25

25

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பம் !

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்.மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்ற

முஸ்லீம்களின் தொன்மையான வழிபாட்டிடம் இடித்து அழிப்பு – இம்ரான் மகரூப்  காட்டம் !

வர­லாற்றுப் புகழ்­மிக்க கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் வளா­கத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்த நுழை­வாயில் மினாராக்­களை தாங்­கி­யி­ருந்த கட்­ட­மைப்பு நேற்­று­முன்­தினம் இரவு இனந்­தெ­ரி­யா­தோரால் பெக்கோ இயந்­திரம் மூலம் அகற்­றப்­பட்­டுள்­ளது.

இதற்கு பிர­தே­ச­வா­சிகள் பள்­ளி­வாசல் நிர்­வாகம் உட்­பட முஸ்லிம் அமைப்­புகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

மினாரா அகற்­றப்­பட்­டுள்­ள­மையை பள்­ளி­வா­ச­லுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் நேற்றுக் காலையே அறிந்­து­கொண்­டுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தப்தர் ஜெய்லானி போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னுள்ள தொன்மைவாய்ந்த பள்ளிவாசலாகும். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களுள் இதுவும் மிக முக்கியமான ஒன்று. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் பலவுள்ளன.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லெத்தீப் பாருக் இது தொடர்பாக சிறந்ததொரு கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தப் பள்ளிவாசல் குறித்து இரத்தினபுரி கச்சேரியில் பணிபுரிந்த ஆங்கிலேய அரசாங்க அதிபர்கள் தமது தினக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள். எச்.மூயாட்ஸ் 13 ஜனவரி 1857 இலும், எச்.வேஸ் 20 மார்ச் 1887 இலும், ஆர்.பி.ஹெலிங்கஸ் 12 பெப்ரவரி 1910 இலும் தமது தினக் குறிப்பில் ஜெய்லானி பள்ளிவாசல் குறித்து பதிவு செய்துள்ளார்கள்.

அதேபோல ஜீ.கூக்ஸன் 12 ஜனவரி 1911 இலும், ஆர்.என்.தைனி 26 மார்ச் 1914 இலும், ஜீ.எச்.கொலின்ஸ் 1922 இலும் தமது தினக் குறிப்பில் இப்பள்ளிவாசல் குறித்து பதிவு செய்துள்ளார்கள். இதனை விட இப்பள்ளிவாசலின்  தொன்மை குறித்து இன்னும் சில வரலாற்று ஆதாரங்களும் உள்ளன.

இது இவ்விதமிருக்க சிறிமாவின்  சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1971 இல் தான் இங்கு தாதுகோபுரம் அமைக்கப்பட்டது. அப்போது கலாசார அமைச்சின் செயலாளராக இருந்த கலாநிதி நிசங்க விஜேரத்ன இதனை நிர்மானித்ததோடு அவர் தான் இந்தத் தாதுகோபுரத்திற்கு 2000 வருட வரலாறு உண்டு என்றும் குறிப்பிட்டார்.

21 ஜனவரி 1971 தவச பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் கிரியல்ல ஞானவிமல தேரர்  தெரிவிக்கையில்  புதிதாக தாதுகோபுரம் நிர்மானிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொல்லியல் பிரதி ஆணையாளர் சார்ல்ஸ் கொடகும்புரவுடன் 5 தடவை இப்பகுதிக்கு விஜயம் செய்து பரிசீலித்ததாகவும் எனினும், அங்கு பௌத்த கலாசாரத்துக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து இதற்கு முன் அங்கு தாதுகோபுரம் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. 13 செப்டம்பர் 1973 இல் தொல்லியல் திணைக்களம் 3 மொழிகளிலும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கையில்  முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சுச் செயலாளராக இருந்த போது அவரது ஆசிர்வாதத்துடன் தடம் பதித்து இன்றும் அவரால் போசிக்கப்பட்டு வரும் ஞானசார தேரர் தான் வெசாக் கொண்டாட்டத்தை  கொண்டாட வேண்டும் என்ற கோசத்தை 2013 மார்ச் 17 இல் முன் வைத்தார்.

இந்தக் கோசத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் செயற்பாடுகளையே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தற்போது முன்னெடுத்து வருகின்றார்.

இதன் பிரதிபலிப்பு தான் தற்போது இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தொன்மைவாய்ந்த ஜெய்லானி பள்ளிவாசல் மினாரா அழிப்பாகும். அரச தலைவர் இவ்வாறு உறுதியாகச் செயற்படுவதற்கு அவருக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமுகம் மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு ஆதரவாக வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி அரச தலைவருக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தமையே இதற்கு காரணம்.

இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தைப் பற்றி அக்கரையின்றி செயற்பட்டதன் விளைவுகனையே இப்போது நாம் அனுபவித்து வருகின்றோம்.

இந்த அரசினால் முஸ்லிம்களுக்கு என்ன அநியாயங்கள் நடந்தாலும் இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பன்மையைக் கொடுத்து இன்னமும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

காபட் வீதிக்கும், ஒப்பந்தங்களுக்கும் பேரம் போகாது சமூகத்தின் பாதிப்புகள் குறித்து பேச இவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணைக் குத்தியபின் வரையப்படுகின்ற அழகிய ஓவியங்கள் எமக்கு எந்தப்பலனும் தரப்போவதில்லை. இதைப்போன்று தான் சமுகத்திதன் இருப்புக்கான ஆதாரங்களை அழித்து சிறுசிறு சலுகைகளைப் பெற்றுக் கொள்வதால் சமுகத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – அறிவிக்கப்பட்டது இலங்கை அணி விபரம் !

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

திமுத் கருணாரத்ன (தலைவர்)
தனஞ்சய டி சில்வா
பெதும் நிஸ்ஸங்க
லஹிரு திரிமான்ன
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மெத்திவ்ஸ்
தினேஷ் சந்திமால்
சரித் அசலங்க
நிரோஷன் டிக்வெல்ல
சாமிக கருணாரத்ன
லஹிரு குமார
சுரங்க லக்மால்
துஷ்மந்த சமீர
விஷ்வ பெர்னாண்டோ
ஜெஃப்ரி வென்டர்சே
ரவீன் ஜெயவிக்ரம
லசித் எம்புல்தெனிய

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 4ஆம் திகதி இந்தியாவின் மொஹாலியில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணி இன்று (25) காலை இந்தியா புறப்பட்டுச் சென்றது.

“ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்தே போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.” – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதியை சந்திக்க நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த போது அதற்கு அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்தே போராட்டத்தில் ஈடுப்பட்டோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கடந்த இரண்டு வார காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் பன்குளம் மொறவௌ பிரதேச செயலக பிரிவில் யானையொன்று உயிரிழந்துள்ளது. இது துரதிஷ்டவசமானது. இவ்விடயம் குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவரிடம் தொலைப்பேசியில் உரையாடினேன். இச்சம்பவம் குறித்து ஆராய்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரே இடத்தில் 14 நாட்கள் இருந்த நிலையில் அந்த யானை உயிரிழந்துள்ளது. யானையின் தந்தம் வெட்டப்பட்டுள்ளதாகவும், யானைக்கு உரிய மருத்து சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காலநேரம் போதாத காரணத்தினால் இவ்விடயம் குறித்து அதிகம் பேசமுடியவில்லை. இவ்விடயத்தை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். இதனை அமைச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும். தாளம் என்ற சூழல் அமைப்பு இச்சம்பவம் குறித்து பல விடயங்களை சான்றுப்படுத்தியுள்ளது.

அதற்கு மேலதிகமாக யானை – மனித மோதலுக்கு யானை வேலி அமைக்கும் கொள்கையுடன் அரசாங்கம் வந்தது. ஒரு இலட்சம் கிலோமீற்றர் யானை வேலி அமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுவரையில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை வேலி அமைப்பதற்கு 24 மில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. யானை வேலி அமைக்காமல் யானை – மனித மோதலுக்கு தீர்வு காணவும் முடியாது. வனஜீவராசிகளை பாதுகாக்கவும் முடியாது.

அதேபோல் தற்போது மின் விநியோகம் தடைப்படும் போதும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் யானை வேலிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகளுக்குமான மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறதாக குறிப்பிடப்படுகிறது. விசேடமாக புல்லுமலை பிரதேசத்தில் பதுளை பகுதியில் யானை மின்வேலிகளுக்காக மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. மின் விநியோகம் துண்டிக்கப்பட வேண்டுமாயின் பகல் பொழுதில் துண்டித்து இரவு வேளைகளில் துண்டிக்காமலிருக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் நான் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட விடயம் குறித்து பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையில் கவலைக்குரியது, பொலிஸ் ஊடகப்பிரிவு சுயாதீனமாக செயற்பட வேண்டும். சிவில் செயற்பாட்டாளர் செஹான் நாலக கடத்த முற்பட்ட போதும் வெள்ளை வேன் போன்ற வேனும் அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை கடத்த முற்பட்ட போதும் வெள்ளை வேன் போன்ற வேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதையே குறிப்பிட்டோம்.

