராட்டத்தின் சிறந்த உதாரணமாக தான் கருதுவதாக தெரிவித்தார். தமது பணி ஸ்ரீலங்காவில் முடிவுக்கு வந்துவிட்டாலும் அந்நாட்டு மக்களது மனித உரிமைகள் தொடர்பாக தமது அமைப்பு ஒரு அறிக்கையை தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கினதும் வடக்கினதும் கடற்கரைகள் பெரு நிறுவனங்களுக்கு விலை போவது பற்றி தமது அமைப்பு அக்கறை கொள்வதாகவும் தெரிவித்தார்.

http://www.tourismconcern.org.uk/index.php?page=destination-tsunami

சர்வதேசத்தில் 2/3 பெரும்பான்மை நாடுகள் இலங்கைக்கு சாதக நிலைப்பாடு

 mahinda-samarasinha.jpgசர்வ தேசத்தில் உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான் மையான நாடுகள் இலங்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மொத்த நாடுகளின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான நாடுகள் இலங்கைக்குச் சாதகமாகவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பில் மேற்கொள்ள உத்தேசித் துள்ள நடவடிக்கையைக் கண்டித்து அணிசேரா நாடுகளின் தலைவரான எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அணிசேரா அமைப்பில் உள்ள 124 நாடுகளின் சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது- ஐ.நா. சபையில் அங்கத்துவம் பெறும் 194 நாடுகளில் மூன்றிலிரண்டு பெரும்பான் மையைவிட அணிசேரா நாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது” என்று அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

“ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்தும் யோசனையொன்றை 16 நாடுகள் இணைந்து முன்வைத்தன. இதனையடுத்து, ஆணைக்குழுவுக்கு வருமாறு இலங்கைக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. இலங்கை முன்வைத்த யோசனை ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சரத் பொன்சேகா முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை வெளியிட்டதால் முடிந்த பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. நானும் (அமைச்சர் சமரசிங்க) சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ¤ம் ஜெனீவா சென்று மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் வேறு நாடுகளின் தூதுவர்களுக்கும் நிலைமையை விளக்கினோம். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்வைத்த ஆவணம் சட்ட வலுவற்றது.

விசாரணைக்காக அல்ல என்று கூறப்பட்டபோதிலும், அவர்கள் குறிப்பிட்டதைப்போல் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான சம்பவங்கள் குறித்து ஆராய ஆறுபேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்தார். அந்தக் குழு ஏப்ரல் மாதம்வரை தனது விசாரணைகளை மேற்கொள்ளும்.

இந்தப் பின்னணியில்தான், போர்க்கால சம்பவங்கள் குறித்து ஆராய நிபுணர்கள்கொண்ட குழுவொன்றை நியமிக்க எண்ணியுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பாக்கி மூன் கடந்த மார்ச் இரண்டாந் திகதி ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதன் பின்னர், தொலைபேசியூடாகவும் ஜனாதிபதியைத் தொடர்புகொண்டார். அப்போது அந்தக் குழு நியமிக்க வேண்டிய அவசியம் இல்லையென ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும் நேற்று முன்தினம் அணிசேரா நாடுகளின் தலைவர்பான் கீ மூனின் உத்தேச செயற்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தகவல் தருகையில்; ஐ.நா. வுக்கான வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன மேற்கொண்ட தொடர்பாடல்களை அடுத்தே அணிசேரா நாடுகளின் தலைவர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பலம்மிக்க பாராளுமன்றம் அவசியம் – ஜனாதிபதி

president.jpgஎந்தவித சக்திகளிலும் தங்கியிராத பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்ற மொன்றை அமைப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தைத் தேர்தலின் பின் நாம் மறந்துவிடவில்லை. யுக யுகமாக அதனை முன்னெடுத்து ஆசியாவின் ஐஸ்வர்யமிக்க நாடாக இலங்கையை உருவாக்க நாம் கட்டுப்பட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘மஹிந்த சிந்தனை’ எதிர்காலத்திட்டம் சம்பந்தமாக தொழிற்சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

