இலங் கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் பிளேக், மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இன்று காலை சந்தித்து உரையாடினார். வடக்கில் நலன்புரி நிலையங்களில் உள்ள பொது மக்களின் தேவைகள் குறித்தும் அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள் பற்றியும் இங்கு கலந்துரையர்டப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.