13 நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவன் நேற்றுச் சடலமாக மீட்பு

boy.jpgசாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று  நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபிலநாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் புதைகுழியில்  இருந்து மீட்கப்பட்டது.

மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
குடாநாட்டில் சற்று அமைதி நிலை தோன்றிவரும் இவ்வேளையில், மேற்படி  சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர் அருள் விநாயகர் மோட்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.திருச்செல்வத்தின் மகனான கபிலநாத் என்பவராவார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஜி.சீ.ஈ (சாதாரண) தர வகுப்பு மாணவன். கடந்த டிசெம்பரில் நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Comments

  • Rohan
    Rohan

    யாரோ இங்கே புலி வீழ்ந்த பின் வெள்ளைவான் கடத்தல்கள் நின்று விட்டதாக கூரை மீது ஏறிநின்று கூறியதாகவும் வந்தவர் போனவர் எல்லோரிடமும் அதக்கு ஏன் பதில் கூறவில்லை என்று சவால் விட்டதாகவும் நினைவு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கடத்தப்பட்ட மாணவனைச் சடலமாக மீட்ட பொலிசார், அநத மாணவனைச் சடலமாக்கியவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? எவராவது ஆதாரபூர்வமாகக் கொடுத்த தகவல்களின்படி தானே, டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில் புதைகுழியிலிருந்து மாணவனின் சடலத்தை மீட்டனர். எனவே உடனடியாக சரியான நடவவடிக்கைகையை, யாழ் பொறுப்பதிகாரிகள் மேற்கொள்ளுவதே, அந்த மக்களுக்காக பாதுகாப்பை உறுதி செய்யும்…..

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அநத மாணவனைச் சடலமாக்கியவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? எவராவது ஆதாரபூர்வமாகக் கொடுத்த தகவல்களின்படி தானே,….///

    ஏனென்றால் தவல்கள் சுட்டிக்காட்டுவது ஸ்ரீலங்கா அரச ஆதரவுக்கட்சி பக்கமே! தற்போது தேர்தல் வர இருப்பதால் சில விடயங்கள் ‘மறைக்கப்படுகிறது’.

    Reply
  • மாயா
    மாயா

    இறந்த மாணவனைக் கடத்திக் கொலை செய்தவர் என , அவரது சக தோழனான காந்தீபன் (17) கைது செய்யப்பட்டுள்ளார். இக் கொலை தொடர்பாக மற்றுமொருவர் தேடப்பட்டு வருகிறார்.

    Reply
  • Ajith
    Ajith

    கடத்தப்பட்ட மாணவனைச் சடலமாக மீட்ட பொலிசார், அநத மாணவனைச் சடலமாக்கியவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்?
    Dear Parthipan,
    The answer is simple. Did you ever heard any of the abductions and murders happened in Sri Lanka since Rajapkse came to power were investigated and those who responsible charged in Courts. It is very clear who did this and what protection they have under this regime. Last week MTV/Sirasa media were attacked by a group of people and police arrested 16 people. There is clear CCT evidence to identify those criminals. Unfortunately all 16 were released after intervention from high level.

    Reply
  • palli;
    palli;

    றோகன் உங்கள் ஆதங்கம் நியாயமானது எனஇருப்பினும் அதை சொல்லும் நேரம் இதுவல்ல; பார்த்திபன் சொன்னது போல் இந்த கொடூரத்தை செய்தத்து யார்? அவர்கள் இதுவரை கைது செய்யபடாதது ஏன்? என்பதே கவலைக்கு உரிய
    விடயம், இதை செய்தவர்கள் யாராயினும் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை இலங்கயில் மட்டுமல்ல உலகத்திலேயே இப்படியான கொடூரம் நடப்பதை தடுக்கும் வகையில் இருக்க வேண்டும், இதில் எமது குரல்கள் ஒன்றாகவே இருக்கட்டும்;