மஹிந்த சிந்தனையை வெளியிட்டு நாம் அதன் மூலம் செயற்பட்டோம். மக்கள் பிரசாரங்களால் அதனை அறிந்து கொள்ளவில்லை. நாட்டில் மேற்கொள்ளப் பட்ட அபிவிருத்தித் திட்டங்களே மஹிந்த சிந்தனையை மக்களுக்குக் காண்பித்தன. அதன் மூலம் நாம் சொன்னதைச் செய்தோம். அதுவே அத்திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மூலம் நாம் 350 ரூபாவுக்கு உரம் வழங்குகிறோம் என்றதையும் நாட்டை ஒன்றிணைப்போம் என்று உறுதியளித்ததையும் நம் தலைவர்கள் பலர் நம்பவில்லை.  அதை பகற்கனவு என்றனர். பிரபாகரன் கூட இதெல்லாம் மஹிந்தவின் கனவு எனவும் குறிப்பிட்டதை மறந்துவிட முடியாது.

கடினமானது கஷ்டமானது என எதனையும் நாம் செய்யாமலிருக்கவில்லை. கைவிட்டு தப்பியோடவும் நினைக்கவில்லை. கஷ்டம் கடினம் என்றில்லாமல் நாட்டுக்கு எதுதேவையோ அதனை முன்கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றினோம். மஹிந்த சிந்தனையானது இந்நாட்டு மக்கள் இழந்ததை மீளப்பெற்றுக் கொடுக்கும் கொள்கைத் திட்டமாகும். பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு உரிமையில்லாத நிலை இருந்தது. ஒன்றிணைந்த நாடு எமக்கு இழக்கப்பட்டிருந்தது.

மஹிந்த சிந்தனை மூலம் இவற்றை நாம் நிறைவேற்றியது மட்டுமன்றி நாட்டிற்கும் மக்களுக்குமான கெளரவத்தையும் பெற்றுக்கொடுத்தோம். சுதந்திரம், சமாதானம், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றையும் மஹிந்த சிந்தனை மூலம் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. முழு உலகமே பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுத் தவித்த வேளையில் எம்மால் துணிவுடன் எழுந்து நிற்க முடிந்தது.

சுதந்திரத்தின் பின்னர் உருவான பல்வேறு நாட்டினதும் நகலாக நாம் இருக்கக் கூடாது. சிலர் இந்த நாட்டைச் சிங்கப்பூராக்குவோம் என்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பை இங்கு திணிக்கப் பார்த்தார்கள். வேறு நாடுகளில் வழங்கப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வுகளை இங்கும் நடைமுறைப்படுத்த தயாராகினர்.

இதனால் எமது தனித்துவம் இல்லாது போகும். நாம் அதற்கு இடமளிக்கவில்லை. நாம் எந்த நாட்டினதும் நகலாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் இலங்கையை இலங்கையாகக் கட்டியெழுப்பவே மஹிந்த சிந்தனை மூலம் முயற்சித்தோம். அரசியல் ஆரம்பமாவது மக்கள் ஒன்றிணையும் இடத்தில்தான். நாம் மக்களிடம் சென்று அவர்களுடன் செயற்பட்டு, அவர்களிடம் பாடம் கற்று அவர்களுக்குச் சேவை செய்தே அரசியலைக் கற்றுக் கொண்டோம்.

மஹிந்த சிந்தனையைத் தயாரித்தது வெளிநாட்டு நிபுணரல்ல. நம் நாட்டு சாதாரண மக்களின் தரிசனமே மஹிந்த சிந்தனை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தொழிற்சங்கப் போராட்டங்களின் போது உயிரைத் தியாகம் செய்த தொழிற்சங்கவாதிகளின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஞாபகச் சின்னம் மற்றும் உதவித் தொகையொன்றையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியத்தை ஏப்ரல் 6 இல் வழங்க ஏற்பாடு

sri-lankan-money.jpgஏப்ரல் மாதத்தின் ஓய்வூதியப் பணம் (ஏப்ரல்) ஆறாம் திகதி வழங்கப்படும். ஓய்வூதிய திணைக்களத்தின் முந்திய அறிவிப்பின் பிரகாரம் ஏப்ரல் மாதம் எட்டாம் திகதியே ஓய்வூதியப் பணம் வழங்கப்படவிருந்தது. ஏப்ரல் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாதத்துக்கான ஓய்வூதியச் சம்பளம் 6ம் திகதி வழங்கப்படும் என ஓய்வூதியத் திணைக்களம் மாற்றியமைத்துள்ளது.

