September

September

ஸ்னேகா கொடும்பாவி எரிப்பு

999sneha.jpgதிரு வண்ணாமலையில் நடிகை ஸ்னேகா செருப்பு அணிந்து கிரிவலம் போனதை கண்டித்து நாமக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.

சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் சென்ற இவர் காலில் செருப்பு அணிந்து சென்றார். இதையடுத்து இந்து மத அமைப்பினர் அவருக்கு செருப்புகளை பார்சல் அனுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி போராட்டம்  நடத்தும் என கூறப்பட்டது. ஆனால், ஸ்னேகா தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால். வெறும் காலுடன் நடக்க முடியாது. அதனால் துணி செருப்பு போட்டு நடந்தேன் என விளக்கம் கொடுத்தார். இதை அடுத்து அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால், இந்த விளக்கம் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா பிரிவினரை சமாதானப்படுத்தவில்லை. அவர்கள் நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் லேசான பதட்டம் ஏற்பட்டது.

பல்கலைக்கழக அசம்பாவிதங்களுக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு- ஐ.தே.க. எம்.பி. குற்றச்சாட்டு

26parliament.jpgபல்கலைக் கழகங்களுக்குள் இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களுடன் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய தொடர்பிருக்கின்றது. அரசியல்வாதிகள் அங்கு கூத்தாடுவதற்கு இடமளிக்கப்படுகிறது என ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. அகிலவிராஜ் காரியவசம் செவ்வாய்க்கிழமை சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அகிலவிராஜ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாடு முழுவதிலும் இயங்குகின்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றப்படுகின்ற பாடநெறிகளில் 60 வீதமானவை எமது நாட்டுக்கும், எமது நாட்டு பொருளாதார நன்மைகளுக்கும் அபிவிருத்திக்கும் பொருத்தமானதாக அமையவில்லை. இத்தகைய பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது உயர் கல்வி அமைச்சின் பொறுப்பாகும். மேலும் கொழும்பு பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் பாரிய வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. கணினிப் பற்றாக்குறை அதற்கான விரிவுரையாளர்களின் குறைபாடுகள் என பல விடயங்கள் தீர்க்கப்படவேண்டியுள்ளன. இவ்விடயங்களில் அமைச்சு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

கையடக்க தொலைபேசிகளை மாணவர் பாவிக்க முற்றாகத்தடை

mobile-phone.jpgஅரச, தனியார் பாடசாலை வளவினுள் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை பாட சாலை வளவினுள் கொண்டு வருதல் அல்லது பாவித் தல், கையடக்கத் தொலை பேசி மூலம் படம் பிடித்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று பாடசாலை வளவினுள் ஆசிரியர்களும் பாடசாலை பணியாளர்களும் பாடசாலை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்க வைத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். வகுப் பறைகளிலோ மாணவர்களுக்கு முன்னிலையிலோ இத்தொலைபேசிகள் மூலம் உரையாடக்கூடாது.

பாடசாலை வளவினுள் புகைப்படக் கருவிகளையோ, வீடியோ கருவிகளையோ மாணவர்கள் பாடசாலை வளவினுள் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது. ஏதாயினும் தேவையொன்றிற்காக இவற்றைக் கொண்டு வர தேவையேற்படின் அது பற்றிய அனுமதியை பாடசாலை அதிபர் எழுத்து மூலம் வழங்குதல் வேண்டும்.

இவ்வாறு அமைச்சின் செயலாளர் எம்.எம்.என்.டி. பண்டார சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டை படையினரால் புனரமைப்பு

999jaffna_fort.pngபுலிகளால் சேதப்படுத்தப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் புனரமைக்கப்படவுள்ளது. வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கிணங்க யாழ். படைத் தளபதியின் வழிகாட்டலில் இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவினர் இந்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீஸர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்து புனரமைத்தனர்.

பின்னர் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைக்கு இக்கோட்டையைப் பயன்படுத்தினர். இங்கிருந்துதான் புலிகள் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த யுத்த நடவடிக்கை காரணமாக யாழ் கோட்டை பெருஞ்சேதத்துக்குள்ளனது. புராதன நினைவுச்சின்னங்களையும் புலிகள் அழித்தனர்.

1996 ஆம் ஆண்டு படையினர் மேற்கொண்ட ரிவிரஸ  நடவடிக்கையால் யாழ் கோட்டையை படையினர் முற்றாகக் கைப்பற்றினர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கோட்டையைப் பாதுகாத்து உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றியமைக்கும் நோக்கில் இங்கு இப்போது புனரபை;புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

ஐ நா அதிகாரி வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது:பான் கீ மூன்

banki-moon_elter.jpgஇலங் கையில் ஐக்கிய நாடுகளின் சிறார்கள் நல அமைப்பான யூனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு கூறியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் விமர்சித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள ஜேம்ஸ் எல்டர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வந்தார் என்று இலங்கை அரசு அவர் மீது குற்றம் சாட்டுகிறது. இலங்கையில் போர் நடைபெற்ற நேரத்தில் அதில் சிக்கிய சிறார்களின் நிலைமை தொடர்பில், தொடர்ந்து ஊடகங்களுக்கு ஜேம்ஸ் எல்டர் தகவல்களை வழங்கி வந்தார்.

