புது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து போர்க்காயமடைந்தவர்கள் உட்பட்ட நோயாளர்களை அரச கட்டுப்பாட்டில் உள்ள வைத்திய சாலைகளுக்கு ஐ.சி.ஆர்.சியின் மனிதாபிமான சேவையின் மூலம் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையில் மேலும் 450 பேர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் இருந்து புதுமாத்தளனுக்கு இன்று காலை சென்றடைந்த கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகவே இந்த நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல் நாளையும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபடும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.