    Reply
  • Appu hammy
    Appu hammy

    நாம் எமது விடுதலைக்கு சிந்தியது இரத்தம் மட்டும் இல்லை அளப்பெரிய உயிர்த் தியாகமும் கூட ஆனால் ஒரு அற்ப சாமியாரோடு ஒரு விடுதலைப் போராளியை ஒப்பிடுவது மிகவும் வேதனையான விடையம் விடுதலையை வென்றெடுத்த மக்களால் கொடுத்த விலைகள் அதிகம் அப்படிப் பார்க்கும் போது விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக செயல்ப்பட்ட சக்த்திகளை தண்டிப்பது என்பது தவிர்க்க முடியாதது மாற்றுக் கருத்து வேறு தாய்மண்ணைக் காட்டிக் கொடுப்பது வேறு எப்படிப் பட்ட திரோகிகள் தண்டிக்கப் பட்டது உண்மைதான்

    ஒரு உதாரணம் ஆனையிறவுத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப் பட்டு முதல் முதல் பெரும் தாக்குதலை தொடுத்தது புலிகள் சேனை ஆனால் கடைசியில் தோல்வியில் முடிவடைந்த்தது மட்டும் இல்லை முண்ணுறு போராளிகளையும் இழந்து ஏன் என்ற கேள்வியோடோ அன்றைய பிரதித் தலைவர் மாத்தையா நின்ற வேளை புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தகவலின் படி பிடிபட்டார் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கொண்டைக்டரர் சண்முகநாதன் எவர் புலிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி போராளிகள் நின்ற விபரங்கள் எல்லாம் சிங்கள ராணுவத்துக்கு வழங்கிப் பெரும் பணத்தை சம்பாதித்தார் எவரோடு என்னும் சிலர் சேர்ந்து பிடிபட்டனர்

    ஏன் என்னுடைய தனிப்பட்ட வாழ்வுக்காக ஒரு இனத்தின் விடுதலையை விலை பேசுகின்றீர்கள் எதனால் அன்று முண்ணுறு போராளிகளை நாம் காவு கொடுத்தோம் எந்த ஆனையிறவு முகாமில் இருந்து ஏவுகின்ற ஆட்லறிகள் எத்தனை உயிர்களைக் காவு கொண்டன நான் ஒன்றும் புலிகளுக்கு ஆதரவாக எழுத வில்லை அந்த இடத்தில் யார் நின்று போராடியிருந்தாலும் இதைத்தான் கூறியிருப்பேன் ஆனால் எவர் ஒரு தடை செய்யப்பட்ட முன்னாள் அமைப்பை சேர்ந்தவர் என்றால் பளிதீர்த்துள்ளார் என்று நாம் எண்ணிவிடலாம் ஆனால் எவர் தன தனிப்பட்ட வாழ்க்கையை உயர்த்த செய்தது மிகவும் கேவலம்

    இப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப் பட்ட தண்டனை மீண்டும் எப்படியான வேலைகளை செய்வதை தடுப்பதுக்கு என்றுதான் நாம் எடுக்க வேண்டுமே ஒழிய அதை புலிகள் செய்த கொலை என்று யாரும் கருத முடியாது விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்பது ஒன்றும் கிளித்தட்டு விளையாட்டு இல்லை ஆனால் புலிகள் பல சதிகள் பல காட்டிக்கொடுப்புகள் பல முதுகில் குத்தல்கள் உள்வீட்டுத் திரோகம் வெளிவீட்டுத் திரோகம் என்று எத்தனையோ சதிகள் எல்லாம் முறியடித்து தமிழீழத்தின் பாதுகாப்பு வியூகத்தை அமைத்து வந்தார்கள்

    ஆனாலும் இத்தடவை உள்வீட்டுத்திரோகம் மட்டும் இல்லை வெளிவிட்டு சதிகளையும் பாவித்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது ஏதோ உண்மைதான் எனினும் விடுதலைப் போராட்டம் ஆயுத மவுநிப்புத்தான் நடந்திருக்கின்றதே ஒழிய புலிகளின் தமிழீழ வலைப் பின்னல் போராட்டம் முடிவடையவில்லை எதை யாரும் முடித்து வைக்க முடியாது அதை முடிக்கும் பொறுப்பு புலிகளிடம் தான் உள்ளது அது விடிவின் பின்தான் நடக்கும் எல்லோரும் கூறுவதுபோல் முப்பத்தியாறு வருட விடுதலைப் போராட்டத்தை வெறும் ஆயுத மவுநிப்போடு விட்டுவிட்டுப் போவதற்கு புலித்தலைமை ஒன்றும் சாதாரண சுயநல அரசியல் வாதிகள் இல்லை