இலங்கையில் யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு எடுத்துள்ள முடிவு குறித்து ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பினர் செய்து வரும் பணிகள் குறித்தும் ஐ நா வின் தலைமைச் செயலர் தனது முழு நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் என்று ஐ நா வின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீன நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 35 பேர் பலி

999china.jpgசீனாவில் ஹனான் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் காஸ் வெடிப்பு ஏற்பட்டதில் 35 தொழிலாளிகள் பலியானார்கள். 44 பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருவதாகப் பீக்கிங் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்டபோது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் 14 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படாததால், சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன என்றும் கடந்த ஆண்டு மட்டும் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள் என்றும் கூறப்படுகின்றது.

அலுத்கமை இந்துருவை ரயில் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

train0000.jpgஅலுத்கமை மற்றும் இந்துருவைக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில்  தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மறுதினமான ஞயிறு மாலை 5.00 மணி வரை இந்த ரயில் சேவைகள் தடைப்பட்டிரக்கும்.

பெந்தோட்டை ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கான காரணமாகும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதன்படி மருதானை ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை  காலை 6.45 க்கு காலி நோக்கி புறப்படும் ரயில் சேவை மற்றும்  பிற்பகல் 1.40 மற்றும் மாலை 5.50 ஆகிய நேரங்களில் மாத்தறை நோக்கிப் புறப்படும் ரயில் சேவைகள் இடம்பெற மாட்டாது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 க்கு மருதானை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் புறப்படும் கடுகதி ரயில் சேவையும் இடம்பெற மாட்டாது. இதேவேளை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் 8050 இலக்கம் கொண்ட ரயில் சேவை சனிக்கிழமை அலுத்கமை வரை மட்டுமே இடம்பெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ரூ.10.9 கோடி கேட்டு கமலுக்கு நோட்டீஸ்

09-kamal-marmayogi.jpgமர்மயோகி படத்துக்காக தங்களிடம் முன் பணமாகப் பெற்ற ரூ 10.90 கோடியை உடனடியாகத் திருப்பித் தரவேண்டும் என பிரமிட் சாய்மிரா நிறுவனம் நடிகர் கமல்ஹாஸனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் சிதம்பரம்  அனுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பிரமீட் சாய்மீரா நிறுவனமும், கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து மர்மயோகி எனும் படத்தை பிரமாண்ட முறையில் தயாரிக்க முடிவு செய்தனர். கமல் இயக்கி நடிப்பதாக இருந்த அந்தப் படம் பொருளாதார நெருக்கடி காரணமாக தள்ளிப் போடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்துக்காக கமல்ஹாஸனுக்கு ரூ.10 கோடியே 90 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டிருந்தது. மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், கமல் தனது சொந்தப் படமான உன்னைப் போல் ஒருவன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இப்போது அந்தப் படம் வெளியாகும் நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் கமல்ஹாஸனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘மர்மயோகி’ படத்தை எடுத்து முடிக்காமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை வெளியிடுவது சரியல்ல. ‘மர்மயோகி’ படத்திற்கான பணிகளை துவக்காததால் முன்பணமாக பெற்ற தொகையை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். எனவே உடனடியாக முன்பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் தேவையற்ற செலவீனங்களை தவிர்ப்பீர்கள் என்றும் நம்புகிறோம்…”, என்று கூறப்பட்டுள்ளது.

\

இருபது ஓவர் போட்டிகளால் எனது திறமை மேம்பட்டுள்ளது: பிரெட்லீ

cricket_stadium.jpgஇருபது ஓவர் போட்டிகளில் விளையாடியதால் தனது பந்துவீச்சுத் திறன் மேம்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பிரெட்லீ அளித்துள்ள மின்னஞ்சல் பேட்டியில், இருபது-20 போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கக் கூடிய போட்டி என்றாலும், இதில் விளையாடியதால் எனது பந்துவீச்சுத் திறன் மேம்ப்பட்டுள்ளது.

யார்க்கர், ஸ்லோ பால் மற்றும் ஸ்லோ-பாலில் பவுண்சர் வீசுவது உள்ளிட்டவை தற்போது எனக்கு அத்துபடியாகி விட்டது. இதேபோல் இருபது ஓவர் போட்டிகளில் பேட் செய்யும் போது முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக பிரெட்லீ தெரிவித்துள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடுவதற்காக பிரெட்லீ இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அ. அட்டை வைத்திருந்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழியச் சிறை

999.jpgதமக்குச் சொந்தமாக இரண்டு தேசிய அடையாள அட்டைகளை தன் வசம் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி ஒருவருக்கு தெல்தெனிய மஜிஸ்திரேட் பிரியன்த லியனகேவினால் நேற்று முன்தினம் (8) 6 மாத ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. திகன- அளுத்வத்தை பிரதேசத்தில் வகிக்கும் வீரய்யா கோபால கிருஷ்ணன் என்பவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்ப ட்டுள்ள தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.

இரண்டு தே.அ. அட்டைகளை தன்வசம் வைத்திருந் துள்ளமை தொடர்பில் தெல் தெனிய பொலிஸ் பொறுப்பதிகாரி சத்ரசிங்க சியம் பலாப்பிட்டியவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் இவர் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.