யாழ்ப்பாணம் குருநகர் மீன் சந்தை 20 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 வருட காலமாக இந்த சந்தை மூடப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் இதனை தங்களின் முகாமாகப் பயன்படுத்தி வந்தனர்.
பொதுமக்கள் பாவனைக்காக இந்தச் சந்தை நேற்று உத்தியோக பூர்வமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டதாக யாழ் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் மீன்பிடி அமைச்சு மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மீன்பிடி சங்கப் பிரதிநிதிகள்ää அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை யாழ் கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.