இவ்விடயம் குறித்து பொலிஸ் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சமூக வலைத்தளங்களின் பதிவேற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடக அறிக்கை விடுவது எந்தளவிற்கு சுயாதீனமானது. ஜனாதிபதியை சந்திக்க நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த போது அதற்கு அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்தே போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை புகைப்படம் எடுக்கும் அரச புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பு பிரதேசத்தில் எந்தவகையில் செயற்படுவார்கள் என்பது தெளிவாகின்றது. ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்க முடியும் என தற்போது குறிப்பிடுகிறார்கள். நாங்கள் முறையாக அனுமதி பெறவில்லையாம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதியை சந்திக்க பலமுறை கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு இதுவரை ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில் உள்ளதை அறிந்து கொண்டதன் பின்னரே அவரை சந்திக்க ஜனாதிபதி செயலகம் சென்றோம். நாம் வருவதை அறிந்துக்கொண்டதன் பின்னர் அவர் புகையிரத பெட்டிகளை காணசென்று விட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எம்மால் எந்நேரமும் நாடாளுமன்றில் சந்திக்க முடியும். தமிழ் மக்களை பிரிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவர் தமிழர்களின் ஜனாதிபதி அல்ல என்ற நோக்கில் உள்ளாரா என்று என்ன தோன்றுகிறது.

எமது செயற்பாடு வெட்கமடைய கூடியதாம் நாட்டில் மின்துண்டிப்பு தீவிரமடைந்துள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இருளில் கல்வி கற்கிறார்கள் இதற்கே வெட்கப்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடான போர் – 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு !

 

உக்ரைன் மீது ரஷியா இன்று 2-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீயூவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் சார்பில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக துணை மந்திரி ஹன்னா மால்யார் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தொற்றுநோயுடன் அரசியலை கலப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.” – அமைச்சர் கெெஹலிய ரம்புக்வெல்ல

தற்போதைய நிர்வாகம் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் கூற்றுகளில் அரசியல் அடிப்படை மாத்திரமே உள்ளதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய எதிர்க்கட்சிகள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் அரசியலாக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

தொற்றுநோயுடன் அரசியலை கலப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்படுத்திய அனைத்து கொள்கைகளையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்து வருகின்றனரென்றும் அவர் தெரிவித்தார்.

நாடு சுகாதார அவசரநிலையைக் கையாள்கையில், எதிர்க்கட்சிகளும் அதன் தலைவர்களும் கருத்துக்களை பொறுப்புடனும்,விவேகத்துடனும் வெளியிட வேண்டும்.

தொற்றுநோயின் போது கூட எதிர்க்கட்சிகள் தனது அரசியல் நலன்களை மேம்படுத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன.இவர்களின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பதிலளிப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tik Tok காதலனை தேடி இலங்கை வந்த 67வயது நெதர்லாந்து பெண் – மர்மமான முறையில் மரணம் !

வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நெதர்லாந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

இதில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய Kalidien Nisha Gatoen என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

Tik Tok சமூக வலைத்தளத்தினூடாக 37 வயதுடைய சிங்கள இளைஞரொருவருடன் காதல் தொடர்பு பேணிவந்துள்ள குறித்த பெண், அவரை தேடி இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

இலங்கை வந்து குறித்த இளைஞருடன் வீட்டில் தங்கி இருந்துள்ளதாகவும் பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தீவகத்தில் பெண்கள் தொடர்பாக சமூகப்பொறுப்பற்ற கருத்தை வெளியிட்ட வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா – மன்னிப்பு கேட்கும் படி கோரிக்கை !

யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் அத்தகைய கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக’ தெரிவித்துள்ளதுடன் எழுந்தமானதாகவும் இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாகவும் கருத்துக்களை ஒரு ஆளுநர் தெரிவித்திருப்பதானது அவரது அந்தப் பதவிக்கும் அப்பதவி ஏற்படுத்தியிருக்கும் விம்பத்துக்கும் பொருத்தமாக இருப்பதாக கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (24) தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப் பட்டிருந்ததுடன் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது. இந்நிலையில் சபையின் உறுப்பினர் மேரி மரில்டா ஆளுநர் தெரிவித்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கண்டன தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தார்.

