2009

2009

41 அரச நிறுவனங்களுக்கு ரூ. 204 கோடி குறைநிரப்பு பிரேரணை – அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் சமர்ப்பிப்பு

வரவு-செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொதுக் கருத் திட்டத்தின் கீழ் 41 அரசாங்க நிறுவனங்களுக்கென 204 கோடியே 13 இலட்சத்து 95 ஆயிரத்து 532 ரூபாவுக்கு குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குறை நிரப்பு பிரேரணையை ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகரின் அனுமதியைப் பெற்று அமைச்சர் இந்தக் குறை நிரப்பு பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

அமைச்சுக்கள், மாகாண சபைகள், அரசாங்க திணைக்களங்கள் அடங்கலான 41 அரச நிறுவனங்களுக்காகவே இக்குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தைத் திருத்துவதற்கென ஒரு கோடியே பத்து லட்சத்து 81 ஆயிரத்து 882 ரூபாவும் இக்குறைநிரப்பு பிரேரணைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மலையக தோட்டங்களிலிருந்து வீட்டு வேலைக்கு சென்றோரின் விபரம் திரட்டும் பணி ஆரம்பம்

091009puttirasigamani.jpgமலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து வெளி இடங்களுக்கு வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகளை இவ்வாரம் ஆரம்பித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ.  புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தகவல்களைத் திரட்டுவதற்காகக் குழுக்களை நியமித்துள்ளதுடன், அதற்கெனத் தனியான ஒரு படிவத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகக் கூறிய அவர் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்குத் தோட்டங்களுக்குத் திரும்புவோரின் தகவல்களைத் திரட்டும் வகையில் விபரப் படிவங்களை விநியோகிக்க குழுக்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

90 தேயிலை தொழிற்சாலைகளை நவீன மயப்படுத்த முடிவு

மஹிந்த சிந்தனையின் கீழ் 90 தேயிலைத் தொழிற்சாலைகள் நவீனப்படுத்தப்படவுள்ளன என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய விவசாய வாரம்

maithripalasirisena.jpg தேசிய ஏர்பூட்டு விழா தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு இம்மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தேசிய விவசாய வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி. கமநல சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 

தேசிய விவசாய வாரத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 11ஆம் திகதி மத வழிபாட்டு நிகழ்வுகளுடன் பொலன்னறுவையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த 2 எம்.பிக்களுக்கு சபையில் நேற்று அனுதாபம்

முன்னாள் எம்.பிக்களான மறைந்த டப்ளியு. எம். ராஜாவெலேகம மற்றும் எச். பி. வன்னிநாயக்கா ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை மீதான உரைகள் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

இந்த அனுதாபப் பிரேரணைகள் மீதான உரைகளைச் சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார். இந்த அனுதாப பிரேரணைகளில் எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரே ராவும் உரையாற்றினார்.

அமெரிக்காவில் 400 க்கு மேற்பட்ட கோடீஸ்வரர்களுக்கு பலகோடி இழப்பு – பொருளாதார வீழ்ச்சியே காரணம்

usflag.jpgபொரு ளாதார வீழ்ச்சி காரணமாக  அமெரிக்காவில் 400 க்கு மேற்பட்ட கோடீஸ்வரர்களுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கபத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல “போர்ப்ஸ்’ பத்திரிகைää இது தொடர்பான பட்டியலை  வெளியிட்டுள்ளது. இதில்ää மிகப்பெரிய கோடீஸ்வரர் வாரன் பப்பட் என்பவரின் “பெர்க் ஷைர் ஹேத்அவே’ நிறுவனத்தின் பங்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. இந்த வகையில் வாரன் தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர் என்று அந்தப் பட்டியல்கூறுகிறது.

எனினும்,  இழப்பில், முதல் 10 பேரில் முதலாவதாக இருப்பவர் பில் கேட்ஸ். இவரது கடந்த ஆண்டு வருமானம் 25 லட்சம் கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை விட 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு.
இரண்டாமிடத்திலுள்ள வாரன் பப்பட்டின் வருமானம் 20 லட்சம் கோடி ரூபாய். மூன்றாவதான “ஒராக்கிள்’ நிறுவனர் லாரன்ஸ் எல்லிசனின்வருமானம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய். எல்லிசன் மட்டும்தான் பெருமளவில் இந்தப் பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்படாதவர் என்கிறது அந்த அறிக்கை.

பொருளாதார மந்தத்தினால்,  2008ல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 43 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 250 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பட்டியலில் குறிப்பிடப்பட்ட முதல்; 10 தொழிலதிபர்களின் மொத்த இழப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பட்டியலின் 400 தொழிலதிபர்களின் மொத்த இழப்பு 19 சதவீதம்.அதாவது ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடியிலிருந்து ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதன் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சாஹித்திய விழா இன்று ஆரம்பம்

மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா இன்று காலை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஆரம்பமாகிறது. சாஹித்திய விழாவினையொட்டி இந்தியாவிலிருந்து விசேட சொற்பொழிவாளர்கள் மூவர் கலந்து கொள்கின்றனர்.

