இந்தியா, இலங்கையுடன் இணைந்து கல்வித்துறை மேம்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் மூலம் மிக நீண்டகாலமாக இருந்து வரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
கண்டி – பெனிதெனிய வில் அமைந்துள்ள ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் கல்வி நிலையத்தில் இந்தியா – இலங்கை ஆங்கிலம் கற்றல் தொடர்பான ஆசிரியர் மத்திய நிலைய மொன்றையும் மொழியியல் கூடமொன்றை யும் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே செயலாளர் நிருபமா ராவ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இரு நாடுகளுக்குமிடையில் இவ்வாறு ஆங்கில அறிவு தொடர்பான விருத்திகளை முன்னெடுத்து செல்ல மஹிந்த சிந்தனைத் திட்டம் உறுதுணையாக விருந்தது எனவும் கூறினார்.