சமஷ்டி தீர்வை வலியுறுத்தி தமிழ்க் கூட்டமைப்பு விஞ்ஞாபனம்

jaffna.jpgஇணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி கட்டமைப்பு அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதாக அரசியல் தீர்வுகாணப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் இது ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

யாழ்நகரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே அரசியல் தீர்வு தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இச் செய்தியாளர் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் 11 வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதுடன் அவர்கள் இலங்கைத்தீவில் ஏனைய இனத்தவருடன் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகவும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அதிகாரப் பகிர்வுக்கான முக்கியமான அம்சமாக கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன்,நிலம், சட்டம், ஒழுங்கு ,கல்வி, சுகாதாரம், சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள், நிதி என்பனவற்றுக்கான அதிகாரங்களைக் கொண்டதாகவும் அதிகாரப்பகிர்வு அமையவேண்டுமெனவும் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வட,கிழக்கில் வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஏற்பாடு செய்தல், உயர்கல்வி வசதிக்கான ஏற்பாடுகள் வட, கிழக்கு இராணுவ சூன்யப்பகுதியாக்குதல்,இடம்பெயர்ந்த மக்களை கௌரவமான முறையில் மீளக்குடியமர்த்துதல், தடுப்பு காவலில் குற்றம் சுமத்தப்படாதிருப்பவர்களை விடுவித்தல், ஏனையோருக்கு பொதுமன்னிப்பு போன்ற வலியுறுத்தல்களும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள விஞ்ஞாபனத்தில் உரிமைகளை பெற்றுக்கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 93 ஆயிரத்து 800 பேர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோரில் 4942 பேர் திரும்பவில்லை – அமைச்சர் சமரசிங்க

இடம் பெயர்ந்த மக்களுள் இன்னமும் 93,823 பேர் மட்டுமே மீளக் குடியமர்த்தபடவுள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த மார்ச் 10ஆந் திகதிய கணக்கின்படி வவுனியாவில் உள்ள முகாம்களில் 61,898 பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1347 பேர் உள்ளனர். வைத்தியசாலைகளில் 1604 பேருமாக மொத்தம் 64849 பேர் முகாம் களில் உள்ளனர் என்று கூறிய அமைச்சர் சுதந்திரமாக நடமாட 24032 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலும் 4942 பேர் குறித்த தினத்தில் திரும்பி வரவில்லை யென்றும் கூறினார்.

இவ்வாறு 28974 பேர் சுதந்திரமாக நட மாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

‘மிஹின்’ லங்கா சேவை இலாபத்தில் மேலுமொரு விமானத்தை கொள்வனவு செய்யத் திட்டம்

mihin-lanka.jpgமிஹின் லங்கா விமான சேவை கடந்த மூன்று மாதங்களுக்குள் அதி கூடிய இலாபம் கண்டிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்தார். கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களில் 300 சதவீத இலாபம் அடைந்ததன் மூலம் தமது வாக்குறுதியை காப்பாற்றி யுள்ளோமெனவும் அவர் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இத னைத் தெரிவித்தார். மிஹின் லங்காவின் பிரதான குறிக்கோள் தலயாத்திரிகர்களுக்கும் வெளி நாட்டுப் பணிப்பெண்களுக்கும் குறந்த செலவில் சேவை வழங்கு வதாகும்.

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிதாக இன் னொரு விமானத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம்.

அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள் விமானச் சீட்டின் கட்டணத்தை 10 தவணைகளில் செலுத்துவதன் மூலம் வெளி நாடொன்றுக்கு பயணம் செய்யலாம். இந்த சலுகையை இராணுவ வீரர்களுக்கும் வழங்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை பேங்கொக்கிலுள்ளவர்களை சலுகையடிப்படையில் இலங்கைக்கு அழைத்து வரும் திட்டமொன்றினை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்த 5 ஆண்டு தேசிய செயல் திட்டம் – முதற்கட்ட பணிப்பூர்த்தி; சர்வதேசத்திடம் கையளிக்கவும் ஏற்பாடு

மனித உரிமைகளை உறுதிப்படுத்து வதற்கான தேசிய செயல்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய செயல்திட்டம் முழுமைப்படுத்தப் பட்டதும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தப்படுமென்று கூறிய அமைச்சர், அதனை ஐரோப்பிய ஆணைக் குழுவுக்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

”மனித உரிமைகள் விடயத்தில் பிர ச்சினை இல்லை என்று நாம் கூற வில்லை. பல சவால்களும் உள்ளன.

எனவேதான் 2010 முதல் 2015 வரையிலான ஐந்தாண்டு தேசிய செயல்திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம்” என்று அமைச்சர் கூறினார். செயல்திட்டம் பூர்த்தி செய் யப்பட்டதும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார். ஒன்றரை வருடத்துக்கு முன்னரே இதற்கான பணிகள் ஆரம்பமானதாகக் கூறிய அமைச்சர் இது வெறுமனே ஜீ.எஸ்.பீ சலுகைக் காகவன்றி பொதுவாக நிலைப்பா ட்டை எடுத்துரைக்கும் திட்டமாக இருக்குமென்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டுச் சூழ்ச்சிகளை முறியடிக்க உழைக்கும் வர்க்கம் தயாராக வேண்டும்

alevi-maulana.jpgஉள்நாட்டி லிருந்து எழும் அழுத்தங்கள் சூழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க உழைக்கும் வர்க்கத்தினர் தயாராக வேண்டுமென சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தெரிவித்தார். தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். எதிர்வரும் 8ம் திகதி நாம் பெற்றுக்கொள்ளும் வெற்றி அதற்கு சிறந்த வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘மஹிந்த சிந்தனை’ எதிர் காலத் திட்டத்தைத் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு விளக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் அலவி மெளலானா தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

தொழிலாளர் வர்க்கம் எப்போதும் ஜனாதிபதியுடனேயே உள்ளது. கடந்த தேர்தலிலும் அவர்கள் முழுமையான ஆதரவினை வழங்கினர். நாட்டிலுள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை 75 வீதமானோர் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கே தமது முழுமையான ஆதரவினை வாங்குவார்கள் என்பது உறுதியாகிவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் சவால் குறித்து கவலையில்லை – அநுரகுமார

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் வெற்றிக் கிண்ணத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு அவர் விடுத்த சவால் குறித்து எந்த அச்சமும் கிடையாதென ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய பட்டியல் உறுப்பினரும் ஜே.வி.பி. பாராளுமன்ற குழுத் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜனநாயக தேசிய கூட்டணியின் அலுவலகத்தில்   வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அநுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பொதுத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வருவேன்.ஆனால் வெற்றிக்கிண்ணம் சின்னத்தில் எவராவது பாராளுமன்றத்துக்கு வந்திருந்தால் நான் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு நான் திரும்பிச் சென்று விடுவேன். பாராளுமன்றம் வரமாட்டேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அநுரகுமார திஸாநயக்க எம்.பி.;ஒருவர் தன்னிடம் இருக்கும் ஒன்றைக் கொண்டுதான் பந்தயம் கட்ட வேண்டும். ஆனால், இது புதுமையான பந்தயம் அவரால் (மேர்வின் சில்வா) தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முடியாது.அவர் எம்.பி. ஆக மாட்டார் என்பதால் நாம் இதுபற்றி எந்த அச்சத்தையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.