September

September

போலி புகைப்படம் வெளியிட்ட மூவருக்கு அக்டோபர் 6 வரை விளக்கமறியல்

காலி ஹிக்கடுவை கடற்கரைப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என போலியானவற்றை வெளியிட்டார்கள் என்ற  குற்றச்சாட்டின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரையும்  எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரிகள் என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் அரசின் அனுசரணையின் பேரில் இடம்பெற்ற இந்த ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டன. போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சுற்றுலா சபை அதிகாரிகள் சிலர் இரகசிய பொலிஸாரிடமும் பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரிடமும் முறையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு தாய்லாந்து கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டே ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் புகைப்படங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் : Sri Lanka won by 55 runs (D/L method)

kumar-sangakkara.jpgகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி,  இலங்கையை எதிர்கொள்கிறது. சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் இன்று துவங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒரு நாள் தரப்பட்டியலில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளியது தென் ஆப்ரிக்கா. தற்போது ஒரு நாள் போட்டிகளில் சுப்பர் போர்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணி,  இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் உறுதியாக உள்ளது.

தென் ஆப்ரிக்காவின் துடுப்பாடட வரிசை எதிரணியை மிரட்டுகிறது. கேப்டன் ஸ்மித், காலிஸ்,  டுமினி,  ஆம்லா, பவுச்சர் ஓட்டங்களைக்  குவிக்க காத்திருக்கின்றனர். பயிற்சி போட்டியின் போது விலா எலும்பில் காயமடைந்த கிப்ஸ் இன்றைய போட்டியில் பங்கேற்காதது சற்று பின்னடைவு தான். பந்து வீச்சில்; ஸ்டைன்,  நிடினி, பார்னெல் அசத்த உள்ளனர். கடந்த 1998 ம் ஆண்டு நடந்த முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்கா கோப்பை வென்று அசத்தியது. அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்க வில்லை. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு சற்றும் குறைவில்லாத அணியாக களமிறங்குகிறது இலங்கை. தில்ஷன்,  ஜயசுரியாவின் அதிரடியும்,  முரளி, மெண்டிஸ் சுழலும் கைகொடுக்கும் பட்சத்தில்,  இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்காவை இலங்கை அணி எளிதாக வீழ்த்தலாம். அனுபவ வீரர்களான சங்ககரா,  ஜெயவர்தனா நம்பிக்கை அளிக்கின்றனர்.

வலுவான துடுப்பாட்ட வரிசை கொண்ட இலங்கை அணிக்கு, சமரவீரா, கண்டம்பி, கபுகெதரா ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஓடர் கூடுதல் பலம் அளிக்கிறது. மாலிங்க,  குலசேகராவின் வேகப்பந்து வீச்சு, தென் ஆப்ரிக்காவை மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இதுவரை 45 ஒரு நாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில்,  தென் ஆப்ரிக்கா 22,  இலங்கை 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை. சாம்பியன்ஸ் டிரொபி போட்டிகளில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மட்டும் மோதி உள்ளன. இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்காவே வென்று உள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய ஒரு நாள் போட்டிகளில், தென் ஆப்ரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் 317 (2002, செஞ்சரியன்). குறைந்த பட்ச ஸ்கோர் 154 (1993,  கொழும்பு). இலங்கை அணியின் அதிக பட்ச ஸ்கோர் 308 (2004, கொழும்பு). குறைந்த பட்ச ஸ்கோர் 98 (1993,  கொழும்பு).

ICC Champions Trophy – Group B
Sri Lanka 319/8 (50.0 ov)
South Africa won the toss and elected to field
22 September 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings
 TM Dilshan  c Morkel b Steyn  106
 ST Jayasuriya  lbw b Steyn  10 
 KC Sangakkara*†  c & b Duminy  54
 DPMD Jayawardene  c Duminy b Parnell  77
 TT Samaraweera  c van der Merwe b Parnell  37 
 AD Mathews  b Steyn  15
 SHT Kandamby  c Duminy b Parnell  6
 KMDN Kulasekara  run out (van der Merwe/Steyn)  1
 M Muralitharan  not out  0  
 Extras (lb 5, w 5, nb 3) 13     
      
 Total (8 wickets; 50 overs) 319 (6.38 runs per over)
To bat SL Malinga, BAW Mendis 
Fall of wickets1-16 (Jayasuriya, 2.2 ov), 2-174 (Sangakkara, 27.6 ov), 3-181 (Dilshan, 29.1 ov), 4-297 (Jayawardene, 46.3 ov), 5-297 (Samaraweera, 46.4 ov), 6-314 (Kandamby, 48.6 ov), 7-317 (Kulasekara, 49.4 ov), 8-319 (Mathews, 49.6 ov) 
        
