உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றார் ஈழவேந்தன் ..

eelaventhan_.jpgமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க ஈழவேந்தன் தென்னாபிரிக்கா, டேர்பன் நகரில் அமைந்துள்ள அருட்பாக் கழகத்தில் தனது உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றார். அவரது உடல்நிலை தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளமையும், அவரது தோற்றத்தில் களைப்புத் தன்மையையும் அவதானிக்கக் கூடியவாறு இருந்தது.

கடந்த சில நாட்களில், தமிழின உணர்வாளர் பழ. நெடுமாறான் உள்ளடங்கலாக பலர் இந்தியாவிலிருந்து தொலைபேசி மூலம் அவருக்கு ஆசி வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.  தனது உண்ணா மறுப்பு முயற்சி பயனளிக்காமல் போகவில்லை. தென்னாபிரிக்க அரசியல் வட்டாரத்தில், தமிழ்த் தேசியப் பிரச்சினை எந்தவித தாமதமும் இல்லாமல் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்துநிலை உருவாகியுள்ளது.

அவர்கள் கொடுத்த செய்தி முன்னுரிமைக்காக ஊடகங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என ஈழவேந்தன் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • s.s.ganendran
    s.s.ganendran

    உயர் திரு மா கனேகேந்த்திரன் ( ஈழ வேந்தன் ) உங்களின் இந்த்த உண்ணா விரதப்போரட்டம் தொடரவேண்டும் .
    அண்று அமிர்தலிங்கம் உண்ணாவிரதம் இருந்த்தபோது இண்று நீங்கள் தங்களின் தலைவனாக ஏற்றுள்ள பிரபாகரன் அவரது சகாக்களுடன் அவ்விடத்திற்கு செண்று அங்கு உண்ணா விரதத்தில் பங்குகொண்டிருந்த்தவர்களுக்கு பலாத்காரமாக புறுயாணி திணித்ததுபோல் தெ ஆபிரிக்காவில் உங்களுக்கு ஒருவரும் செய்யமாட்டார்கள் எனவே நீங்கள் தொடர்ந்த்தும் உண்ணாவிரத்ம் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    தம்பி திலீபனுக்கு உங்கள் தலைவர் (பிரபாகரன்) சொன்னதுபோல நீங்கள் சாகும்வரை அவ்விடத்தை விட்டு வெளியேறக்கூடாது

    காரணம் நீங்கள் தந்தை செல்வாவினால் காட்சட்டை காந்த்தி என அழைக்கப்பட்டவர் என்பதை மறந்துவிடக்கூடாது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாவம் தெரியாத் தனமாய் தொடங்கிற்றார். இடையிலை கைவிட்டாலும் அவமானம். அதை விட இப்ப மாமனிதர் பட்டம் கிடைப்பதற்கும் சந்ததர்பமில்லை. எல்லாவற்றையும் யோசிக்க எனக்கும் கண்ணைக் கட்டுது.

    Reply