வன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் புதன்கிழமை காவல்துறையினரால் பலாத்காரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் மருத்துவமனையிலும் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
guru
சேலைன் ஏத்திக்கொண்டு சாகும்வரை ‘உண்ணாவிரதம்’ இருக்ககலாம்தானே.
பார்த்திபன்
இது பொய்யான தகவலாகவே இருக்கும். காரணம் சுவிசிலுள்ள அரசோ, பொலிசாரோ இப்படியான செயல்களைத் தொடர்ந்தும் அனுமதிக்கப் போவதில்லை. இதனால் குளுக்கோஸாவது ஏற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் புலிகளும் புலிஆதரவுகளும் தமது பிழைப்பிற்காக இப்படியான கதைகளை கிளப்பவே முயல்வார்கள்.
இதைவிட முக்கியமான விடயம் முன்பு பிரித்தானியாவிலிருந்து சுவிசிற்கு வந்து தீக்குளித்தவரின் குற்றப்பணம் மற்றும் இது சம்பந்தமாக அரசு செய்த செலவுப் பணமாக கிட்டத்தட்ட 65`000 சுவிஸ் பிராங்குகள் சுவிஸ் அரசால் அறவிடப்பட்டுள்ளது. அதுபோல் இன்று தனது சொந்த விளம்பரத்திற்காக உண்ணாவிரதமிருக்கும் அம்பலவாணரின் செயலிற்கும் குற்றப்பணம் அறவிடப்படும். அப்போது அதைக் கட்டுவது அம்பலவாணரில்லை. புலிக்கோசமிடும் முட்டாள்த் தமிழர்களே. இந்தப் பணத்தை வன்னியில் அகதி முகாமில் அவதியுறும் மக்களுக்கு கொடுக்க மனம் வராது. ஆனால் இப்படியான விளம்பர நிகழ்வுகளுக்கு வாரி வழங்குவார்கள்.
thurai
வன்னிமக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட வணங்காமண் எங்கேயென்று, பணம் கொடுத்தவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல முடியாமல் சாகும்வரை உண்ணாவிரதம் போலதான் இருக்கின்ற்து.
துரை
selva
இதுதான் சுத்துமாத்துப் போராட்டம் என்பது ஏனெனில் சாப்பாட போகவில்லை ஆனால் செலைன் உள்ளே போகுதுதானே – வெல்க பலிகளின் பெராட்டம் – தமிழீழம் மலரட்டும்.
navaneethan.s
அம்பலவாணரை ஒருக்கா இன்றைய இலங்கைநெட்.கொம் பார்க்கச் சொல்லுங்கோ. அதில் தலைவரின் அன்பு மகள்……………. உண்ணாவிரதம் இருக்கிறத ரசித்துப் போட்டு உண்ணாவிரதத்தை தொடரச் சொல்லுங்கோ. புதுக்குடியிருப்பு பங்கர்களுக்குள் இருந்து பூதங்கள் கிளம்பத் தொடங்கி விட்டன. பராக்..பராக்….பராக்…
palli
உன்னா விரதம் இருக்கும் நண்பர்களின் உனர்வை பல்லி மதிக்கும். அதேவேளை அவர்களது முட்டாள் தனத்தை எண்ணி கலங்குகிறேன். புதிய வடிவில் கரும்புலிகள் உதயம்.
thevi
ஊரிக்காடு வல்வெட்டித்துறையில் இருந்து வந்து புலி லண்டனில் உண்ணாவிரதம் என படுத்திருக்கிறதாம்………. முதல் விலகிய புலி கள்ளப்பேராம். இப்படி ஐ.நா விற்கு கூப்பிடுவார்கள் என தெரியாமல் தடக்குப்பட்டு நிற்கிறதாம்.
murugan
/உன்னா விரதம் இருக்கும் நண்பர்களின் உனர்வை பல்லி மதிக்கும். அதேவேளை அவர்களது முட்டாள் தனத்தை எண்ணி கலங்குகிறேன்./
இதுவும் ஒரு வகை புலுடாதான் அதாவது சமூக அபிப்பிராயத்திற்கு பயந்து உண்மை தெரிந்திருந்தும் அதை உறுதிபட தெரிவிக்க தயங்குவது. பலர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த உண்ணாவிரதங்கள் சாதிக்கப் போவது ஒன்றுமேயில்லை. யாழ்ப்பாணிகள் மற்றவர்களை பலியிட்டு தமக்கு நோகாமல் நொடியாமல் தமிழ்ஈழம் வேண்டும் என்கிறார்கள்.