13

13

உயிர்கள் வாழ தகுதியான புதிய கோள் கண்டுபிடிப்பு !

உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:-

“ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கோள் நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக்காது.

பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும். உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழ்நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும்.

நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கோள் இருக்கும் மண்டலம் உயிர்கள் வாழ மிக சரியாக இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஜேபரிகி கூறும்போது, “இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது” என்றார்.

தமிழ் பெண்ணை கரம்பிடிக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் !

கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.

கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.
மேக்ஸ்வெல்லின் திருமண அழைப்பிதழ்அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல், வினிராமன் திருமணம் வருகிற மார்ச் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தமிழ் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், மேக்ஸ்வெல் – வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டி20 போட்டி – சூப்பர் ஓவரில் வெற்றியை நழுவ விட்ட இலங்கை !

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 164 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஜோஸ் இன்க்லிஸ் 48 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ஒட்டங்களை பெற்றுக் கொண்டதில் போட்டி சமநிலையில் முடிந்தது.

இதில் இலங்கை அணி சார்பில் பெதும் நிஸங்க 73 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் தசுன் சானக 34 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று பந்துகள் மீதமிருக்க 9 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

அதன்படி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்ட விவகாரம் – அகில இலங்கை சைவ மகா சபை விசனம் !

சைவத்தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  அகில இலங்கை சைவ மகா சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவர்களின் குறித்த செயலை வன்மையாகக் கண்டித்துள்ள சைவ மகா சபை, மேற்படி சொரூபத்தை அந்த இடத்தில் இருந்து அகற்ற மன்னார் ஆயர் இல்லம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் சைவர்களின் மனதை மீள மீள புண்படுத்தும் வகையில் திருக்கேதீச்சர வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பில் மிகப் பெரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு 12.02.2022 திறக்கப்பட்டுள்ளது.

வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ள சமயம் இதனை உயர் மத பீடங்களின் ஆளுகையின் கீழ் இயங்கும் அண்மைய ஆண்டுகளில் பெருமெடுப்பில் பண்டைய ஒப்பந்த நடைமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட தேவாலாய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மன்னார் உயர் அரச அதிகாரிகளுக்கு முன்கூட்டியே அறிவித்தும் சொரூபம் அமைக்கபப்பட்டுள்ளதாக கூறப்படுவது மிகுந்த அவதானத்துக்குரிய விடயமாகும்.

இது தொடர்பாக திருக்கேதீச்சர ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை செய்துள்ள நிலையில் வரலாற்று கால தமிழ்ச் சைவர்களின் மரபுரிமையான திருக்கேதீச்சர திருக்கோவில் நிர்வாகத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்ச்சைவர்களின் ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இச் செயலிற்கு உறுதுணை வழங்காது மன்னார் ஆயர் இல்லம் சொரூபத்தை திருக்கேதீச்சர நுழைவாயிலான அவ்விடத்திலிருந்து அகற்ற தேவாலாய நிர்வாகத்தை பணிக்க வேண்டும்.

அரச உயர் அதிகாரிகள் இனியும் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளாது மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும், தொல்லியல் மரபுரிமைகளில் மாற்றம் செய்யும், தனித்துவத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டுவதுடன் சர்ச்சைக்குரிய சொரூபத்தை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சைவத்தமிழர்கள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபையினராகிய நாம் கேட்டு நிற்கின்றோம். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளோரின் தொகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர்தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் பலர் தடுப்புக்காவலில் உள்ளனர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சந்தேகநபர்களும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 275 பேர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்

“இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – உண்ணும் உணவை குறைத்த மக்கள்.” – ஐ.நா எச்சரிக்கை அறிக்கை !

இலங்கையில் பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்கள் உண்ணும் உணவை குறைத்துகொண்டுள்ளன அல்லது சத்துக்குறைந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்கின்றன என ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள மக்களின் உணவுப்பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலை என்பன எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகியுள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை ருபாயின் வீழ்ச்சி, எரிபொருள் நெருக்கடி, உரநெருக்கடி போன்றவற்றால் உருவாகியுள்ள பணவீக்கம் காரணமாக பல குடும்பங்கள் தாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவை குறைத்துக்கொண்டுள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரிசியின் விலை செப்டம்பர் நவம்பர் மாதங்களில் அதிகரித்தது. டிசம்பரில் ஓரளவு நிலையாக காணப்பட்ட பின்னர் மீண்டும் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஜனவரியில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்குஉயர்ந்தன முன்னைய வருடங்களை விட 50 வீதம் உயர்ந்த என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அடிப்படை உணவுப்பொருட்களின் விலைகளும்செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளுர் சந்தையில் அடிப்படை உணவுப்பொருட்கள் மக்களிற்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான- விலைகளை கட்டுப்பபாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறுகியகாலத்திற்கு பலனளித்தன எனினும் ஒக்டோபரில் இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்ததால் இந்த முயற்சிகள் பாதிக்கப்பட்டன விலைகள் மீண்டும் அதிகரித்தன என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

பரபரப்பாக இரண்டாவது நாளும் தொடரும் ஐ.பி.எல் ஏல விபரம் இதோ – ஹசரங்கவை அடுத்து அதிக விலைக்கு போன இன்னுமொரு இலங்கை வீரர் !

ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஏலம் நடக்க இருக்கிறது.
ஒவ்வொரு அணியிடம் இருக்கும் தொகை ( இந்திய ரூபாய் )
1. சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது.
2. டெல்லி கேப்பிடல்ஸ் 16.5 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 13 பேரை எடுத்துள்ளது.
3. குஜராத் டைட்டன்ஸ் 18.85 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது.
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.65 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 3 வெளிநாட்டு வீரர்களுடன் 9 பேரை எடுத்துள்ளது.
5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6.9 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது.
6. மும்பை இந்தியன்ஸ் 27.85 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 8 வீரர்களை எடுத்துள்ளது.
7. பஞ்சாப் கிங்ஸ் 28.65 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது.
8. ராஜஸ்தான் ராயல்ஸ் 12.15 கோடி ரூபான் தன்வசம் வைத்துள்ளது. 3 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது.
9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 9.25 கோடி ரூபாய் கைவம் வைத்தள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது.
10. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20.15 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 13 பேரை ஏலம் எடுத்துள்ளது.
ஒவ்வொரு அணியும் எடுத்துள்ள வீரர்கள் விவரம்:
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் எடுத்துக் கொள்ளலாம். மொத்த எண்ணிக்கை 25-ஐ மிகாமல் இருக்க வேண்டும்.
1. சென்னை அணியில் ஏற்கனவே நான்கு பேர் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய ஏலத்தில் தேஷ்பாண்டே, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், கே.எம். ஆசிப், பிராவோ, ராபின் உத்தப்பா ஆகியோரை ஏலம் எடுத்தது.
2. டெல்லி கேப்பிட்டல்ஸ் ஷர்துல் தாகூர், மிட்செல் மார்ஷ், முஷ்டாபிஜுர் ரஹ்மான், கே.எஸ். பரத், டேவிட் வார்னர், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், நாகர்கோடி, சர்பராஸ் அகமது ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
3. குஜராத் டைட்டன் நூர் அகமது, ஜேசன் ராய், முகமது ஷமி, ராகுல் டெவாட்டியா, அபிநவ் ஷதரங்கானி, லூக்கி பெர்குசன், சாய் கிஷோர் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஷிவம் மவி, ஷெல்டன் ஜேக்சன், பேட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவேஷ் கான், டி காக், மார்க் வுட், மணிஷ் பாண்டே, ஹோல்டர், தீபக் ஹூடா, குருணால் பாண்ட்யா, அங்கித் சிங் ராஜ்பூட் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
6. மும்பை இந்தியன்ஸ் பாசில் தம்பி, முருகன் அஷ்வின், தெவால்ட் பிரேவிஸ், இஷான் கிஷன் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
7. பஞ்சாப் அணி ஜிதேஷ் ஷர்மா, ஷாருக் கான், பேர்ஸ்டோவ், ஹர்ப்ரீத் ப்ரார், தவான், இஷான் பொரேல், காகிசோ ரபடா,  ராகுல் சாஹர், பிராப்சிம்ரன் சிங் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
8. ராஜஸ்தான் ராயல்ஸ் கே.சி. கரியப்பா, ரியான் பராக், டிரென்ட் பவுல்ட், அஸ்வின், சாஹல், ஹெட்மயர், பிரசித் கிருஷ்ணா, தேவ்தத் படிக்கல் ஆகியோர் ஏலம் எடுத்துள்ளது.
9. ஆர்.சி.பி. டு பிளிஸ்சிஸ், அனுஜ் ராவத், ஹேசில்வுட், ஆகாஷ் தீப், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், வனிந்து ஹசரங்கா ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
10. சன்ரைசர்ஸ் ஐதராபத் நிக்கோலஸ் பூரன், ஜெசதீஷா சுசித், ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், பிரியம் கார்க், அபிகேஷக் ஷர்மா, ராகுல் திரிபாதி ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
சடி
குறிப்பிடக்கூடியெ வகையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஐபிஎல் மெகா ஏலத்தில் பெருந்தொகைக்கு விலை போயுள்ளார்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் அவர் வாங்கப்பட்டுள்ளார். இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இன்னுமொரு சுழற்பந்து வீச்சாளரான மஹீச தீக்சனவை  சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.