ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் 70 ஆம் ஆண்டு நிறைவிற்காக பொலனறுவையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைமையிலான புதிய கூட்டணியொன்றினை உருவாக்குவதற்கு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட உப தலைவர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.