இதன்போதே சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆளுநரது குறித்த விடயம் கண்டிக்கப்பட்டதுடன் அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேற்றி அதை அளுநருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தீர்மானித்திருந்தனர்.

இது தொடர்பில் உறுப்பினர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

ஆளுநரது கருத்தை தீவகம் சார் சபையான எமது வேலணை பிரதேச சபை வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதுடன் மாவட்ட செயலகம் குறிப்பிட்டாக தெரிவித்திருக்கும் இவ்வாறான பல மாறுபட்ட கருத்துக்களை வெளியிடும் முன்னர் ஆளுநர் என்ற பதவியின் பொறுப்பை உணர்ந்து அவ்விடயத்தை ஆராய்ந்து உண்மையை அறிந்து அதன் சாதக பாதகங்களை கருத்திற் கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் யுத்தம் ஏற்படுத்தி தந்த அவலங்களும் அண்மைய கொரோனா தொற்றின் தாண்டவமும் பல பெண்களின் வாழ்வியலை முழுமையாக புரட்டிப்போட்டுள்ளது.

அதன் தாக்கத்தால் அவர்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தில் பின்னடைவு கைம்பெண்கள் குடும்பம், கல்வியில் பின்னடைவு போன்ற காரணங்களால் தீவகத்தில் மட்டுமல்லாது வடக்கின் பல பாகங்களிலும் பல பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் குடும்பங்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுதும் வந்துகொண்டிருந்கின்றனர்.

அத்துடன் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பது தீவகத்தில் மட்டுமல்ல வடக்கில் ஏன் நாடு முழுவதிலும் பெரும்பான்மையான முதன்வை வகிக்கும் ஒரு பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இதை ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிந்திருக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அத்துடன் ஆளுநர் என்பவர் அவரது ஆளுமைக்கும் ஆறற்றலுக்கும் ஏற்றவகையில் செயற்படுவது அவசியம். அதை அவர் எதிர்காலத்திலாவது செயற்படுத்தி இந்த மாகாணத்தில் காணப்படும் பெண்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்டு ஒரு சுய பொருளாதாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அர்த்தபூர்வமாக எதையாவது சாதித்தால் அவரது பொறுப்புக் காலம் ஒரு பொற்காலமாக அமையும்.

அத்துடன் வடக்கின் ஆளுநர் அரச திணைக்களங்கள் கூறிய தகவலை ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதை விடுத்து தீவகத்தில் சில பெண்கள் நடவடிக்கைகளில் தொடர்பாக சமூகப்பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தீவகத்தில் வாழும் எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ளப் போவதும் கிடையாது.

இதேநேரம் ஆளுநர் பெண்கள் விடயத்தில் மனச்சாட்சியுடன் அக்கறை எடுப்பாராக இருந்தால் பெண்கள் சார்பில் நாங்களும் அவருக்கு உதவுவதற்கும் அவர் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ள செய்யவும் தயாராகவே இருக்கின்றோம்.

அதற்கு ஆளுநர் முன்வருவாரா? அல்லது அளுநரின் பார்வை தொடர்ந்தும் ஒரு மாறுபட்ட கோணத்தில் தான் இருக்கப்போகின்றாரா? என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இதேநேரம் மாவட்ட செயலகம் குறிப்பிட்டாக தெரியப்படுத்தியிருக்கும் கருத்தை அளுநர் பொறுப்பானவராக ஆராய்ந்து அறிந்து கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும். மாறாக இவ்வாறான கருத்துக்களை பொறுப்பிலுள்ள ஒருவராக இருந்துகொண்டு வெளியிடுவதானது அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமே தவிர அவருக்கு கொடுக்கப்பட்ட பணியாக அமையாது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பசில் ராஜபக்சவின் இந்தியப் பயணம் !

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இன்று அவர் இந்தியாவிற்கு பயணம் செல்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அவருடன் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த பயணத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை செலுத்துவதற்காக அவரின் இந்தப் பயணம் அமையவிருந்தது.

இந்நிலையிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பசிலின் இந்திய பயணத்தின் போது கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் மூன்று பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திடப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

யாழில் வயோதிபப் பெண் படுகொலை – குற்றவாளி வழங்கியுள்ள வாக்குமூலம் !

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கெமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்தமை பதிவாகி இருந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நேற்று காலை இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.

மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடாரி மண்வெட்டியை வயோதிப் பெண் வாங்கித்தந்தார். எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.

அதனால் கோடாரியை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவற்றிருந்தார். அவரது சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.

அத்துடன் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.