ஏடன் வளைகுடாவில் வைத்து கடந்த திங்கட்கிழமை சோமாலிய கடற்கொள்ளையர் களால் கடத்தப்பட்ட சவூதி அரேபிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் கடத்தப்பட்டது. இக்கப்பலில் இருந்த 14 சிப்பந்திகளில் 13 பேர் இலங்கையராவர்.
இக்கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்க ளுக்கும் சவூதி அரேபிய நிறுவனத்துக்கு மிடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வைக்கும் நோக்கத்துடன் லண்டனில் நிலைபெற்றுள்ள காப்புறுதி நிறுவனமொன்றின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று ஜித்தா சென்றுள்ளார்.
கப்பலில் சிபந்திகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று கடல் கொள்ளையர்கள் கூறியுள்ளபோதிலும் அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் காப்புறுதி நிறுவன அதிகாரியின் வருகையை அடுத்து சாதகமான நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் கவுன்ஸிலர் தாயக மான சபாருல்லா கான் கூறியு ள்ளார்.
கடற்கொள்ளையருடன் செய்மதி தொலைபேசி மூலம் கப்பலுக்கு சொந்தமான சவூதி அரேபியன் நிறுவனம் தொடர்புகொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சோமாலிய கடற் பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலை விடுவிக்கக் கடற்கொள்ளையர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை கப்பமாக கோரி வருகின்றனர்.