வாணியம் பாடி இஸ்லாமிய கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் அப்துல் காதர், பெங்களூரைச் சேர்ந்த ‘புதுவிசை’ இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா மற்றும் தஞ்சாவூர் பாரதிதாஸன் தமிழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமா வைத்தியலிங்கம் ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர். புதுவிசை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா “புலம்பெயர் கவிதைகளில் முன்னோடிகள் இலங்கை மலையக தமிழர்” என்ற தலைப்பில் உரையாற்ற வுள்ளார்.

இந்த சாஹித்திய விழாவில் 14 பேர் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். இவர்கள் கல்வித்துறை, சமூகசேவை, கலைத்துறை, இலக்கியத்துறை, ஊடகத்துறை, விளையாட்டுத்துறை ஆகியவற்றிற்கான விருதுகள் பெறவுள்ளனர்.

“நூல்’ ஆக்கத்திற்கு 5 பேர் விருது பெறவுள்ளனர். சிறுகதை, நாவல், ஆய்வு, பிறதுறை ஆகிய வெளியீடுகளுக்காகவே விருதுகள் வழங்கப்படவுள்ளன.ஊர்வலம் காலை 9.00 மணிக்கு பாக்கிய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பிக்கின்றது. இதில் 5 ஊர்திகள் ஊர்வலத்தில் செல்லவுள்ளதோடு, திருகோணமலை ‘இனியம்’ தமிழ் இசை பாண்ட் வாத்தியமும் கலந்து கொள்ளவுள்ளது.

ஊர்வலத்தினை தொடர்ந்து விழா 10.30 மணிக்கு மாத்தளை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் மண்டபத்தில் மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆரம்பமாகிறது. கோயில் முற்றத்தில் 18 பாடசாலகள் கலந்து கொள்ளும் “நாளைய மலையகம்” என்ற தொனிப்பொருளில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் அமைச்சு திணைக்களங்களைச் சேர்ந்த இரண்டு கண்காட்சி கூடமும் அமைக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 50 பேர் பலி

pak-boom.jpgபாகிஸ் தானின் பெஷாவார் நகரில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதல் ஒன்றில், சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அங்குள்ள மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட அந்த குண்டு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்று பொலிஸார் கூறுகிறார்கள். பல அரசாங்க கட்டிடங்கள் மற்றும் சனசந்தடி மிக்க சந்தை ஆகியவை உள்ள பகுதியில் அது வெடித்தது.

தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அடுத்து அண்மைக்காலமாக தாக்குதல்களை அதிகரித்திருக்கும் தலிபான்கள் மீது உள்ளூர் அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையினருக்கு விநியோகங்களை எடுத்துச் செல்லும், வாகனங்கள் மீது இருபதுக்கும் அதிகமான ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு இராணுவ அதிகாரியையும் பதவி இறக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை – இராணுவ பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpg “வடக்கில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எந்தவொரு இராணுவ அதிகாரியையும் பதவியிலிருந்து இறக்கவும் இல்லை. இராணுவத்திலிருந்து ஒதுக்கவும் இல்லை” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி. சில்வா, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் சாலி கால்லகே மூவரும் இராணுவத்திலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்களது தரம் குறைக்கப்பட்டு விட்டதாகவும் மங்கள சமரவீர எம். பி. தெரிவித்திருந்தமையை முழுமையாக மறுப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

58 ஆவது படைப்பிரிவுக்கு தலைமையேற்றுச் சென்ற பிரிகேடியர் சவேந்திர டி. சில்வாவை அவரது சிரேஷ்டத் தன்மையையும் பொருட்படுத்தாது மேஜர் ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டார். தற்போது அவர் அதனைவிட உயரிய இடத்துக்கு நியமிக்கப்பட் டுள்ளார். இராணுவ தலைமை யகத்தில் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட் டுள்ளார்.

நிர்வாண போஸ் கொடுத்த டென்னிஸ் வீராங்கனை செரீனா

உலகின் முதனிலை டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். சமீபத்தில் நடந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் போது நடுவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பெரும் தொகையை அபராதமாக செலுத்திய செரீனா இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இவர் ஆங்கில விளையாட்டு இதழ் ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் படமும் பிரசுரமாகி வெளியாகி விட்டது. டென்னிஸ் வீராங்கனை ஒருவர் இது போன்ற நிர்வாண போஸ் கொடுத்திருப்பது விதிமுறைகளுக்கு மாறானதாகும். எனவே இது தொடர்பாக சர்வதேச டென்னிஸ் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

அடுத்த இரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.