2009

2009

மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி -பாங்கீ மூன்

u_n__secretarygeneral-visits-idp.jpgவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் இலங்கை அரசுக்கு பாராட்டுக்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் விசேட ஹெலிகொப்டர் மூலம் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை தங்க வைத்துள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அவருடன் ஐ.நா. மனித உரிமைக்கான பிரதிச் செயலாளர் நாயகம் கலாநிதி ஜோன் ஹோம்ஸ், வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஐ.நா. செயலக தலைமை அதிகாரி விஜே நம்பியாருடனும் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றார். அங்குள்ள மக்களுடனும் அவர் உரையாடினார்.

நிவாரணக் கிராமங்களில் மக்களை சுதந்திரமாக வசதியுடன் தங்க வைத்திருப்பது குறித்து செயலாளர் நாயகம் தனது திருப்தியை வெளியிட்டார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் ஆகியோருடன் சென்று நிவாரணக் கிராமங்களை ஐ. நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் பார்வையிட்டார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் புறப்பட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் இறுதியாக மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு, புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதிகளை பார்வையிட்டார். ஹெலிக்கொப்டரில் தாழப் பறந்தவாறு பாதுகாப்பு வலயப் பகுதி என பிரகடனப்படுத்தியிருந்த பகுதிகளையும் பாங்கீமூன் பார்வையிட்டார்.

அங்கிருந்து நேரடியாக கண்டிக்கு வந்த ஐ. நா. செயலாளர் நாயகம் நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

பிரதி கல்வியமைச்சர் மெளலவிமார் சந்திப்பு

பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தனுடன் மெனலவிமார்களுக்கான சந்திப்பு நாளை கல்முனையில் நடைபெறவுள்ளது.

உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் மெளலவி ஆசிரிய நியமனம் சம்பந்தமாக இது வரையில் எடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் பற்றி பிரதி கல்வி அமைச்சர், மெளலவி மற்றும் மெளலவியாக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மெளலவி ஆசிரிய விண்ணப்பதாரிகள் அனைவரும் கலந்துகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 0712946509 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

சமூக சேவையாளரும், கடற்றொழில் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எச். அமீரின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்யும் பிரதியமைச்சர் கல்முனை ஸாஹிரா, கல்முனை பாத்திமா கல்லூரிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

தென்கொரிய முன்னாள் அதிபர் தற்கொலை

_roh_mourninggetty.jpgதென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

2008ல் தான் பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பில் இருந்த ரோ உயிரிழந்தமையை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், அது பெரும் கவலையைத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தனது வீட்டின் அருகில் இருந்த ஒரு மலை முகட்டிலிருந்து கீழே விழுந்ததில் ரோ உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று பொலிசார் கூறுகின்றனர்.

ரோ ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி சென்று படித்ததில்லை, ஊழலற்ற ஆட்சி, வடகொரியாவுடன் சமாதானம் போன்றவற்றை முன்னிறுத்தி நாட்டின் அதிபரானவர் அவர். அண்மைய மாதங்களாக அவர் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அவர் மறுத்திருந்தார்.

மட்டு. மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் 74 பேர் இணைப்பு

2000 தமிழ் பேசும் பொலிஸாரை சேவையில் இணைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பெண்கள் உட்பட 74 பேர் நேர்முகப் பரீட்சையூடாக பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஸ்வாட்டில் மிங்கோரா நகருக்குள் நுழைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது

pakarmy_.jpgஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய நகரான மிங்கோராவுக்குள் தமது படைகள் நுழைந்துவிட்டதாக கூறியுள்ள பாகிஸ்தான் இராணுவம், அங்கு தலிபான் கிளர்ச்சிக்காரர்களுடன் நேரடி மோதல்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கையில், இந்த மோதல்கள் மிகவும் முக்கியமானவை என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் 17 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், தலிபான்களின் பெரும்பாலான வெடிபொருட் கிடங்குகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவம் கூறுகிறது. ஆனால், இந்த இழப்புக்களை தலிபான்கள் மறுத்துள்ளனர்

செவனப்பிட்டி பஸ்-ரயில் விபத்து: மேலும் இருவர் பலி

செவனப்பிட்டி பஸ் – ரயில் விபத்தில் படுகாயம டைந்து வெலிகந்த ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு மாணவன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மொஹமட் இஸ்மாயில் ஹபீபுல்லா என்ற இரண்டாம் ஆண்டு 7 வயது மாணவனே மரணமானார்.

இவரது தாயார் சல்மாவும் நேற்று கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு.

தமிழகம்:117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்

refugee_.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர்.

இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். 

இரா.சம்பந்தன் புதுடில்லி பயணம்!

sampanthan.jpgஇலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லி செல்லவுள்ளார்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்தே கூட்டமைப்பு புதுடில்லி சென்று இந்திய அரசியல் தலைமையைச் சந்திக்கத் திட்டமிட்டது.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பதே 13வது திருத்தத்தின் முக்கிய பகுதியென்பதைக் கூட்டமைப்பினர் இந்தியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்ததுடன், மத்திய அரசாங்கத்திடம் காணப்படும் பெரும்பாலான அதிகாரங்கள் இதுவரை மாகாணசபைகளுக்கு பகிரப்படாமையையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.இந்த விடயம் குறித்து புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரெனவும் இந்தியத் தூதுவர்கள் உறுதிமொழி வழங்கிச் சென்றுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் 48மணி நேரத்துள் சரணடைய வேண்டும் : யாழ். இராணுவத் தளபதி

யாழ்.  குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார்.

அதேவேளை புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கொடுத்து உதவுவது சட்டரீதியான மாபெரும் தவறு என்றும் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்களை படையினரிடம் சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் யாழ். இராணுவத் தளபதி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி

pm-manmogan.jpgஇலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.

மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள வாழத்து செய்தியில்இதனை குறிப்பிட்டுள்ளார்.இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.