பொரு ளாதார வீழ்ச்சி காரணமாக அமெரிக்காவில் 400 க்கு மேற்பட்ட கோடீஸ்வரர்களுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கபத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல “போர்ப்ஸ்’ பத்திரிகைää இது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்ää மிகப்பெரிய கோடீஸ்வரர் வாரன் பப்பட் என்பவரின் “பெர்க் ஷைர் ஹேத்அவே’ நிறுவனத்தின் பங்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. இந்த வகையில் வாரன் தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர் என்று அந்தப் பட்டியல்கூறுகிறது.
எனினும், இழப்பில், முதல் 10 பேரில் முதலாவதாக இருப்பவர் பில் கேட்ஸ். இவரது கடந்த ஆண்டு வருமானம் 25 லட்சம் கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை விட 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு.
இரண்டாமிடத்திலுள்ள வாரன் பப்பட்டின் வருமானம் 20 லட்சம் கோடி ரூபாய். மூன்றாவதான “ஒராக்கிள்’ நிறுவனர் லாரன்ஸ் எல்லிசனின்வருமானம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய். எல்லிசன் மட்டும்தான் பெருமளவில் இந்தப் பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்படாதவர் என்கிறது அந்த அறிக்கை.
பொருளாதார மந்தத்தினால், 2008ல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 43 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 250 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பட்டியலில் குறிப்பிடப்பட்ட முதல்; 10 தொழிலதிபர்களின் மொத்த இழப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பட்டியலின் 400 தொழிலதிபர்களின் மொத்த இழப்பு 19 சதவீதம்.அதாவது ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடியிலிருந்து ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதன் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.