ஆரம்ப மாகவுள்ள பெரும்போக செய்கையின் போது வன்னியிலுள்ள ஒரு இலட்சத்து 25,000 ஏக்கர் விளை நிலத்தில் விதைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
வடமாகாண மீள்குடியேற்ற அபிவிருத்தி க்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
கடந்த சிறுபோகத்தின் போது வன்னியில் 45 ஏக்கர் வயற் காணிகளில் மட்டுமே செய்கை பண்ணப்பட்டது. அடுத்த பெரும் போகத்தில் நாட்டிலுள்ள அனைத்து விளைநிலங்களிலும் செய்கைபண்ணப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கமைய வன்னியில் எஞ்சியுள்ள 80,000 ஏக்கர் விளைநிலங்களும் செய்கை பண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Ajith
A Sinhala President
A Sinhala Governor,
A Sinhala Coordinator
Producers: Poor tamils
Consumers: Rich Sinhalese.