யாழ். குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார்.
அதேவேளை புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கொடுத்து உதவுவது சட்டரீதியான மாபெரும் தவறு என்றும் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்களை படையினரிடம் சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் யாழ். இராணுவத் தளபதி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.