2009

2009

தாக்குதலுக்குள்ளான இலங்கைத் தூதரகத்தின் சேதங்களுக்கு நட்டஈடு வழங்கத் தயார்: நோர்வே அரசாங்கம்

norwy-slhc.jpgஅண் மையில் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கத் தயார் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவருடன் அமைச்சா; ரிஷாட் சந்திப்பு.

rishad__usambassador.jpgஇலங் கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் பிளேக்,  மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இன்று காலை சந்தித்து உரையாடினார். வடக்கில் நலன்புரி நிலையங்களில் உள்ள பொது மக்களின் தேவைகள் குறித்தும் அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள் பற்றியும் இங்கு கலந்துரையர்டப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். 

வன்முறையுடன் முடிந்தது முதல் கட்ட தேர்தல்- 17 பேர் பலி

india-election.jpgஜார்க் கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் பெரும் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் முதல் கட்ட தேர்தல் வன்முறையுடன் முடிந்தது. 124 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நக்சலைட்கள் தங்களது கைவரிசையை சற்று பலமாகவே இன்று காட்டி விட்டனர்.

சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 17 பேர் உயிரிழந்தனர்.

கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தேர்தல் அமைதியாக நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பீகாரிலும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. இங்கு குறைந்த அளவிலான வாக்குப் பதிவே இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. இரு்பினும் கேரளாவில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

நக்சலைட்டுகள் ஆதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் 3 மணியளவிலேயே வாக்குப் பதிவு முடிந்து விட்டது. பிற தொகுதிகளில் 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது. முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடரும் செருப்பு கலாசாரம் – அத்வானி மீதும் செருப்பு வீச்சு

advanil000.jpgபாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார். கத்னி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால்,  அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை. பிடிக்காதவர்கள் மீது ஷூ,  செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி விட்டது. ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசப்பட்டது போல இப்போது இந்தியத் தலைவர்கள் மீதும் ஷூக்கள் வீச்சு தொடர் கதையாகியுள்ளது.

முதலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஷூ வீசினார், இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் நவீன் ஜிந்தால் மீது ஒரு முதியவர் செருப்பை வீசினார். இப்போது அத்வானி மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ப.சிதம்பரம் மீது காரைக்குடியில் உருட்டுக்கட்டை வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து புலிகளுக்கு மனவுறுத்தல்கள் கிடையாது -ஹிந்து பத்திரிகை கருத்து

the_hindu.jpgதாம் அழிவை நோக்கிச் செல்வதை அறிந்தும் மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் கனரக ஆயுதங்களுடன் நடமாடி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது தொடர்பில் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு மனவுறுத்தல்கள் எதுவும் கிடையாது என இந்தியாவின் ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதென இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தைப் பாராட்டும் வகையில் தீட்டப்பட்டிருந்த ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மனிதநேயத்துக்கான மோதல் தவிர்ப்பு வலயம் எனும் கருதுகோலையாவது அங்கீகரிக்க மறுப்பது,  அவர்கள் தங்களை எந்த மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்கின்றார்களோ அம்மக்களின் உயிர்கள் மற்றும் நலன்கள் என்பன தமது இந்தப் போலி விடுதலைப் போராட்டத்தில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

புலிகளின் பிடியிலிருந்து கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்த தமிழ் மக்களின் தொகை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இப்புள்ளி விபரம் தமிழ் மக்கள் அவர்களின் சுய விருப்பத்தின்பேரில் தம்மோடு இருப்பதாக புலிகள் கூறிவரும் பொய்ப் பிரச்சாரத்தின் யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேற விரும்பும் சிவிலியன்களை எந்தவித தடைகளுமின்றி தப்பிவர அனுமதிக்குமாறு புலிகளை நிர்ப்பந்திப்பதுமே தற்போதுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குரிய ஒரே தீர்வாகும் என்றும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாநகர சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

16042009.jpgகிழக்கு மாகாணசபை நாளை கொண்டு வரவுள்ள உள்ளூராட்சி சபை விசேட சட்ட மூலத்திற்கெதிராக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து வெளிநடப்புச் செய்ததுடன் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.

குருநகர் மீன் சந்தை 20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பம்!

f-m.jpgயாழ்ப்பாணம் குருநகர் மீன் சந்தை 20 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 வருட காலமாக இந்த சந்தை மூடப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் இதனை தங்களின் முகாமாகப் பயன்படுத்தி வந்தனர்.

பொதுமக்கள் பாவனைக்காக இந்தச் சந்தை நேற்று உத்தியோக பூர்வமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டதாக யாழ் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் மீன்பிடி அமைச்சு மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மீன்பிடி சங்கப் பிரதிநிதிகள்ää அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ் கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த 1424 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

bandula_gunawardena.jpgஇவ்வருட ஆரம்பம் முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மூலம் கூடுதல் விலைக்கு அத்தியவசிய பாவனைப் பொருட்களை விற்பனை செய்த  1424 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் இறுதி வரை 974 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மட்டும் 450 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கொழும்பு புறக்கோட்டையில் 180 அரிசி மூடைகளும் கண்டியில் 44 அரிசி மூடைகளும் சவீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றங்களுக்கான விடுமுறை முடிவுற்றதும் குறிப்பிடப்பட்ட 450 வாத்தகர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நோர்வே தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

protest_norvey.jpgகொழும்பு, வோர்ட் பிளேசில் உள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. ஒஸ்லோவிலுள்ள இலங்கை தூதரகம் தாக்கி சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தரமுல்ல சீலாரத்ன தேரோ தலைமையில் இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைக் கண்டிப்பதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தும் பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கிளிநொச்சிக்கு விஜயம்

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அவருடன் படை உயரதிகாரிகளும்  கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.

கிளிநொச்சியில் படையினருடன் புத்தாண்டு நிகழ்வுகளில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முப்பது வருடங்களின் பின்பு இலங்கை அரசுத் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தமது விஜயத்தின்போது, கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து படையினருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.