12

12

ஆணி: நோர்வே நக்கீரா

TheNail_TheCrossஆணி

அவன் புனிதமானவனோ?
புண்ணியமானவனோ?
புரட்சிவாதியோ?
மீட்பனோ?
ஆடுகள் மேய்பனோ
யான் அறியேன்

முள்முடிதரித்து
மூன்று ஆணியிலோ
ஐந்து ஆணியிலோ
உயிரை இழந்த கர்த்தா என்பதை
என்வாசல் கதவுகளை உடைத்து
உக்கிரமாய் ஓதக் கேட்டேன்.

குடும்பச் சிலுவையை
சுமந்து கொண்டு
காசுக்கடவுள் அல்லாவிற்கு
சேவை செய்த ஆரியவதிக்கு
சம்பளமாய்
இருபத்திநான்கு ஆணிச்சிலுவை.
சுமப்பதற்கென்றே பிறந்ததா
இந்தப் பெண்ணினம்?

மத்திய கிழக்கில்
மன்னிக்கவும்
மத்திம கிழக்கில்
அல்லாவின் புனித
பொல்லாத பூமியில்
எம்தேசப்பெண் ஒருத்தி
சிலுவை ஏற்றப்பட்டாள்.
மனிதனே அல்லாதவனுக்கு
சேவை செய்த குற்றத்துக்காய்.

கூறான் சுமந்த
குறை மதியர்களால்
கூராணிகளால் அறையப்பட்டாள்
மனித முகங்களில்…..!!
மனித மனங்களில்…..!!!

ஐந்து ஆணியிக்குள்
ஆண்டவனுக்கே அரோகரா
மீண்டாரோ தாண்டாரோ
ஆண்டவனுக்கே தெரியாது.
இருபத்திநான்கு ஆணி ஏறியும்
மீண்டாள்
இலங்கை மீண்டாள்.

இனி
புதிய கூறானோ பைபிளோ
ஆண்டவள் ஆரியவதி என எழுதுமா?
அவள் பெண்ணென்பதால்
மீண்டும் புதையுமா?
சிதையுமா?

யேசுவின் உடலில் ஐந்து ஆணிகள்
பிரித்தது உயிர்
ஆரியவதிக்கோ
இருபத்திநான்கு ஆணிகள்
நாட்டில் மீண்டும் உயிர்த்தாள்
ஈழத்தமிழர் உடல்கள் எங்கும்
எத்தனை இலட்சம் ஆணிகள்
மரித்ததே மானிடம்.
மெனளமாய்
கைகொட்டிச் சிரித்ததே உலகம்.
மானிடம் பேசும் மானிடராலே
மானிடத்திற்கு மரணதண்டனை

ஆணிகளின் பின்னால்
அறைந்து கிடக்கிறன மனிதமும்
மானிடமும்.

சிலுவைகளுடன்
நோர்வே நக்கீரா

வன்னியில் ஒரு இலட்சத்து 25,000 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை

paddy-field.jpgஆரம்ப மாகவுள்ள பெரும்போக செய்கையின் போது வன்னியிலுள்ள ஒரு இலட்சத்து 25,000 ஏக்கர் விளை நிலத்தில் விதைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

வடமாகாண மீள்குடியேற்ற அபிவிருத்தி க்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த சிறுபோகத்தின் போது வன்னியில் 45 ஏக்கர் வயற் காணிகளில் மட்டுமே செய்கை பண்ணப்பட்டது. அடுத்த பெரும் போகத்தில் நாட்டிலுள்ள அனைத்து விளைநிலங்களிலும் செய்கைபண்ணப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கமைய வன்னியில் எஞ்சியுள்ள 80,000 ஏக்கர் விளைநிலங்களும் செய்கை பண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். சிறைச்சாலையிலிருந்து 24 கைதிகள் இன்று விடுதலை

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் 24 கைதி கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ். சிறைச்சாலை அத்திய ட்சகர் சந்தன ஏக்கநாயக்கா தெரி வித்தார்.

20 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

முஸ்லிம் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

school-girls.jpgநாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை (13) திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காகவும் நோன்பு விடுமுறைக்காகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி மூடப்பட்டது. மூன்றாம் தவணை ஆரம்பமாவதற்கு முன்பு சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற வேண்டுமென கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானமும் இடம்பெறுகிறது.

இதேவேளை, க. பொ. த. (உயர்தர) பரீட்சை விடைத்தாள் இரண்டாம் கட்டதிருத்தும் பணிகளும் நாளை 13ம் திகதி இடம்பெறுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இப்பணிகளுக்கென மூடப்படும் பாடசாலைகள் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

யாழ். வடமராட்சியில் 11,000 பேரை மீள்குடியமர்த்தும் பணி ஆரம்பம்

யாழ். வடமராட்சியில் இடம்பெயர்ந் துள்ள சுமார் 11,000 பேரை மீளக் குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  யாழ். இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1092 பேர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் மீளக் குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்களுக்குத் தேவையான தகரங்கள், சீமெந்து, உலர் உணவுகள், சமையல் உபகரணங்கள் என்பன நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மூலமாக இவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டதுடன், உடுத்துறை, சம்பியன்பற்று வடக்கு, சம்பியன்பற்று தெற்கு, ஆழிவளை, வத்துராயன், மருதங்கேணி கிராம சேவகர் பிரிவுகளுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வன்னியில் 10,000 வீடுகள் கட்டும் பணிகள் இருவாரங்களில்

sri-lanka.jpgவடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கென இந்திய அரசின் உதவியுடன் 50,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளை கட்டும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து 10,000 வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் நாளை 13ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் வன்னி மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு பயனாளிகளை தெரிவு செய்யவுள்ளனர். 10,000 வீடுகளில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவ துடன் அங்கவீனமானவர்கள் இரண்டாவதாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணத்துக்கு 5000 வீடுகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 5000 வீடுகள் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

பயனாளிகளை தெரிவு செய்த பின்னர் ஜனாதிபதி செயலணி முழுமையான அறிக்கையை இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கும். அதனைத் தொடர்ந்து துரிதகதியில் வேலைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் யாழ். நகரில் நடைபெறவுள்ளது.

வட மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். மேலும் வன்னி மாவட்டம் உட்பட வட மாகாண அரச அதிபர்கள் உட்பட வட மாகாண அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.