2009

2009

இலங்கை மாணவர்கள் சிங்கப்பூரில் ஏமாற்றப்படுகின்றனர். – இலங்கைத் தூதுவர்.

jayathri-samarakone.jpg இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு கல்வி கற்பதற்கென கொண்டுவரப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டுள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவர் ஜயத்திறி சமரக்கோண் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பத்திரிகைகளுடாக இலகுவாக விளம்பரம் செய்யப்படும் போது ஏராளமான மாணவர்கள் போலி ஏஜன்டுகளை நாடுகின்றனர். அவ்வாறு இவர்களது வலையில் சிக்கும் மாணவர்கள் இலகுவாக சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படுகின்றனர். சிங்கப்பூரினுள் இலங்கைப் பிரஜைகள் வர வீசா தேவையில்லை என்ற சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படும் மாணவர்கள் முதலில் ஆங்கில கற்கை நெறிகளுக்காக அனுப்பபடுவதுடன் அதே நேரத்தில் பகுதி நேர வேலைகளுக்கும் அமர்த்தப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் வேலை செய்வதானல் அனுமதி வேண்டும். ஆனால் எவ்வித அனுமதியுமில்லாமல் வேலைக்கமர்த்தப்பட்ட பல மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன் அவ்வாறு ஆர்வம் உள்ளவர்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அன்றில் சம்பந்தப்பட்ட கல்லூரியை நேரடியாக தொடர்பு கொள்வது சிறந்தாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் நம்பியார் இன்று ஜனாதிபதியைச் சந்தித்தார்

vijaynambiar.jpg இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூனின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவைச் சந்தித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட விஜய் நம்பியார் நேற்று மாலையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், வெளிவிவகார அமைச்சரையும் அவர் சந்தித்தார். பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் நிலைமைகள் மற்றும் வவுனியாவிலுள்ள முகாம்களிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் வெளியேற அனுமதிக்கப்படாமை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிடும் : விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgமக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார். கூட்டணி அமைக்க காலங்கடந்து பாஜக முயற்சித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார். இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது :

அதிமுக கூட்டணிக்காக மற்றவர்களை காத்திருக்க வைத்துவிட்டு காலங்கடந்து கூட்டணி அமைக்க பாஜக பேச்சு நடத்தி வருகிறது. சரத்குமார் பாஜக கூட்டணிக்கு வருமாறு என்னை அழைத்தார். கூட்டணி குறித்து சரத்குமார், கார்த்திக், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பாஜகவுடன் சேர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்துடன் இணைந்துள்ளது. நான் என் பாதையில் தேர்தலை சந்திக்க உள்ளேன்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்றார் டி. ராஜேந்தர்.

மருத்துவமனையிலும் தொடரும் சாகும்வரையிலான உண்ணாவிரதம்

ampala-vanar.jpgவன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் புதன்கிழமை காவல்துறையினரால் பலாத்காரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் மருத்துவமனையிலும் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ஒரு துணிகரமான தலைவர்

karuna_amman.jpg கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு துணிச்சல் மிக்க தலைவர் என சமூக நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சிப் பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்தமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வாகும். ஏனெனில் இதுவரை காலமும் நாட்டின் எந்தவொரு ஜனாதிபதியும் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்யவில்லை. ஆனால் எமது ஜனாதிபதி புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கள நிலைவரங்களை அவதானித்ததோடு, அங்குள்ள படை வீரர்களுடன் சந்தோஷமாக புத்தாண்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார். இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

ஏனெனில் இன்று அங்குள்ள படையினர் தமது உறவுகளையும் குடும்பங்களையும் பிரிந்த நிலையில் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இணைந்து புத்தாண்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

புலிகளிடமிருந்து வாகரைப் பிரதேசம் கைப்பற்றப்பட்டபோது கூட ஜனாதிபதி அங்கும் நேரடியாக விஜயம் செய்திருந்தார். இப்போது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளார். இவ்வாறான பல திருப்புமுனைகளை அவர் ஏற்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள் மூலம் எதிர்காலத்தில் வடக்கிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேசங்களை நேரடியாகச் சென்று பார்க்கும்போதுதான் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