    எனவே எழுதும் போது தமிழ் தேசியம் ஒன்று உள்ளது அதுதான் தமிழன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை மறக்காமல் நினைவில் வைத்து எழுதுங்கள் அற்ப ஆசைகளுக்காக என் தேசத்தைக் காட்டிக் கொடுக்காதீர்கள் ஏதேனும் உங்களுக்குள் மாற்றுக் கருத்து இருந்தால் அதை தமிழீழ அரசு வந்தபின் விவாதிங்கள் எதுதான் தமிழனுக்கு நல்லதைப் பகிரும் இல்லையேல் உங்களுக்குள் எதிரி உடுருவி தமிழனை சிதைத்துக் கொண்டே இருப்பான் என்பதுதான் என் கருத்து

    ஒன்று மட்டும் உண்மை தந்தை அடித்தது உண்மை ஆனால் ஏன் அடித்தார் என்பதை உணராமல் திருப்பி தந்தைக்கு அடிக்க நினைப்பது எவ்வளவு முட்டாள்த் தனம் அதைப் போன்றதுதான் விடுதலைப் போராட்டத்தைக் கட்டிக் காத்து கடைசியில் ஒரு தமிழீழ அரசை நிறுவி தமிழீழ மக்களுக்கு ஒரு விடிவைத் தேடிக் கொண்டிருந்த வேளைதான் காட்டிக் கொடுப்புகளும் திரோகங்களும் நடந்தேறின எவைகளை நீங்கள் சற்று யோசிக்க வேண்டும் ஒருவன் அடித்து விட்டால் திருப்பி அடிக்கும் முன் ஏன் அடித்தான் என்று யோசித்தால் பிரச்சனைகள் எல்லாம் ஒரு அளவுக்குத் தீர்ந்து விடும்

    Reply
  • NANTHA
    NANTHA

    ரோகன் போன்றவர்கள புலிகளின் இணையத்தளங்களில் வந்த செய்திகளைப் படித்தது தவிர உண்மைகளைக் கண்டு பிடிக்க முடியாது.

    கடத்தப்பட்ட சிறுவனின் “காதல்” கதை பற்றி வேறொரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இது குடும்பங்களுக்கிடையே தோன்றிய பிரச்சனையின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை.

    பார்த்திபனின் கேள்வி சரியானதே. சடலம் புதைக்கப்பட்டிருக்கும் இடம் வரை அடையாளம் காட்டியவர்கள் கண்டிப்பாக கொலைகாரர்களை அறிந்தே இருப்பார்கள்.

    செய்திகளை படிக்காமல் அறியாமல் “புலிப்” பாணியில் தீர்ப்பு கூறி யாரை சந்தோஷப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை! இவர்களுக்கு ஒரு சிறுவன் கொல்லப்பட்டதை வைத்து லாபம் தேடும் புத்தி உள்ளது தெரிகிறது. வெளிநாட்டு புலிவால்கள் இலங்கையில் கொலைகளை வைத்தே சில்லறை சேர்த்த புத்தி இன்னமும் மாறவில்லை.

    Reply
  • BC
    BC

    //Appu hammy- அற்ப சாமியாரோடு ஒரு விடுதலைப் போராளியை ஒப்பிடுவது….//
    இதில் எங்கே சாமியார் வந்தார்? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எல்லா மத சாமியார்களாலும் புலிகளாலும் தமிழர்கள் மோசடி செய்யப்பட்டார்கள் என்பது ஒற்றுமை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவனின் மீது கொலை வெறியாட்டம் நடத்தியவர்கள் வெளிநாடொன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல்களத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களே என்றும் விசாரணைகளின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ….//

    வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு அவர்கள் யார் எனச் சொல்லாமல் ’இருளில்’ வைத்திருக்கிறீர்கள் !

    //….கடத்தப்பட்டிருந்த மாணவனின் தந்தையாரான வர்த்தகர் திருச்செல்வம் அவர்கள் ஏற்கனவே தனது மகனை தேடி கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு தன்னிடம் வந்திருந்ததை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எடுத்துக் கூறியதோடு…//
    ஆள் செத்த பின்னர் தான் தன்னிடம் வந்ததை பொலிசுக்குச் சொல்லி இருக்கிறார். இவர் ‘சமூக சேவைகள் அமைச்சர்’ வேறு!

