கொழும்பு, வோர்ட் பிளேசில் உள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. ஒஸ்லோவிலுள்ள இலங்கை தூதரகம் தாக்கி சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தரமுல்ல சீலாரத்ன தேரோ தலைமையில் இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைக் கண்டிப்பதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தும் பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.