 Bowling
 DW Steyn 9 2 47 3
 WD Parnell 10 0 79 3
 JH Kallis 7 0 43 0
 JA Morkel 4 0 39 0
 J Botha 9 0 53 0
 RE van der Merwe 10 0 42 0
 JP Duminy 1 0 11 1

  South Africa innings (target: 262 runs from 37.4 overs)
 
GC Smith*  b Mendis  58 
 HM Amla  b Mathews  2 
 JH Kallis  c Mathews b Mendis  41 
 AB de Villiers  c Jayawardene b Malinga  24 
 JP Duminy  b Mendis  0
 MV Boucher†  lbw b Mathews  26 
 JA Morkel  not out  29  
 J Botha  c Mathews b Malinga  21
 RE van der Merwe  not out  3
 Extras (w 2) 2     
      
 Total (7 wickets; 37.4 overs) 206 (5.46 runs per over)
Did not bat DW Steyn, WD Parnell 
Fall of wickets1-9 (Amla, 2.6 ov), 2-90 (Smith, 14.1 ov), 3-113 (Kallis, 20.3 ov), 4-113 (Duminy, 20.4 ov), 5-142 (de Villiers, 26.2 ov), 6-163 (Boucher, 31.2 ov), 7-198 (Botha, 35.6 ov) 
        
 Bowling
 SL Malinga 7.4 0 43 2
 KMDN Kulasekara 7 0 44 0
  AD Mathews 8 1 43 2
 M Muralitharan 8 0 46 0  
 BAW Mendis 7 0 30 3

  • Rain: South Africa – 206/7 in 37.4 overs (JA Morkel 29, RE van der Merwe 3)
  • Points Sri Lanka 2, South Africa 0
     
    Player of the match TM Dilshan (Sri Lanka)

    புலிகளாகவே இருந்தாலும் இப்படியா..?-ஜெயலலிதா

    22-jayalalitha.jpgவிடுதலைப் புலிகளாகவே இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்ற இலங்கை ராணுவத்தின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

    இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கைபேசியின் மூலம் ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

    இந்த ரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப்படங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியிடப்படடும் இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது. மனிதத்தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை.

    தீவிரவாதத்திற்கோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கோ ஆதரவாக அதிமுக ஒரு போதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களை கொலை செய்து வருகின்ற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கு மாறியதோ, அன்றிலிருந்து இந்த இயக்கத்தை நான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்.

    இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது. இது, போரின்போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.

    வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்கு இல்லை.

    இருப்பினும் அதிமுகவும், தமிழக மக்களும் இலங்கையில் நடைபெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இலங்கை அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

    முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளை பாதுகாக்கும் யோசனைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

    முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி அவர்களை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைப்பதற்கான யோசனைகளை உள்ளடக்கிய தேசிய கொள்கைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு நேற்று திங்கட்கிழமை இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்தத் தேசிய கட்டமைப்பு யோசனைகளில் முக்கியமாக வடிவமைக்கப்பட்டிருப்பது முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயமாகும். இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசின் சர்வதேச கடப்பாடுகளின் பிரகாரம், முன்னாள் போராளிகளுக்கு உதவுதல், பாதுகாப்பு அளித்தல் என்பனவற்றுக்கான பொறுப்பும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானம், நல்லிணக்கம், சமூகத் தொடர்பாடல், முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பை அதிகரித்தல், சமூக, பொருளாதார ரீதியில் அவர்கள் ஓரம்கட்டப்படும் ஆபத்தைக் குறைத்தல், அத்துடன் போருக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் என்பனவும் இந்தக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேசிய கட்டமைப்பு மற்றும் முன்னாள் போராளிகளை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவம் என்பன இலங்கை அரசும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கடந்த மே மாதம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    நாடு முழுவதும் 27 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை சுற்றுலாவாரம் அனுஷ்டிக்க ஏற்பாடு

    sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு நாடு தழுவிய ரீதியில் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை சுற்றுலா வாரத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது.  இவ்வாரத்தினுள் சுற்றுலா மற்றும் உல்லாசப் பயணத்துறை தொடர்பாக சூழலுடனும் அதனை சார்ந்த சமூகத்துடனும் நல்லுறவை பேணிப்பாதுகாப்பதுடன் உல்லாசப் பயணத்துறையை பிரபல்யப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

    வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தற்போது ஓரின சுமுக நிலை ஏற்பட்டுவருவதால் வெளிநாட்டு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மேலும், மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி கொள்கைக்கு அமைவாகவே சுற்றுலாத்துறை அமைச்சு பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய இடங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பாடசாலை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடத்திய சித்திரம், கட்டுரை மற்றும் சுவரொட்டி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சுற்றுலா வாரத்தின் இறுதிநாள் நிகழ்வின் போது வழங்கப்படும்.

