மருதமுனையைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சர் எச்.எஸ். ஜமால்தீன் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகுமென கல்முனை மாநகர சபையின் மாதாந்த செயலமர்வில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அத்தியட்சர் ஜமால்தீனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை ஒன்று செயலமர்வில் முன்மொழியப்பட்டபோது பிரேரணை மீது உரையாற்றிய உறுப்பினர்கள் இக்கருத்தை வெளியிட்டனர்.
மாநகர சபையின் பிரதிமேயர் அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா மேற்படி அனுதாபப் பிரேரணையை முன்மொழிய, தமிழரசுக்கட்சி உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் வழிமொழிந்து சபையில் ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.