2009

2009

முகாம்களிலிருக்கும் சிறுவர்களுக்கு தனியான புனர்வாழ்வு நிலையம் – நீதியமைச்சு தீர்மானம்

school-children000.jpgவவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கென தனியான புனர்வாழ்வு நிலையமொன்றை அமைப்பதற்கு நீதியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் 400 சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான செயற்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாக நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.  புலிகளின் செயற்பாடுகளில் சிக்கியிருந்த 13 வயது முதல் 18 வயதுவரையான சிறுவர்கள் இப்போது வவுனியா முகாம்களில் தங்கியிருக்கின்றர். இவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

இவ்வாறான சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியா வைத்தியசாலையின் கண்காணிப்பின் கீழ், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கல்வி அதிகாரிகளின் உதவியுடனும், யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த செயற்குழு நியமிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.  இந்த சிறுவர்களுக்கான புனர்வாழ்வு முகாம் வவுனியா விவசாயக் கல்லூரியில் அமைக்கப்படவிருப்பதாகவும் நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மாணவி தற்கொலை நீதிமன்ற விசாரணை

hand-phone.jpgகொழும் பிலுள்ள பிரபல தனியார் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாடசாலை நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் மரணமான சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை மேலதிக நீதிவான் ஜிகான் ரணவக்க முன்னிலையில் நடைபெற்றது.  9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியமை தொடர்பாகப் பாடசாலையில் விசாரணை செய்யப்படுவதற்கு முன்னர் குளியலறைக்குச் சென்று கழுத்துப்பட்டியைக் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின்னர் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து சிலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கறுவாக்காடு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் சட்டவைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

வடக்குக்கு மின்சாரம் வழங்க 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கில் உள்ள சகல கிராமங்களுக்கும் அடுத்த இரண்டு வருடத்துக்குள் மின்சார வசதிகளை வழங்குவதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டி. ஜே செனவிரத்தன தெரிவித்துள்ளார்.

வடபகுதிக்கு மின்சார வசதிகளை வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய வேலைத்திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது. 

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா சுற்று வட்டத்திலுள்ள 35 கிராமங்களுக்கு அடுத்த சில மாதங்களில் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைவுள்ளதுடன் அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கிடைத்துவிடும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு சுமார் 2 இலட்சத்து 43 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர்

000stud.jpgஇந்த வருடம் நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 91 மாணவர்கள் தோற்றுகின்றனர்.  இவர்கள் இயல்பு நிலையில் பரீட்சை எழுதுவதற்கு வசதியாக ஆயிரத்து 827 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகி 22 தினங்கள் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் பாடசாலை பரீட்சார்த்திகளாக ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 755 பரீட்சார்த்திகளும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 43 ஆயிரத்து 336 பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 991 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

ஆயிரத்து 827 பரீட்சை நிலையங்களுக்கும் 267 விநியோக நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற்படவுள்ளன. பரீட்சைக் கடமையில் 25,000 பேர் வரையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  பரீட்சைகள் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 7 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

கண்ணிவெடி அகற்றல்; 25 மோப்ப நாய்களுக்கு கண்டியில் பயிற்சி

கண்ணி வெடிகளையும் மற்றும் வெடிபொருட்களையும் கண்டறிவதற்காக வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட 25 நாய்களுக்கு விசேட பயிற்சியை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட இருக்கும் இந்த நாய்கள் ஜேர்மன் ஷெபர்ட், லெபுடோ, பெல்ஜியம் மெலனோய் ஆகிய இனங்களைச் சேர்ந்தவையாகும்.

ஒரு வருட வயதையுடைய இந்த நாய்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வெடிபொருட்களை மோப்பம் மூலம் கண்டறிய பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு : பதிவு செய்யும் செயற்திட்டம் புத்தளத்தில் ஆரம்பம்

housemaids.jpg5 லட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய புத்தளம் மாவட்டத்தில் உள்ள கிராம அதிகாரிகள் பிரிவு தோறும் பதிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  புத்தளம் மாவட்டத்தின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையத்திலேயே மேற்படி பதிவு தொடர்பான செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்து பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள், முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்புத்துறை அமைச்சின் கீழ், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை, முகாமைத்துவமுள்ள, செயற்திறனுள்ளதாக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லவுள்ளவர்கள் குறித்துத் தகவல்களைத் திரட்டவும், அதற்கேற்ப இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 127 பயிற்சி நிலையங்களில் தேவையான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதும் இதன் முக்கிய குறிக்கோள்களாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் சுனில்.எஸ்.சிரிசேன தெரிவித்தார்.புத்தளம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் சுசான் நாணயக்கார உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளுக்கு அமெரிக்கா வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

sri-lankan-doctors.jpgஅமெரிக் காவிடமிருந்து 1.6 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வடக்கு,  கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயும் 2009 யூலை மாதம் 10 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினைத் தொடர்ந்து இந்த வைத்திய உபகரணங்கள் சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளது.

வடபகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைக்கு  26 கொள்கலன்களில்  இந்த  வைத்திய உபகரணங்கள் மிகவிரைவில் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ரியாத்தில் இலங்கை பிரஜை மரணம்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத் தில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரியாத்தில் காலமானார்.

மபாஸ் மொஹமட் சலீம் (31) என்பவரே அவரது விடுதியில் வைத்து உயிரிழந்துள்ளார். அவரை சோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் மாரடைப்பின் காரணமாகவே அவர் மரணித்திருப்பதனை உறுதி செய்திருப்பதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் விவகாரங்களுக்குப் பொறுப்பான சபருல்லாகான் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மரணச் சடங்குகளை ரியாத்திலேயே மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தூதரகம் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் நடத்தி வருவதாகவும் கான் கூறினார்.

துபாயிலிருந்து கொழும்பு வந்துள்ள உயிரிழந்தவருடைய மனைவி சாஸ்னா, அவரது இறுதிக் கிரியைகளை ரியாத்திலேயே நடத்துவதற்கு கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் சம்மதம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரும் அவரது மனைவியும், கொழும்பு 10 ஐச் சேர்ந்தவர்கள், சலீம், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை நிறுவனமான அல் ஹொக் எயர் குறூப் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். உயிரிழந்தவர் சில காலங்களாக தொடர்ச்சியான இருமல் மற்றும் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு இன்று திருநிலைப்படுத்தல் திருப்பலி

m-r1111.jpgகொழும்பு மறை மாவட்ட புதிய பேராயராக பேரருட் திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் திருப்பலி கொழும்பில் இன்று நடைபெறுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை சென்லூசியாஸ் பேராலயத்தில் இது தொடர்பான நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும்.

1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி பொல்கஹவெலவில் பிறந்தவ ராவார்uஎன்பது குறிப்பிடத்தக்கது.

புனரமைக்கப்பட்ட இரு வைத்தியசாலைகள் திறப்பு

sri-lankan-doctors.jpgமட்டக் களப்பில் கடற்கோள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெரியகல்லாறு, பழுகாமம் ஆகிய வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இவ்விரு வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன், யுனிசெப் அதிகாரி, வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.