    ஐ.நா.விசேட நிபுணர் அல்ஸ்டனை வரவழைக்க அரசாங்கம் தயாரில்லை: அமைச்சர் சமரசிங்க

    minister-mahinda-samarasinghe.jpgஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது என்று ஐ.நா.வின் விசேட நிபுணர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    மேலும் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு செல்ல தாம் நீண்ட நாட்களாக அரசாங்கத்திடம் அனுமதி கோரி வருவதாகவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

    வட மாகாண மாவட்ட போட்டிகள் நிறைவு – யாழ் மாவட்டம் முதலாம் இடம்

    northa-pro-spo.jpgவட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வட மாகாண மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு விழா நேற்று இரவு நிறைவு பெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தப் போட்டிகளில் யாழ் மாவட்டம் வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.

    இறுதி நாள் நிகழ்வுகள் வட மாகாண கல்வி விளையாட்டு அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுனர்  ஜீ.எ.சந்தரஸ்ரீ ஆகியோர் கலநது கொணடு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். 151 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை யாழ் மாவட்டமும் 114 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வவுனியர் மாவட்டமும் 94 புள்ளகளைப் பெற்று மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

    அடுத்தாண்டு வட மாகாண விளையாட்டுப் பேர்டிகள் கிளிநோச்சி மாவட்டத்தில் நடைபெறும் என வட மாகாண விளையாட்டுத் தினைகக்ளத்தின் உதவிப் பணிப்பாளர் என் அண்ணாத்துரை அறிவித்துள்ளார் .

    இன்று பிற்பகலில் பேராதனையில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளை

    பேராதனை கலகா சந்தியில், இன்று பிற்பகலில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வங்கியில் மேற்படித் தொகையை வைப்பிலிடச் சென்ற போதே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள், ஏழரை லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாத செயலுடன் தொடர்புடைய இருவர் தெனியாயவில் கைது

    220909prisoner1.jpgதெனியாய – இத்தகந்த லங்காபேரி தோட்டத்தைச் சேர்ந்த இருவர், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டவர்களாவர்.

    இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஏ. குலரட்னவின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மதிவக தெரிவித்தார்.

    இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

    பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் – 6 மாதத்தில் 2,180 பேர் பலி :உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

    16-swine-flu.jpgஉலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் அடுத்த அவதாரம் தலைதூக்க தயாராகி விட்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பன்றிக் காய்ச்சலின் இரணடாவது பரிமாணம் இது. இந்த புதிய வகை ஹெச்1 என்1 வைரஸ் காய்ச்சல் உலகின் வட பகுதி நாடுகளில் ஓசைப்படாமல் பரவி வருகிறது. சில நாடுகளில் இந்நோயால் 15 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜப்பானில் மிக கடுமையாகப் பரவிய பன்றிக் காய்ச்சல் குளிர் காலங்களில் உலகின் தென் பகுதி நாடுகளில் வேகமாக பரவியது. இதனால் முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் எடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

    இப்போது, வட பகுதியில் உள்ள நாடுகளில் இப்பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல உடல் ஆரோக்கியமுள்ள இளைய நடுத்தர வயதினர் இந்நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக நுரையீரலைத் தாக்கி சுவாச மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது.  வீரியமிக்க இந்தப் புதுவகை பன்றிக் காயச்சலை போக்க மருத்துவ செலவும் அதிகமாகும்.  இந்தப் புதிய வகை நோய் பரவுவது எப்படி என்பது தெரியவில்லை. எனினும், சுகாதாரமற்ற வாழ்க்கை, ஆஸ்துமா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் இக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது.

    வெப்ப மண்டல நாடுகளில் இது வேகமாகப் பரவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற வைரஸ் காய்ச்சல்களைவிட நான்கு மடங்கு வேகத்துடன் இந்தப் புது வகை பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. பிற வைரஸ் காய்ச்சல்கள் ஆறு மாதங்களில் தாக்கும்.

    இது ஆறே நாட்களில் தாக்கி விடுகிறது. இதன் தாக்குதலைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவதற்கு முன் கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 2,180 பேர் இறந்துள்ளனர். இதற்கான தடுப்பூசிகள் தயாராவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான் கூறினார்.