    //…படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். //

    கொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி சொன்னது எல்லாம் ஈ.பி.டி.பி யைப்பொறுத்தளவில் ‘குறிப்பிடத்தக்கது ‘ என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

    Reply
  • BC
    BC

    புலி வீழ்ந்த பின் வெள்ளைவான் கடத்தல்கள் நின்று விட்டன.இந்த கடத்தலை செய்த கொலைகாரர்கள் யார் எனபதும் தெரியவரும்

    Reply
  • Ajith
    Ajith

    This is a news from Uthyan paper
    கல்லூரி மாணவன் கபிலநாத்தின் படுகொலை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.யின்) நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு
    சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
    அவர் நாட்டை வீட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமானநிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத்திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப்புமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்று முன்தினம் பணிப்புரை விடுத் துள்ளார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….இந்த கடத்தலை செய்த கொலைகாரர்கள் யார் எனபதும் தெரியவரும்….///

    இகொலையில் முக்கிய சந்தேக நபரும் ஈ.பி.டி.பியின் அங்கத்தினருமான ஜீவனைக் கைதுசெய்ய பிடியாணையை திங்கட்கிழமை சாவகச்சேரி நீதவான் திரு.பிரபாகர் பிறப்பித்தார். இவர் கடந்த எட்டு வருடமாக நுணாவில் ஈ.பி.டி.பி முகாமில் இருந்து வர்கிறார்த்துடன் இவர் ஈ.பி.டி.பியின் வேட்பாளராக நிற்கும் சாள்ஸின் உதவியாளராக உள்ளார்.

    Reply
  • மாயா
    மாயா

    இந்தக் கொலை தொடர்பாக தேடப்படுபவர் ஒரு புலி உறுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரும் இறந்த மாணவனது நெருங்கிய நண்பனும் சேர்ந்தே இக் கடத்தலை செய்து பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அது சரி வராது என உணர்ந்ததும் , கொலை செய்து புதைத்து விட்டார்கள் என போலீசில் கைதான 17 வயதையுடைய காந்தீபன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் குறிப்பிட்ட புலி உறுப்பினரைத் தேடுகிறது. இதைவிடுத்து தேசியம் , தேசிக்காய் கதைகளை இன்னமும் அவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர். இப்படியான கடத்தல்களுக்கு அத்திவாரமே புலிகள்தான். வெளிநாட்டில் காசு கொடுக்காத மக்களது உறவினர்களைக் கடத்தி புலிகள் கப்பம் கேட்டது , நல்ல தேசியம்? ஊரில் புலிகளை எதிர்த்தவர்களை கடத்தி புதைத்ததெல்லாம் புலிகளின் தமிழ் தேசியம்? நீங்கள்தான் இங்கும் சூத்திரதாரிகள். நீங்கள் (புலிகள்) இருக்கும் போது ஒரு நாளைக்கு எத்தனை கொலை அல்லது உயிர் இழப்பு இடம்பெற்றது?
    இந்த ஒரு கொலையை வைத்தாவது புடுங்கலாம் என துடிக்கிறது கருத்துகளில் தெரிகிறது.

    புலிகள் இருக்கும் போது நாட்டில் இருந்த மக்கள் அமைதிப் பூங்காவில்தானே படுத்துறங்கினார்கள்?

    Reply
  • palli;
    palli;

    //செய்திகளை படிக்காமல் அறியாமல் “புலிப்” பாணியில் தீர்ப்பு கூறி யாரை சந்தோஷப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை! இவர்களுக்கு ஒரு சிறுவன் கொல்லப்பட்டதை வைத்து லாபம் தேடும் புத்தி உள்ளது தெரிகிறது. வெளிநாட்டு புலிவால்கள் இலங்கையில் கொலைகளை வைத்தே சில்லறை சேர்த்த புத்தி இன்னமும் மாறவில்லை.//
    இதே கேள்வியை நான் உங்களிடம் கேக்கிறேன், யாரை மகிழ்விக்க இந்த சில்லறைதனம்; கொலையில் புலி இல்லை என்பது நிஜம்; அப்படியாயின் யார்?? இதுக்குள்ளுமா? உங்கள் புலி வேட்டை; உங்கள் புலி வேட்டையால் உன்மையான குற்றவாளி தப்பித்து விடுவார் நந்தா??

