தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அவரது மகள்மாருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நேற்று முதல் அவருக்கு கையடக்க தொலை பேசியை பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறினார்.
தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இராணுவ தளபதியின் சிறப்புரிமையின் பேரிலேயே சரத் பொன்சேகாவுக்கு கையடக்க தொலைபேசி மகள்மாருடன் மட்டுமே பேச வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள் ளதே தவிர வேறு எவரினதும் உத்தரவின் பேரில் அல்ல என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.