தற்போது வன்னிப் பிரதேசம் முற்றாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வடக்கின் வசந்தம் எனும் திட்டத்தினூடாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் விரைவில் அப்பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக மாறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 இல் மே மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலைபற்றி ஜெயின் ஆணைக்குழு விசாரணை நடத்தியது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி, அறிவு ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

ஜெயின் ஆணைக்குழு விசாரணை 1998 இல் தான் முடிந்தது. அதற்கு முன்பே 7 பேருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் தண்டனை விதித்துவிட்டது. ஜெயின் ஆணைக்குழு அறிக்கையில் புகார் கூறப்பட்ட சந்திராசுவாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை விட்டுவிட்டார்கள். எனவே தண்டனை பெற்ற நளினி, முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

bharathiraja1.jpgஇலங்கை போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை.என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் -வைகோ

india-election.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ம.தி.மு.க.பொதுச் செயலரும் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான வைகோ தெரிவித்தார். ராஜபாளையம் அடுத்த சிவலிங்காபுரத்தில் தனது தேர்தலில் பிரசாரத்தை புதன்கிழமை துவக்கி வைகோ பேசியதாவது;

இலங்கை அரசு அறிவித்த இருநாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பாகும், இந்த இரு நாட்களில் இலங்கை இராணுவம் காங்கிரஸ் கட்சியின் பேராதரவுடன் ஆயுதங்களைப் பலப்படுத்தியுள்ளது.இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்கவும் உங்களுக்கு சேவை செய்யவும் என்னை வெற்றிபெறச்செய்யுங்கள்.

நதிநீர் இணைப்புத்திட்டத்தை முதன்முதலில் பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறி அந்த மசோதா நிறைவேறச் செய்ததில் எனக்கு முக்கியபங்கு உண்டு. தமிழகத்தில் மின்வெட்டு,உரத்தட்டுப்பாடு போன்றவற்றால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிலேயே தென்தமிழகத்தில் தான் விவசாய நிலங்கள் அதிகம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்.இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

பொலிஸ் அத்தியட்சர் ஜமால்தீனின் கொலை – கல்முனை மாநகர சபையில் அனுதாப பிரேரணை

jamaldeen.jpg மருதமுனையைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சர் எச்.எஸ். ஜமால்தீன் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகுமென கல்முனை மாநகர சபையின் மாதாந்த செயலமர்வில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் அத்தியட்சர் ஜமால்தீனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை ஒன்று செயலமர்வில் முன்மொழியப்பட்டபோது பிரேரணை மீது உரையாற்றிய உறுப்பினர்கள் இக்கருத்தை வெளியிட்டனர்.

மாநகர சபையின் பிரதிமேயர் அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா மேற்படி அனுதாபப் பிரேரணையை முன்மொழிய, தமிழரசுக்கட்சி உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் வழிமொழிந்து சபையில் ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றார் ஈழவேந்தன் ..

eelaventhan_.jpgமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க ஈழவேந்தன் தென்னாபிரிக்கா, டேர்பன் நகரில் அமைந்துள்ள அருட்பாக் கழகத்தில் தனது உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றார். அவரது உடல்நிலை தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளமையும், அவரது தோற்றத்தில் களைப்புத் தன்மையையும் அவதானிக்கக் கூடியவாறு இருந்தது.

கடந்த சில நாட்களில், தமிழின உணர்வாளர் பழ. நெடுமாறான் உள்ளடங்கலாக பலர் இந்தியாவிலிருந்து தொலைபேசி மூலம் அவருக்கு ஆசி வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.  தனது உண்ணா மறுப்பு முயற்சி பயனளிக்காமல் போகவில்லை. தென்னாபிரிக்க அரசியல் வட்டாரத்தில், தமிழ்த் தேசியப் பிரச்சினை எந்தவித தாமதமும் இல்லாமல் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்துநிலை உருவாகியுள்ளது.

அவர்கள் கொடுத்த செய்தி முன்னுரிமைக்காக ஊடகங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என ஈழவேந்தன் குறிப்பிட்டார்.