பாகிஸ் தானின் பெஷாவார் நகரில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதல் ஒன்றில், சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அங்குள்ள மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட அந்த குண்டு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்று பொலிஸார் கூறுகிறார்கள். பல அரசாங்க கட்டிடங்கள் மற்றும் சனசந்தடி மிக்க சந்தை ஆகியவை உள்ள பகுதியில் அது வெடித்தது.
தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அடுத்து அண்மைக்காலமாக தாக்குதல்களை அதிகரித்திருக்கும் தலிபான்கள் மீது உள்ளூர் அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையினருக்கு விநியோகங்களை எடுத்துச் செல்லும், வாகனங்கள் மீது இருபதுக்கும் அதிகமான ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.