    Reply
  • Appu hammy
    Appu hammy

    யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் கடத்தப்பட்ட மாணவனான கபில்நாத் கொலையை அடுத்து ஈபிடிபியின் சாவகச்சேரி அலுவலகம் மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மாணவன் கபில்நாத் கொல்லப்பட்டமையை அடுத்து கொலைக்கும் ஈபிடிபி கட்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இந்த நிலையில் சாவகச்சேரிப் பகுதியில் இன்று பிற்பகல் திரண்ட அப்பகுதி மக்கள் அங்கிருக்கின்ற ஈபிடிபி காரியாலயத்தினை முற்றுகையிட்டனர்.

    அதன் பின்னர் ஈபிடிபி அலுவலக பொருட்கள் அனைத்தும் மக்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

    மக்கள் பெரிய அளவில் அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த ஈபிடிபியினர் தப்பி ஓடியுள்ளனர்.

    Reply
  • Ajith
    Ajith

    This is from Minister Douglas
    நேற்று மாலை ஈ.பி.டி.பி. கட்சியின் கடிதத் தலைப்பில் அமைச்சர் டக்ளஸின் அதே ஊடகச் செயலாளர் இன்னொரு அறிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
    “உதயன்’, “சுடர் ஒளி’ ஆகிய ஊடகங்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சுமத்தியிருப்பது திட்டமிட்ட அவதூறுப் பிரசாரங்களே அன்றி இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை. கடந்த காலங்களிலும் தேர்தல் நெருங்கும் தருணம் பார்த்து குறித்த இரு பத்திரிகைகளும் ஈ.பி.டி.பி. மீது மிக மோசமான அவதூறு பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்த நிகழ்வுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
    This is from Daily mirror
    A Jaffna court has issued an arrest warrant on an EPDP member over his involvement in the abduction and murder of a youth in Chaavakachcheri, reports from Jaffna said. Three students were earlier arrested over the murder of Thiruchelvam Kapilthev, a student of Chaavakachcheri Hindu College.

    The Court has also instructed the Department of Immigration and Immigration not to permit the EPDP member to leave the country, reports further added.

    The victim was abducted for ransom from his house last week and the body was later recovered from a house of one of the suspects over the weekend. (Daily Mirror online)

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்த விவகாரத்தில் புலி, யு என் பி ஆதரவு ஊடகங்களில் வந்த செய்திகளை வைத்து புலி ஆதரவாளர்கள் எழுதும் கருத்துக்கள் சரியானவையா என்பது சந்தேகமே. ஆயினும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பல விபரங்கள் வெளிவராத நிலையில் நீதிமன்றத்தில் இனி என்ன நடைபெறும் என்பதை பொறுத்திருந்தே அறிய வேண்டும்.

    புலி ஆதரவாளர்கள் மாயாவின் கருத்தைப் படிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….புலிகள் இருக்கும் போது நாட்டில் இருந்த மக்கள் அமைதிப் பூங்காவில்தானே படுத்துறங்கினார்கள்?…//

    புலி செத்தபின் ஏதோ ‘அமைதிப்பூங்காவாக பூத்துக்குலுங்கும் என அறிக்கை விட்டது யார்?

    Reply
  • thurai
    thurai

    //புலி செத்தபின் ஏதோ ‘அமைதிப்பூங்காவாக பூத்துக்குலுங்கும் என அறிக்கை விட்டது யார்?//சாந்தன்

    புலிகள் சாகவில்லை அரசாங்கத்துடன் ஒரு பகுதியும், நாடுகடந்த அரசுடன் ஒருபகுதியும், உலக வர்த்தகர்களாக் ஒரு பகுதியும், புலத்தில் பதுங்கு புலிகளாகவும், சிறைகளிலும் வாழ்கின்றார்கள். செத்தது புலிகளைக் காப்பாற்ர போரிட்ட அப்பாவி இளம் சமூகமும் ஏழைகழுமேயாகும்.

    துரை

    Reply