24

24

உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்தது ரஷ்யா – நூற்றுக்கும் அதிகமானோர் பலி !

ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்கின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது.
ரஷிய போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரஷியாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. உக்ரைன் ராணுவம் தரப்பில் 40 பேர், பொதுமக்களில் 10 பேர் இறந்ததாகவும், ரஷிய கிளர்ச்சி படையைச்சேர்ந்த 50 பேரை உக்ரைன் ராணுவம் சுட்டுக்கொன்றதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்தது.
இடைவிடாமல் வான் தாக்குதலுக்குப் பிறகு, ரஷிய படைகள் தலைநகர் கீவில் நுழைந்தன. கீவ் நகரின் வடக்கு பகுதியில் ரஷிய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தியபடியே முன்னேறி செல்கின்றன. உக்ரைன் நாட்டின் போர் விமானத்தையும் ரஷிய படை சுட்டுவீழ்த்தியதாகவும் இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனின் உளவுத்துறை தலைமையகத்தை தகர்த்தது ரஷ்யா !

உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் ரஷிய படை பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷிய படை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு அசோவ் கடற்பகுதியில் தங்களது 2 சரக்கு கப்பல்களை ஏவுகணை மூலம் உக்ரைன் தாக்கியதாக ரஷியா புகார் தெரிவித்துள்ளது.

 

இதே நேரம் ரஷ்யாவின் பல அமைப்புகள் பொருளாதார தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா எச்சரித்து வந்தது. இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் சமாதானம் பேச முயற்சி செய்தனர்.
அமெரிக்கா போர் தொடுக்கமாட்டோம் என ரஷியா உறுதி அளித்தால் பேச்சுக்கு தயார் என்றது. ரஷியா நேட்டோ உறுப்பினராக உக்ரைனை சேர்க்க மாட்டோம் என்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என பதிலடி கொடுத்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
நேற்று இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அதற்குள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள புதினுக்கு ரஷியா நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இதனால் இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுக்க புதின் உத்தரவிட, விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன. இன்று போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி7 நாடுகள் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தடை விதிக்கும் என ஜெர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

போரை ஆரம்பித்தது ரஷ்யா – ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என அறிவித்துள்ள  உக்ரைன் ஜனாதிபதி !

உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும்.  ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, லிதுவேனியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கிடானஸ் நௌசேடா தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் தடைகள் ரஷ்யா மட்டுமல்லாமல்  அந்த நாடு 30,000 துருப்புகளைக் குவித்துள்ள பெலாரஸ் மீதும் விதிக்க வேண்டும் என்றும் நவுசேடா கூறினார். அந்த நாட்டிலிருந்து தான் (பெலாரஸ்) அத்துமீறல் நடத்தப்படுகிறது என்றும் நவுசேடா குறிப்பிட்டார்.

காணி அபகரிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் போராட்டம். !

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சி.வி விக்னேஸ்வரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையிலேயே இன்று நண்பகல் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.